Link copied!
Sign in / Sign up
23
Shares

குழந்தை பெற்றுக்கொண்ட அம்மாக்களுக்கு கணவர்கள் செய்ய வேண்டிய உதவிகள்!


மனைவி என்பவளுக்கு எல்லா வகையிலும் கணவர்கள் கைக்கொடுக்க வேண்டும். அது அவளின் சொந்தத்தில் தொடங்கி, உணவு, இரவு வாழ்க்கை என அனைத்திலும் அடங்க., அவற்றிலும் மிகவும் முக்கியமானது ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் அந்த சமயம் தான். அத்துடன் அவன் பணிகள் முடிந்துவிடுகிறதா என கேட்டால் அதன்பிறகு தான் அவன் இரு மடங்கு தன் மனைவியையும், குழந்தையையும் நேசிக்க வேண்டும். ஆம், குழந்தை பெற்றுக்கொண்டவளுக்கு தேவையான பணிவிடைகளை அவன் செய்ய, இதனால் அவர்களுடைய சிரமம் குறைய ஆதரவும் கிடைக்கிறது. எப்படி எல்லாம் நீங்கள் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டுமென்பதை நாம் இப்போது பார்க்கலாமா!

1. அவளுக்கான நேரம்:

ஒரு சில ஆண்கள் நினைப்பது என்னவென்றால், குழந்தையை பெற்றுக்கொண்ட பெண்கள் தன்னை மறந்துவிடுகின்றனர் என நினைப்பதே. ஆனால், அப்படி அல்ல. உண்மையில் சொல்ல வேண்டுமெனில் அவர்களுக்கு உங்களுடன் செலவிட போதிய நேரமில்லை என்பதே ஆகும். இந்த எண்ணத்தை தவிர்த்து அவர்களை புரிந்துகொள்வதன் மூலமாக மனதளவில் நீங்கள் நெருங்கலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

2. குழந்தைகளை அழைத்து செல்லுதல்:

நீங்கள் எங்கு சென்றாலும் குழந்தைகளை வண்டியில் வைத்து அழைத்துக்கொண்டு செல்வதன் மூலமாக கணவன் - மனைவிக்கு நடுவில் இருக்கும் உறவு வளர, குழந்தையையும் அதில் ஒரு அங்கமாக தாங்கிக்கொள்ள உங்களால் முடிகிறது. குழந்தைகளுக்கு தேவையான இயற்கை அழகை நீங்கள் காண்பிக்க முயலலாம். இதனால் அவர்கள் மனம் அமைதி அடைவதோடு கணவன் மனைவிக்குள்ளும் காதல் மலரும்.

3. பொம்மைக்கு உதவி:

இது அம்மாக்களுக்கு இருப்பதிலே பெரிய வேலை எனக்கூட சொல்லலாம். ஆம், குழந்தை நடக்க ஆரம்பித்த பிறகு அவர்கள் பொம்மையை விளையாடிவிட்டு அங்கும் இங்கும் போட்டுவிட்டு அழகாக அமர்ந்துவிடுவர். இவற்றை சரி செய்து அடுக்குவதே பெண்ணின் வேலையாக இருக்க, கணவன் மார்கள் அவர்களுக்கு உதவி செய்தால் உங்களுடைய புரிதல் வாழ்க்கை என்பது இன்னும் நன்றாக இருக்கும்.

4. குழந்தை அழுதல்:

நீங்கள் குழந்தைகளை எங்கேயாவது வெளியில் அழைத்து செல்லும்போதோ அல்லது வீட்டிலிருக்கும்போதோ அழ செய்தால் மனைவியிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொள்வதன் மூலமாக அவர்கள் காதலை பெறலாம். இதனால் நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் பாசம் என்பது பளிச்சென வெளிப்படும்.

5. மனைவியை மகிழ்வித்தல்:

உங்கள் மனைவி உங்களுடைய அன்பை முற்றிலும் இழந்து குழந்தை பிறந்த பின்னர் தவிக்கிறாள் என்பதை நீங்கள் அறிவீரா! அதனால் அலுவலகம் விட்டு வரும் நீங்கள் குழந்தைகள் தூங்கும் நேரத்தை தேடி மனைவிக்கு பிடித்த விஷயத்தை செய்வது மிகவும் சிறப்பான வாழ்வை உங்கள் இருவருக்கும் தரும்.

6. குளிக்க அவகாசம்:

உங்கள் துணை குளிக்க விரும்பும் நேரமதில் குழந்தைகளை நீங்கள் பார்த்து கொள்ளலாம். இதனால் வெகு நேர குளியல் மூலம் அவள் சற்று ஓய்வு நிலைக்கு செல்ல வாய்ப்பாக அமைகிறது.


Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon