Link copied!
Sign in / Sign up
3
Shares

தலை வாழை பரங்கி இலை பக்கோடா செய்வது எப்படி?

தலை வாழை இலைப்போட்டு விருந்து வைத்து வந்தவரை உபசரித்து வாழ்ந்த காலமது கொஞ்சம் கொஞ்சமாக மலையேற, வெளிநாட்டில் இது போன்ற நம்முடைய கலாச்சாரமானது வளர்ந்துக்கொண்டே இருக்கிறது. அப்படி இருக்க நாம் மட்டும் ஏன் மாடர்ன் உலகம் நோக்கி முழுவதுமாக நகர வேண்டும். அதற்கு நீங்கள் இந்த தலை வாழை பரங்கி பக்கோடா செய்து சாப்பிட்டு சுவையில் மெய் மறந்து மற்றவருடனும் பகிர்ந்துக்கொள்ளலாமே.

தேவையான பொருட்கள்:

பரங்கி இலை -5 இலைகள் 

கடலை மாவு - 1 கப் 

அரிசி மாவு, சோள மாவு - 1 கப் 

வெங்காயம் - 4 

இஞ்சி - சிறிய துண்டு 

பச்சை மிளகாய் -2 

மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி 

தயிர் - 1 தேக்கரண்டி 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை நேரம் - 15 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 5

செய்முறை:

1. சற்று அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், அரைத்த இஞ்சி, பரங்கி இலை, உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும் .

2. அவற்றுடன் தயிரை ஊற்றி நன்கு பிசைந்துகொள்ளுங்கள். 

3.பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon