Link copied!
Sign in / Sign up
2
Shares

கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல் செய்வது எப்படி?

மூக்கு செத்தவனும் நாக்கு சுழற்ற வந்து நிற்பான் மீன் குழம்பு வாசனையை கண்டு. குளத்து மீன்கள் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை கொண்டிருக்கும்போதும் சுவையில் சாப்பிடுபவரை சுண்டி இழுத்து மீண்டும் பந்தியில் அமர வைக்கும். கடல் மீன்களில் ஓமேகா கொழுப்பு அதிகம் காணப்படுகிறது. மீன் சாப்பிடுவது கண் பார்வைக்கு பெரிதும் உதவ, ஒரு சில மீனை அப்படியே சாப்பிடலாம். அதுவும் கேரள வாடை வீச ஒரு வறுவல் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? அட ஆமாங்க, கேரள ஸ்டைலில் மத்தி மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்:

மத்தி மீன் (sardine) - அரை கிலோ 

மிளகு, சீரகம் - 2 தேக்கரண்டி 

சோம்பு - 1 தேக்கரண்டி 

இஞ்சி - சிறிய துண்டு 

பூண்டு - 20 பல் 

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி 

தயிர் - 1 தேக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு 

மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி 

தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை நேரம் - 30

எத்தனை பேர் உண்ணலாம் - 2

செய்முறை:

1. மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

2. மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து அரைக்கவும். 

3. அத்துடன் இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும்.

4. ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, தயிர், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் கழுவிய மீனை சேர்த்து கலந்து குளிர்சாதன பெட்டியில் குறைந்தது 1 மணி நேரம் வைக்கவும்; அதிகமாக 3 - 4 மணி நேரம் வரை வைக்கலாம்.

5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா பிசறிய மீனை வைத்து, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும்.

6. அதனை கொஞ்ச நேரம் கழித்து, மீன் உடைந்து விடாமல் மெதுவாக புரட்டி போட வேண்டும். 

7. எண்ணெய் போதவில்லை என்றால் ஊற்றிக்கொள்ளவும்.

8. அடுத்த பக்கமும் வெந்ததும், மீனை உடையாமல் புரட்டவும். 

9. இரு பக்கமும் மீன் மொறு மொறு என வெந்ததும், தட்டில் வைத்து கறிவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும்.

10. அவ்வளவு தான் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் மத்தி மீனை குழந்தைகளுக்கு கொடுத்தால் கொள்ளை பிரியம் கொண்டு குதூகலத்துடன் உண்ண செய்வார்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon