Link copied!
Sign in / Sign up
0
Shares

குழந்தைகளை பற்றி நாம் நம்பிவரும் 4 கட்டுக்கதைகள்!

இந்த புவியின் அனைத்து அழகான விஷயங்களைக் காட்டிலும் மிகவும் அழகானவர்கள், குழந்தைகள்; குழந்தைகளை பற்றி பலவித கருத்துக்களை நம் முன்னோர் வாயிலாக, புத்தகங்கள், அறிவியல், இணையம் வாயிலாக நாம் படித்தறிந்திருப்போம். இந்த பதிப்பில் குழந்தைகளை பற்றி நாம் நம்பிவரும் கட்டுக்கதைகள் என்னென்ன என்று படித்தறிவோம்..!

முதல் பார்வை - முதல் காதல்

குழந்தை பிறந்து, அது முதலில் பார்க்கும் நபரையே, குழந்தைகள் அதிகம் நேசிப்பதாக நம்பப்படுகிறது; இது முற்றிலும் உண்மையல்ல. குழந்தை உங்களுள் உருவான நொடி முதலே, குழந்தைக்கும் உங்களுக்குமான தொடர்பு-பிணைப்பு ஏற்பட்டுவிட்டது.

முழங்கால் தொப்பி

குழந்தைகளுக்கு முழங்கால் தொப்பிகள் இல்லை என்று பலர் கூறுகின்றனர்; குழந்தைகள் பிறந்த சமயத்தில், அவரது முழங்கால் தொப்பிகள் மென்மையான குருத்தெலும்புடன் காணப்படுகின்றன. பின் மெது மெதுவாக, இந்த எலும்புகள் சரியான வளர்ச்சியை பெற்று பலப்படுகின்றன.

பார்க்க முடியாது 

குழந்தைகள் பிறந்தவுடன் பார்க்க முடியாது என்பது முழுமையான உண்மையல்ல; அவர்களின் பார்வை மங்களானதாய் இருக்கும்; அவர்கள் வளர வளர அதாவது 1 வயதிற்குள், தெளிவான பார்வையை பெற்றிடுவர், குழந்தைகள். 

திட உணவு

குழந்தைகளுக்கு கட்டாயம் திட உணவை அளிக்க வேண்டும் அதுவும் 4 மாதத்திலேயே என்பதெல்லாம் - வெறும் கதை! குழந்தைகளுக்கு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டும்; 6 மாதத்தில் அல்லது அதற்கு பிறகே திட உணவு அளிக்க வேண்டும். அதுவும் காய்கறி அல்லது பழமாக இருத்தல் வேண்டும்.! 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon