Link copied!
Sign in / Sign up
4
Shares

கேரட் ரைஸ்: குழந்தைகளுக்கான இணை உணவு!

குழந்தைகளுக்கு இணை உணவுகள் கொடுக்க தொடங்கிய பின், கஞ்சி, கூழ் போன்ற உணவுகளை அளிப்போம். குழந்தைகள் ஒரு வயதை எட்டும் தருணத்தில் பால் சாதம், ரசம் சாதம் என அளித்து, குழந்தையை வளர்ப்போம். அந்த வகையில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய சிறந்த இணை உணவு எது என்று அறியாமலேயே இந்த இரண்டு வகை சாதங்களையே குழந்தைகளுக்கு அளித்து, அவர்களை போர் அடித்துக் கொண்டிருக்கிறோம். ஆகையால், குழந்தைகளுக்கான சிறந்த இணை உணவு எது என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..! 

தேவையானவை 

சமைத்த சாதம் - 2 கப்/ துருவிய கேரட் - 1.5 கப்/ பெரிய வெங்காயம் - 1/ இஞ்சி - 1 தேக்கரண்டி/ பச்சை மிளகாய் - 2 (தேவைக்கேற்ப)/ மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (தேவையென்றால்)/ கிராம்பு - 3/ ஏலக்காய் - 1/ இலவங்கம் - 1/ கடுகு - 1 தேக்கரண்டி/ பிரியாணி இலை -1/ சீரகம் - 1 தேக்கரண்டி/ கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி - தேவைக்கேற்ப/ உப்பு - தேவைக்கேற்ப/ எண்ணெய் - 2 தேக்கரண்டி 

செய்முறை 

1. அரிசியை வேகவைத்து சாதம் சமைத்துக் கொள்ளவும் 

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடு, சீரகம், கறிவேப்பிலை போன்றவை சேர்த்து தாளிப்பு தயாரிக்கவும் 

3. பின் அதிலேயே இலவங்கம், பிரியாணி இலை, கிராம்பு, போன்றவை சேர்த்து நன்கு தாளிக்கவும் 

4. தாளித்த கலவையில், இஞ்சி, நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் 

5. பின்னர் இதில், துருவிய கேரட் சேர்த்து சிறிது நேரம் சமைத்து, பின் உப்பு, மஞ்சள் போன்றவற்றை சேர்க்கவும் 

6. எல்லாம் சேர்த்த பின்னர், கடைசியாக சமைத்த சாதத்தை சேர்த்து, நன்கு கிளறி, கடைசியாக கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் சமைக்கவும். அவ்வளவு தான் குழந்தைகளுக்கு பிடித்த கேரட் ரைஸ் ரெடி!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon