Link copied!
Sign in / Sign up
82
Shares

செட்டிநாடு ஸ்பெஷல்: பால் பணியாரம் செய்வது எப்படி?

 பால் பணியாரம் என்பது செட்டிநாடு ஸ்பெஷல் உணவாகும்; தேங்காய்ப்பால் மற்றும் பசும்பாலில் அளவான சர்க்கரை கலந்து ஏலக்காய்/குங்குமப்பூ வாசனையோடு, பாலில் ஊறிய அழகான வெள்ளை பூ போல சுவையாக இருக்கும், இந்த பால் பணியாரம். இந்த ஸ்பெஷல் பால் பணியாரத்தை, செட்டிநாடு ஸ்டைலில் செய்வது எப்படி என்று படித்தறிவோம்..! 

தேவையான பொருட்கள்!

பச்சரிசி- 1 கப்/ உளுந்து – 1 கப்/ உப்பு - 1/2 தேக்கரண்டி/ தேங்காய் பால் - ஒரு முடி பால்-2 கப்/ காய்ச்சிய பசும்பால்– 2 கப்/ சர்க்கரை - 3.4 கப் அல்லது தேவைக்கேற்ப

செய்வது எப்படி?

பச்சரிசி மற்றும் உளுந்து இரண்டையும் நன்கு கழுவி 2 மணி நேரம் வரை ஊற வைத்து, விழுதாக தண்ணீர் தெளித்து, வடைக்கு மாவு ஆட்டுவது போல் அரைக்கவும்; அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். காய்ச்சிய பசும்பால் மற்றும் தேங்காய் பால் இரண்டையும் ஒன்றாக சீனி சேர்த்து கலந்து தயாராக்கவும். 

வாணலியில் எண்ணெய்யை ஊற்றி, அது சூடானதும், அரைத்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, இளம் பொன்னிறம் வரும்வரை நன்றாக வேக விட்டு பொரித்தெடுக்கவும். 

ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, பொரித்த பணியாரத்தை இந்நீரில் 3 நிமிடங்கள் வரை போட்டு எடுத்து, நீரை நன்கு வடிகட்டி, இந்த பணியாரத்தை கலந்த பாலில் சேர்த்து நன்றாக ஊற வைத்து, அதில் குங்குமப்பூ, அல்லது ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon