Link copied!
Sign in / Sign up
0
Shares

கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது பாதுகாப்பானதா?

நம் முன்னோர்கள், நம் பெற்றோர்கள் என யாரும் பயன்படுத்தாத டயப்பர் முறையை நாம் கடைபிடித்து பயன்படுத்தி வருகிறோம்; இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவித காரணங்கள் கூறினாலும், பெற்றோரின் இந்த செயலுக்கு முக்கிய காரணம் சோம்பேறித்தனம் மட்டுமே! இந்த பதிப்பில் வெயிற்காலத்தில் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது பாதுகாப்பானதா என்று படித்தறியலாம்.

ஏன் கூடாது?

குழந்தைகளுக்கு தற்காலத்து டயப்பர்களை, வெயிற்காலத்தில் மட்டுமன்றி பொதுவாகவே அதிக நேரம் பயன்படுத்துவதால், அவர்களுக்கு பிறப்புறுப்பில் அதிகம் வியர்த்து, அரிப்பு, ஒவ்வாமை(Diaper Dermatitis), தடுப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தைகளின் சிறுநீர், மலம் ஏற்படுத்தும் ஈரப்பதத்தால் குழந்தையின் சருமத்தில் பலவித பிரச்சனைகள், பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படலாம். முக்கியமாக வெயிற்காலத்தில், கடைகளில் விற்கும் ட்ரெண்டிங் டயப்பர் பயன்படுத்துவது நல்லதல்ல.

எதை பயன்படுத்துவது?

குழந்தைகளுக்கு துணியை டயப்பராக, வெயிற்காலம் மட்டுமில்லாது எல்லா நாட்களும் பயன்படுத்துவது நல்லது; ஏனெனில், இது குழந்தைகளுக்கு இலேசானதாக அதிக கேடு விளைவிக்காததாக இருக்கும். இந்த துணி டயப்பரையும் 3-4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுவது நல்லது.

குழந்தைக்கு டயப்பர் பயன்படுத்தும் பெற்றோருக்காக!

 

1. குழந்தைக்கு 2 வயது வரை மட்டும் டயப்பரை பயன்படுத்துங்கள்; பின் கழிவறை பழக்கத்தை பழக்கப்படுத்துங்கள்!

2. பயணம் செய்யும் போது மட்டும், டயப்பர் பயன்படுத்துவது நல்லது.

3. இரவு முழுதும் ஒரே டயப்பரை பயன்படுத்தாமல், 3-4 மணி நேரத்திற்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும்.

4. ஒருமுறை பயன்படுத்திய டயப்பரை மீண்டும் பயன்படுத்துதல் கூடாது.

5. பயன்படுத்திய டயப்பர்களை பாதுகாப்பாக, சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துங்கள்..!

6. குழந்தைகளுக்கு தளர்வான டயப்பர்களைப் பயன்படுத்த வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon