Link copied!
Sign in / Sign up
7
Shares

சம்மர் ஸ்பெஷல்: மாங்காய் குழம்பு செய்வது எப்படி?

கோடைகாலம் என்றாலே, நம் நினைவிற்கு வருவது சுட்டெரிக்கும் வெயிலும், சுவையான மாம்பழமுமே! மாம்பழம் சாப்பிடுவதில் அனைவர்க்குமே ஓர் அலாதி பிரியம் உண்டு; அதேசமயத்தில் மாங்காயின் மீதும் நாம் கொண்டுள்ள மோகத்திற்கு குறைவில்லை. இப்பொழுது, இந்த சம்மர் சீஸனின் கதாநாயகனான மாங்காயைக் கொண்டு ஒரு அருமையான குழம்பு செய்வது எப்படி என்று படித்தறியலாம்..!

தேவையான பொருட்கள்!

பெரிய நீளமான மாங்காய் - 1, துருவிய தேங்காய் - 1/2 மூடி, சீரகம் - 1 கரண்டி, காய்ந்த மிளகாய் - 6, சாம்பார் வெங்காயம் - 5, மஞ்சள் தூள் - 1/2 கரண்டி, வெங்தயம் - 1/4 கரண்டி, தேங்காய் எண்ணெய் - 2, கடுகு - 1/4 கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. மாங்காயை தோல் சீவி, நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

2. பின் தேங்காய், காய்ந்த மிளகாய், சீரகம் மஞ்சள் தூள் சாம்பார் வெங்காயம் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

3. ஒரு கடாயில், அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் நறுக்கிய மாங்காய், 1 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, குழம்பு கெட்டியானவுடன் இறக்கி வைக்கவும்.

4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, வெங்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதை குழப்பில் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon