Link copied!
Sign in / Sign up
10
Shares

குழந்தைகளுக்கு பிடித்த ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

பக்கோடா என்பது மீதமிருக்கும் மாவில் மறுநாள் காலையில் செய்வது தான். பொதுவாக வடகம் பிழிவது போல் மாவை தட்டி பக்கோடா செய்வார்கள். ஆனால், பக்கோடா போடுவதில் பல விதம் இருக்கிறது. ஓலை பக்கோடா, வெங்காய பக்கோடா இப்படி நிறைய இருக்கிறது. அவற்றுள் ரிப்பன் பக்கோடா எப்படி செய்வது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். 

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப் 

கடலை மாவு - 1 கப் 

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் 

பெருங்காய்த்தூள் - 1 டீஸ்பூன் 

வெண்ணெய் அல்லது நெய் - 3 டேபிள்ஸ்பூன் 

உப்பு - தேவைக்கேற்றவாறு 

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை நேரம் - 20 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 5

செய்முறை:

1. கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் சலித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.

2. அதில் மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், வெண்ணை அல்லது நெய், உப்பு சேர்த்து கலக்கவும்.

3. பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை சேர்த்து மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும்.

4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் முறுக்கு குழலில், ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு, பிசைந்த மாவை நிரப்பி, பிழிந்து, இருபுறமும் பொன்னிறமாக வெந்தவுடன், எடுத்து வைக்கவும்.

5. அவ்வளவு தான் குழந்தைகளுக்கு பிடித்த ரிப்பன் பக்கோடா ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon