Link copied!
Sign in / Sign up
2
Shares

சிக்கன் கீமா வடை: குழந்தைகளுக்கு பிடித்தமானது!

சிக்கன் என்றாலே குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம்; அதிலும் சிக்கனை ஒரு புதுவித முறையில் சமைத்துக் கொடுத்தால், குழந்தைகள் அடையும் உற்சாகத்திற்கு அளவே இருக்காது. ஆகவே, குழந்தைகளுக்கு பிடித்த சிக்கனை ஒரு புதுவித முறையில் சமைக்க உதவும் ஒரு ருசியான ரெசிபி பற்றி இந்த பதிப்பில் படித்தறிவோம்..! 

தேவையான பொருட்கள்!

சிக்கன் கீமா - 200 கிராம்/ சின்ன வெங்காயம் - 50 கிராம்/ கரம் மசாலா - 1 கரண்டி/ இஞ்சி, பூண்டு விழுது - அரை கரண்டி/ உப்பு - தேவையான அளவு/ பிரட் தூள் -150 கிராம்/ முட்டை - 1/ எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை!

ஒரு பாத்திரத்தில் சிக்கன் கீமா, கரம் மசாலா தூள், இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து, வடை அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக அடித்து கொள்ளவும்; ஒரு தட்டில் பிரட் தூளை எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் தயாரித்த உருண்டைகளை முட்டை கலவையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி எடுத்து, எண்ணெயிலிட்டு பொரித்து எடுக்கவும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon