Link copied!
Sign in / Sign up
243
Shares

தடுப்பூசி அட்டவணை: குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கானது!

Child get vaccinated

உள்ளடக்கம் (In this Article)

ஏன் தடுப்பூசி அவசியம்? (Why Childhood Vaccinations are Important)

தடுப்பூசிகள் பாதுகாப்பானதா? (Are Vaccines Safe?)

குழந்தைக்கு எப்பொழுது தடுப்பூசி போட வேண்டும்? (When Should Your Kid Be Vaccinated?)

தடுப்பூசி அட்டவணை மற்றும் அவற்றின் விலை நிலவரம் (Vaccination chart for babies and kids with Dose/ Price details)

தடுப்பூசியின் பக்கவிளைவுகள் (Side Effects of Vaccines)

குழந்தைக்கு எப்பொழுது தடுப்பூசி போடக்கூடாது? (When Your Kid Should Not Be Vaccinated?)

தடுப்பூசி தடுக்கும் நோய்கள் (Which Diseases Will Your Baby Be Immunized Against?)

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் (Common Vaccines for Children)

நினைவில் கொள்க (Things to Remember)

vaccination for baby

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது என்பது மிக முக்கியமான விஷயம்; ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான தடுப்பூசியை அளித்திருக்க வேண்டும். ஏனெனில் இது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிர்கால வாழ்வு சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். ஆகையால், குழந்தை முதல் சிறுவர்-சிறுமி பருவம் வரை அத்தியாவசியமாக, அவசியமாக போட வேண்டிய தடுப்பூசிகள் என்னென்ன, ஏன் அவற்றை போட வேண்டும்? என்னென்ன நோய்கள் தடுக்கப்படும், என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படலாம் என அனைத்தையும் குறித்து இந்த பதிப்பில் படித்தறியுங்கள்..! 

ஏன் தடுப்பூசி அவசியம்? (Why Childhood Vaccinations are Important)

தாயின் கருவில் கரு உருவாக்கி, இந்த பூமியில் ஜனிக்கும் போது, கருவிற்கு எந்த பலமும், எந்த ஆற்றலும் இருக்காது; அது தோலும், எலும்பும், உயிரும் கொண்ட ஒரு உயிராகவே இந்த பூமியில் பிறப்பெடுக்கிறது. அப்படி குழந்தைகள் பூமியில் பிறக்கையில், அவர்கள் உடல் எல்லாவித நோய்க்கிருமிகளின் தொற்றுகளுக்கும் ஆளாகக் கூடிய வண்ணம் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கும். 

தடுப்பூசி ஏன் அவசியம் என்ற கேள்விக்கு, நோய் எதிர்ப்பு சக்தி என்ற விடையையே நம்மால் அளிக்க இயலும். அதாவது, குழந்தைகளோ பெரியவர்களோ குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருந்தால், அவர்கள் எளிதில் நோய்த்தொற்றுகளால் தாக்கப்படலாம். 

baby getting injected

ஆகவே, குழந்தைகளை எந்தவித நோய்த்தொற்றுகளும் தாக்காமல் இருக்க, குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ, அவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். அதுவும் முக்கிய நோய்களான polio - போலியோ, measles - மேசல்ஸ், rubella - ரூபெல்லா, rotavirus - ரோடா வைரஸ், mumps - மெம்பிஸ், smallpox - சின்னம்மை - இவற்றைத் தடுக்க கட்டாயம் தடுப்பூசி அவசியம்.

தடுப்பூசிகள் பாதுகாப்பானதா? (Are Vaccines Safe?)

தடுப்பூசிகள் பாதுகாப்பானது தானா என்ற குழப்பம் உங்களுக்குள் இருந்தால், அதை முதலில் மனதில் இருந்து தூர தூக்கி எறியுங்கள்; ஏனெனில் நோய்களை உண்டாகாமல் தடுக்க போடப்படும் தடுப்பூசிகள் என்றும் நோயை ஏற்படுத்துபவையாக இருக்க முடியாது. 

ஆனால், தடுப்பூசி போட்டுவிட்டால் போதும் என் குழந்தை 100 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்துவிடும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால், அது தவறு. குழந்தையை நீங்கள் பத்திரமாக பாதுகாத்து, பராமரித்து, பாசம் காட்டி வளர்க்க வேண்டும். தடுப்பூசிகள் குழந்தைகளின் வாழ்வின் முதல் கட்டத்தை நோய் நொடியற்றதாக, ஆரோக்கியமானதாக மாற்றவே உதவும். 

thaduppoosi

மேலும் ஒருமுறை பயன்படுத்திய தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்துவது அல்லது நோய்கிருமிகள் தாக்கிய தடுப்பூசியை பயன்படுத்துவது போன்றவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி புதிது தானா என்பதை பெற்றோரானா நீங்கள் சோதித்த பிறகே, குழந்தைக்கு போட அனுமதிக்க வேண்டும்.

மேலும் படிக்க: குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்: ஒரு A-Z வழிகாட்டி 

குழந்தைக்கு எப்பொழுது தடுப்பூசி போட வேண்டும்? (When Should Your Kid Be Vaccinated?)

குழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எட்டும் வரை, ஒரு குறிப்பிட்ட வயதை, சரியான பருவத்தை அடையும் வரை அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் எப்பொழுது, எந்த வயதில், என்ன தடுப்பூசியை போடா வேண்டும், அவற்றின் விலை நிலவரம் என்னவாக இருக்கும் என்பது குறித்து சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

vaccinated mark

தடுப்பூசி அட்டவணை மற்றும் அவற்றின் விலை நிலவரம் ( Vaccination chart for babies and kids with Dose/ Price details)

இந்த அட்டவணையில், எந்த தடுப்பூசி எந்த வயதில் குழந்தைக்கு போடப்பட வேண்டும் மற்றும் எந்த அளவில் அளிக்கப்பட வேண்டும், அவற்றின் விலை நிலவரம் என்ன என்பது குறித்து தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போடப்படும் தடுப்பூசி எந்தெந்த நோய்களை வராமல் தடுக்கும் என்ற அத்துணை தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளன. படித்து பயனடையவும். இந்த அட்டவணையை தேவையென்றால், பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும். 

Vaccination Chart

Thaduppoosi attavanai

தடுப்பூசி அட்டவணை

Vaccination chart for kids

தடுப்பூசியின் பக்கவிளைவுகள் (Side Effects of Vaccines)

தடுப்பூசியினால் எந்தவித பாதிப்பும் பெரும்பாலும் நேராது; ஆனால், இவை மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக இருக்கும். அதுவும் பச்சிளம் குழந்தைகளுக்கு சொல்லவே தேவையில்லை; மிகுந்த வலியை ஏற்படுத்தும். இந்த வலியை குழந்தைகளின் உடல் தங்க முடியாததால், காய்ச்சல், குளிர்காய்ச்சல், ஒவ்வாமை, நடுக்கம், பிக்ஸ் போன்றவை ஏற்படலாம்; ஆனால், இவை ஏற்படுவது மிகச்சிலருக்கே! நூறில் 10 சதவீத குழந்தைகளுக்கே.. இது போன்ற பக்க விளைவுகள் குழந்தையின் வயது மற்றும் ஆரோக்கிய வீதம் இவற்றை பொறுத்து மாறுபடும்.

இந்த பக்க விளைவுகள் பெரும்பாலும், குழந்தைகளின் முதல் தடுப்பூசியின் போதே ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதன்பின் குழந்தையின் உடல், பெற்றோர் அளிக்கும் ஆரோக்கிய உணவுகளால், குழந்தைகள் பலம் பெற்றுவிடுவதால், குழந்தைகள் அடுத்தடுத்து போடப்படும் தடுப்பூசிகள் ஏற்படுத்தும் வலியை தாங்கும் வலிமை பெற்றிடுவர்.

குழந்தைக்கு எப்பொழுது தடுப்பூசி போடக்கூடாது? (When Your Kid Should Not Be Vaccinated?)

குழந்தைகள் தீவிர காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால் தாக்கப்பட்டிருந்தால், அப்பொழுது தடுப்பூசி போடுவது என்பது நல்லதல்ல; மேலும் குழந்தைகள் எவ்வித ஆரோக்கிய சுகவீனம் கொண்டிருந்தாலும், அப்பொழுது தடுப்பு ஊசி போடாமல் இருப்பது நல்லதே! குழந்தைகளுக்கு எப்பொழுது, என்ன ஊசி போட்டாலும் சரியான மருத்துவ ஆலோசனைக்கு பின் அதை செய்வது நல்லது.

குழந்தைகள் என்னென்ன நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தடுப்பூசி தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இங்கு அளித்துள்ளோம். படித்து பயனடையுங்கள் தோழியரே! பெற்றோரே!

முந்தைய தடுப்பூசி - முன்பு போடப்பட்ட தடுப்பூசியால், குழந்தைகள் ஏதேனும் பாதிப்பு அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தால், அது முற்றிலும் குணமாகும் வரை அடுத்த தடுப்பூசி போடாமல் தவிர்ப்பது நல்லது

காய்ச்சல் - உங்கள் குழந்தைக்கு 38 டிகிரிக்கு மேலாக காய்ச்சல் இருந்தால், அப்பொழுது மருத்துவ ஆலோசனை கொண்ட பின்னரே, தடுப்பூசி போட வேண்டும்

அதிக டோஸ் ஊசிகள் - குழந்தைக்கு அதிக டோஸ் உள்ள ஊசிகள் முன்பு போடப்பட்டிருந்தால், அவற்றின் தீவிரம் குறைந்து, முற்றிலும் நீங்கும் வரை பொறுத்து, அடுத்த தடுப்பூசியை போடுவது நல்லது

varieties of vaccination

குறைந்த எதிர்ப்பு சக்தி - குழந்தைகள் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி அல்லது தடுப்பூசியை தங்க முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தால், அவர்களுக்கு அந்த நிலையில் தடுப்பூசி போடக்கூடாது

எயிட்ஸ் உள்ள குழந்தைகள் - எயிட்ஸ் உள்ள குழந்தைகளுக்கு அவர்களுக்கு ஏற்ற சரியான தடுப்பூசிகளை, சரியான நேரத்தில் மருத்துவர் ஆலோசனையுடன் அளிக்க வேண்டும் 

ஆஸ்துமா -  ஆஸ்துமா உள்ள குழந்தைகள் அல்லது அது தொடர்பான பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; இந்த மாதிரியான பாதிப்புகள் இருக்கும் போது அதற்கேற்ற மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு தடுப்பூசி போடுவது சிறந்தது 

முட்டை ஒவ்வாமை - சில குழந்தைகளுக்கு முட்டை உண்பதால் ஏதேனும் ஒவ்வாமை உணர்வு தோன்றினால், அவர்களுக்கு தடுப்பூசி போடும் முன் சரியான மருத்துவ ஆலோசனை செய்ய வேண்டும்; ஏனெனில் பல தடுப்பூசி மருந்துகள் முட்டையால் தயாரிக்கப்படுகின்றன.

தடுப்பூசி தடுக்கும் நோய்கள் (Which Diseases Will Your Baby Be Immunized Against?)

தடுப்பூசி போடப்படுவதால், குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் தடுக்கப்படும் நோய்கள் பற்றி இங்கு படித்தறிவோம் வாருங்கள்! கீழே என்னென்ன நோய்கள் எதனால் ஏற்படுகின்றன மற்றும் எந்த நோய்களை எல்லாம் தடுப்பூசிகள் தடுக்கின்றன என்று அளிக்கப்பட்டுள்ளது. என்னென்ன நோய்க்கு என்ன தடுப்பூசி என்பது, மேலே கொடுக்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டவணையில் உள்ளது. பின் வரும் பாதியிலும் இது குறித்த தகவல்களை நாம் படித்தறியலாம்.!

vaccination killing virus

Diphtheria - டிப்திரியா: பாக்டிரியா நுரையீரலை தாக்கி, அதை சேதப்படுத்துவதால், மூச்சுத்திணறல் ஏற்படும். 

Tetanus - டெட்டனஸ்: மண்ணில், தூசியில் உள்ள பாக்டிரியவால், தோல் மற்றும் தசைகளில் ஒருவித பிடிப்பு மற்றும் அசௌகரியம் ஏற்படும்; வாயில் உள்ள தசைகளிலும் பிடிப்பு ஏற்பட்டு, எதையும் விழுங்குவதிலேயே சிரமம் ஏற்படும்.

Polio - போலியோ: இது மூளை மற்றும் தண்டுவட நரம்புகளை பாதித்து, ஒருவரை முடமாக்கி படுத்தப்படுக்கை ஆக்கிவிடும்.

Hepatitis A - ஹெப்பாடிட்டீஸ் A: கல்லீரலை தாக்கும் ஒரு வைரஸ் தொற்று; இது பெரும்பாலும் நீர் மற்றும் உணவு மூலம் பரவும். 

Hepatitis B - ஹெப்பாடிட்டீஸ் B: கல்லீரலை தாக்கும் ஒரு வைரஸ் தொற்று. 

Rotavirus - ரோடா வைரஸ்: இது வயிறு மற்றும் குடல் பகுதிகளில் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்; இது வைரசால் ஏற்படக்கூடியது. மேலும் இது இரைப்பை குடல் அழற்சி என்றும் அறியப்படுகிறது.  

Measles - மேசல்ஸ்: இது வைரஸ் தொற்றால், சளியாக ஒருவருக்கு தொடங்கி, உடல் முழுதும் தடுப்புகளை ஏற்படுத்திவிடும்.

Mumps - மும்ப்ஸ்: இது வைரசால் ஏற்பட்டு, முதலில் காய்ச்சல், தலைவலி, தசை பிடிப்பு என இவற்றை ஏற்படுத்தி, பின் உடல் முழுதும் வீக்கங்கள் ஏற்படத் தொடங்கும்.

Rubella - ரூபெல்லா: தடுப்புகள் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும் ஒரு வைரசால் ஏற்படும் நோய்.

Meningitis - மெனின்ஜிடிஸ்: இது மூளை மற்றும் தத்துவத்தை சுற்றியுள்ள உறைகளில் எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். 

baby seeing vaccination

Haemophilus Influenzae Type B - இது குழந்தைகளை தாக்கக்கூடிய கொடிய நோய்; மூளைச்சாவு போன்ற கொடிய நோய்களை உருவாக்கும்.

Chicken Pox - சின்னம்மை:  இந்த நோய் அனைவரையும் தாக்கக்கூடிய ஒன்று; இது உடல் முழுதும் தடுப்புகளையும், அரிப்பையும் ஏற்படுத்தும்.

Tuberculosis - டியூபர்குளோசிஸ்: நுரையீரலை பாதிக்கக்கூடிய நோய்; இருமல், தும்மல் மூலம் பரவக்கூடியது.

Whooping Cough (Pertussis) - பெர்டிசிஸ்: மிகவும் அதிகமான இருமல், மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்தி, தீவிர மூச்சு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

மேலும் அறிய: இயற்கையின் முதல் தடுப்பூசி

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் (Common Vaccines for Children)

இந்தியாவில், குழந்தைகள் பிறந்தது முதல் வளரும் பருவம் வரை, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள் மற்றும் அந்த தடுப்பூசிகள் தடுக்கும் நோய்கள் குறித்த சிறு விளக்கங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1. BCG (Bacillus Calmette-Guerin) – இது Tuberculosis - டியூபர்குளோசிஸ் எனும் நோயைத் தடுக்கும்.

2. DPT மற்றும் DTaP– இது Pertussis - பெர்டிசிஸ், Diphtheria - டிப்திரியா, Tetanus - டெட்டனஸ் போன்ற நோய்களைத் தடுக்கும்.

3. OPV (Oral Polio Vaccine) –  இது Polio - போலியோ எனும் கொடிய நோயைத் தடுக்க உதவுகிறது.

chicken pox in baby

4. Hepatitis A – இது Hepatitis A எனும் நோயைத் தடுக்க உதவும்.

5. Hepatitis B – இது Hepatitis B எனும் நோயைத் தடுக்க உதவும். 

6. Pneumococcal Conjugate – இந்த தடுப்பூசி Meningitis - மெனின்ஜிடிஸ், Pneumonia - நிமோனியா போன்ற நோய்களை தடுக்கும்.

7. MMR – இது Rubella - ரூபெல்லா, Mumps - மும்ப்ஸ், Measles - மேசல்ஸ் போன்ற நோய்களைத் தடுக்கும்.

8. Japanese Encephalitis (JE) –  இது Japanese Enciphalitis எனும் நோயைத் தடுக்க உதவும்.

9. Varicella – Chicken Pox - சின்னம்மை எனும் நோயைத் தடுக்க இந்த ஊசி உதவும்.

HPV Vaccination

நினைவில் கொள்க (Things to Remember)

எந்தவொரு ஊசி அல்லது மாத்திரைகளானாலும் அதை மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே குழந்தைக்கு அளிக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நல  விஷயத்தில், மருத்துவ ஆலோசனையின்றி எந்தவொரு முடிவும் நீங்கள்தன்னிச்சையாக எடுப்பது நல்லதல்ல. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான சமயத்தில், சரியான தடுப்பூசியை குழந்தைகளுக்கு போட்டுவிட வேண்டும்; மேலும் தடுப்பு ஊசி போடுவதற்கான மற்றும் போட்ட பின்பு குழந்தையை சமாதானப்படுத்த தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் முன்பே முன்னெச்சரிக்கையுடன் செய்து முடித்திருக்க வேண்டும்.!

kid's fear of vaccination
Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon