Link copied!
Sign in / Sign up
17
Shares

கோபி 65 செய்வது எப்படி?


சிக்கன் 65 என ஒரு நாள் அனைவரும் பேசிக்கொள்ள, அது டிரெண்டிங்க் சமையலாகவும்  இருந்து வந்தது. ஆனால் அதுபோல் சைவத்தில் ஒரு சமையல் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? அட ஆமாங்க, மஸ்ரூம் 65, கோபி 65 இப்படி எவ்வளவு இருந்தாலும், இதை மெனு கார்டில் பார்த்து மட்டுமே நாம் இன்று வரை உண்டு வருகிறோம். ஏன்? இதை நம்மால் வீட்டில் செய்ய முடியாதா என்ன? கண்டிப்பாக செய்ய முடியும். அது எப்படி என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். 

தேவையான பொருட்கள்:

பெரிய காலிஃப்ளவர் - 1 

சோளமாவு - 4 டேபிள் ஸ்பூன் 

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் 

சமையல் சோடா - 1 சிட்டிகை 

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - பொரிக்க 

மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை நேரம் - 20

எத்தனை பேர் உண்ணலாம் - 3

செய்முறை:

1. காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்.

2. பின்னர் அதை கொதிக்கும் வெந்நீரில் சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் போட்டு எடுக்கவும்.

3. ஒரு அகலமான பாத்திரத்தில் காலிஃப்ளவரை கொட்டி அதன் மீது சோளமாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கரம் மசாலாதூள், சமையல் சோடா, உப்பு, இஞ்சி பூண்டு விழுது மைதா மாவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தூவி கலக்கவும்.

4. அதிக உலர்வாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து பின்னர் அரை மணி நேரம் ஊறவிடவும்.

5. வாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும் அதில் ஊறவைத்த காலிஃப்ளவரை போட்டு பொரித்தெடுக்கவும்.

6. அவ்வளவு தான் சூடான சுவையான கோபி 65 ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon