Link copied!
Sign in / Sign up
2
Shares

குழந்தைகளுக்கு பிடித்த ஓமம் மீன் பஜ்ஜி செய்வது எப்படி?

பஜ்ஜி என்றாலே குழந்தைகள் ஒரு இடத்தில் அமராமல் அந்த பஜ்ஜி எப்போது தயாராகும் எனும் ஆர்வத்துடன் வீட்டை சுற்றி அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டிருப்பர். கடைகள் வழியாக அவர்களை அழைத்து செல்லும்போதுகூட தட்டு நிறைய வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி என குவித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் மீன் பஜ்ஜி என்பதை எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா. அட ஆமாங்க, சுவையான  ஓமம் மீன் பஜ்ஜி எப்படி செய்வது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். 

தேவையான பொருட்கள்:

துண்டு மீன் - 500 கிராம் 

கடலை மாவு - 1 கப் 

கெட்டியான தயிர் - கால் கப் 

இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன் 

சோடா பானம் - 1/2 பாட்டில் 

ஆரஞ்சு கலர் பொடி - தேவைக்கேற்ப 

லெமன் - 2 

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் 

ஓமம் விதைகள் - 1 டேபிள் ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 

சாட் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை நேரம் - 30

எத்தனை பேர் உண்ணலாம் - 4

செய்முறை:

1. ஒரு கிண்ணத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, ஆரஞ்சு கலர் பொடி, கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

2. இந்த கலவையுடன் ஓமம், மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.

3. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சோடா பானம் ஊற்றி மிதமான பதத்தில், கட்டியில்லாமல் மாவு தயாரிக்க வேண்டும்.

4. மீனை முள்கள் இல்லாமல் துண்டுகளாக வெட்டி, அதை மாவில் போட்டு மீனின் இருபக்கமும் நன்றாக படும் மாதிரி புரட்ட வேண்டும்.

5. கிண்ணத்தை ஒரு மூடி அல்லது கவர் போட்டு மூடி, கலவை நன்றாக கலக்கும் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

6. சிறிது நேரம் கழித்து குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுத்து, ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் மீன்களை பொரித்து எடுக்க வேண்டும்.

7. இறுதியில் பொரித்த மீன்களை ஒரு தட்டில் வைத்து சாட் மசாலா மற்றும் லெமன் துண்டுகள் கொண்டு அலங்கரித்து அழகாக உங்கள் குழந்தைகளுக்கு பரிமாறவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon