Link copied!
Sign in / Sign up
1
Shares

சாமி - 2 டிரைய்லர் தள்ளி போக இது தான் காரணமா! ஆச்சரியத்தில் விக்ரம் ரசிகர்கள்...

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வலம் வருபவர் தான் நம்ம சியான் விக்ரம். எங்கே செல்லும் பாதை என இன்றுவரை சினிமாவில் பலவித புதிய முயற்சிகளால் ஹாலிவுட் திரைப்பட உலகினரையே திரும்பி பார்க்க வைத்தவரும் கூட. இவர் நடித்த திரைப்படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ., கண்டிப்பாக நடிப்பின் கடினமும், ஈடுபாடும் காணப்படும் என்பதே உண்மை. எத்தகைய கடினமான ஷாட்களையும் அசால்ட்டாக நடித்து சிக்ஸர் அடிப்பதில் இவரை மிஞ்ச யாருமே இல்லை. திரைத்துறைக்கு சவாலாக விளங்கும் நம்ம சியானின் அடுத்த திரைப்படம் 2003 இல் வெளிவந்து ஹரியின் இயக்கத்தில் பொறி பறக்க போலீஸ் ரவுடியாக நடித்த சாமியின் இரண்டாம் பாகம் தான். இத்திரைப்படத்தை ஹரி இயக்க, கீர்த்தி சுரேஷ், பாபி சின்ஹா, இளைய திலகம் பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். 

சமீபத்தில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற, விக்ரமை காவல் தெய்வம் போல் ஹரி சித்தரித்து காட்சியை வெளியிட்டிருந்தார். அதாவது போலீஸ் என்பவர்கள் பொது மக்களுக்கு சேவை செய்யும் காவலனாக எந்த எதிர்பார்ப்புமின்றி வலம் வர வேண்டுமென்பதை மோஷன் போஸ்டர் உணர்த்துகிறது.

நம்ம சியான் விக்ரம் அரிவாளுடன் சாலை ஒர கல்லில் அமர்ந்திருக்க, அக்கல்லின் ஒரு புறம் திருநெல்வேலி என்றும் இன்னொரு புறம் புதுடெல்லி என்றும் எழுதி இருக்கிறது. இதன் மூலமாக திரைப்படம் திருநெல்வேலி முதல் டெல்லி நோக்கி பயணிக்கும் கதையாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஹரி திரைப்படம் என்றாலே கேமரா கூட கண நேரத்தில் வேகமாக பயணிக்கும். அப்படி இருக்க, மைல்களை கடந்து கதை பயணிப்பதில் ஏன் ஆச்சரியம் எழ போகிறது நமக்கு.

சியான் விக்ரமுக்கு ஏதாவது கெட்டப் மாற்றியே ஆக வேண்டும். இல்லையேல், இரவில் அவருக்கு தூக்கம் வராதாம். இதை ஒரு முறை அவரே கூறி இருக்கிறார். "ஐ" திரைப்பட சூட்டிங்க் போது அவர் வீட்டிலுள்ளவர்களுக்கே விக்ரமை அடையாளம் தெரியவில்லையாம். அப்படி இருக்கும்போது தமிழ் படம் சிவா மாதிரி ஒரு மரு வைத்தாவது விக்ரம் தோன்றுவது புதிது ஒன்றுமல்ல. அந்த வரிசையில் விக்ரமின் சாமி - 2 கெட்டப் என்பது நானும் மதுரைக்காரன் தான்டா என்பது போன்ற வீரம் பேசும் மீசை தான்.

எப்படியும் திரைப்படம் திருநெல்வேலியை சுற்றி நடக்கும் கதை என்பதால் அவர்களுடைய வீரமும், தமிழனின் மன ஈரமும் இல்லாமலா போய்விடும். அதனால் தான் தூத்துக்குடி ஸ்டெரிலைட் துப்பாக்கி சூடு படுகொலை காரணமாக டிரைய்லர் தேதி தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக படக்குழு தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.

மேலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன் கூறுகையில், இது கொண்டாட்டத்துக்கான நேரமல்ல. எனவே டிரைய்லர் தேதியை சற்று தள்ளி வைக்கிறோம் என அறிவித்திருந்தார். அதனால், சியான் விக்ரமின் ரசிகர்களும், சாமி திரைப்பட ரசிகர்களும் பொறுமை காத்திட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். இந்த தருணம் தூத்துக்குடியில் உள்ளவர்களுக்காக நாம் பிரார்த்திக்க வேண்டிய தருணமெனவும் தன் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆதரவையும் அவர் பதிவு செய்திருந்தார். 

ஏற்கனவே, சாமி இரண்டாம் பாக மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்று 3 மில்லியன் பார்வையாளரை யூ-டியூப்பில் பெற்றிருக்கிறது. இந்த ஒரு வீடியோ ஏற்படுத்திய எதிர்பார்ப்பின் அளவு என்பது டிரைய்லருக்கு பல மடங்கும் பெருகி இருக்கிறது என்பதே உண்மை.

உங்களை போல் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நம்ம சியானை திரையில் காண...

நன்றி!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon