Link copied!
Sign in / Sign up
24
Shares

கோதுமை ரவை பிரியாணியா? புதுசா இருக்கே!

உணவு என்றாலே அரிசியால் செய்யப்பட்டதாய் தான் இருக்கும்; அதிலும் பிரியாணி கண்டிப்பாக அரிசியில் தான் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கோழி, மட்டன், காய்கறி பிரியாணிகளில், அரிசிக்கு பதிலாக கோதுமை, ரவை, புல்குர் கொண்டும் செய்யலாம். இந்த பதிப்பில் கோதுமை ரவை கொண்டு ஒரு  வித்தியாசமான பிரியாணி செய்வது எப்படி என்று படித்தறியலாம் வாருங்கள்!  

தேவையான பொருட்கள்!

கோதுமை ரவை-1 கப்/ வெங்காயம்-1/ தக்காளி-1/ காய் வகைகள் -1 கப்/ உப்பு -1 தேக்கரண்டி/ மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி/ மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி/ கரம் மசாலா தூள்-1/2 தேக்கரண்டி/ தேங்காய்ப்பால் -1 கப்/ நீர்-2 கப்/ எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி

அரைக்க: 

இஞ்சி-1 அங்குலம் துண்டு/ பூண்டு-4 பல்/ சோம்பு-1/2 தேக்கரண்டி/ சீரகம்-1/2 தேக்கரண்டி/ பச்சைமிளகாய் -3/ மிளகு-1/4 தேக்கரண்டி/ புதினா-1 கைப்பிடி/ மல்லி இலை -1 கைப்பிடி

தாளிக்க: 

எண்ணெய் -4 மேஜைக்கரண்டி/ நெய் -1 மேஜைக்கரண்டி/ இலவங்கம்-3 அங்குலம்/ பட்டை-1 அங்குலம்/ கிராம்பு-3/ ஏலக்காய்-1/ கல்பாசிப்பூ/ ஜாதிபத்திரி சிறிது/ முந்திரி-5"

செய்முறை!

1. ”அரைக்க” எனும் தேவையான பொருட்களை ஒன்றாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.. காய்களை சுத்தமாக்கி, வெட்டிக்கொள்ளவும். 

2. கோதுமை ரவையை, நெய் சேர்த்து கை பொறுக்கும் அளவுக்கு சூடாக வறுக்கவும்; வேறொரு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரியை வறுத்துக் கொள்ளவும். 

3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி “தாளிக்க எனும் தேவையான பொருட்களை” தாளிதம் செய்து, மேலும் இதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 

4. காய், காளான், மட்டன் போன்றவற்றை இதில் சேர்த்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும், பின்பு இதில் அரைத்து வைத்திருந்த கலவையை சேர்த்து வதக்கவும். 

5. இக்கலவையை பச்சைவாடை போகும் வரை நன்றாக வதக்கி, அதில் உப்பு, மஞ்சள் தூள், தக்காளி மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். 

6. இதில் தேங்காய்ப்பால் மற்றும் நீர் சேர்த்து கொதிக்க விடவும்; அடுத்து வறுத்த கோதுமை ரவையை இந்தக் கலவையில் சேர்த்து கலக்கவும், இந்த கலவையை மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும் இல்லையேல் 1 விசில் வரும் வரை நன்றாக வேகவிடவும். 

7. இது வெந்தபின், உணவை இறக்கி, அதில் வறுத்த முந்திரி, நெய், கொத்தமல்லி, புதினா, எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி போன்றவற்றை சேர்த்து, உணவை நன்கு கிளறி சூடாக உண்ணவும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon