Link copied!
Sign in / Sign up
3
Shares

குழந்தைகளுக்கு தவிர்க்காமல் கொடுக்க வேண்டிய 5 முதல் இணை உணவுகள்!

தாய்ப்பாலுக்கு பின், குழந்தைகளுக்கு இணை உணவுகள் அளிக்கத் தொடங்கையில், குழந்தைகளுக்கு எது சிறந்த உணவாக இருக்கும்? எது பாதுகாப்பானது? எது சத்தானது? என்று தாய்மார்களுக்கு பல கேள்விகள் மனதில் எழும். உங்கள் கேள்விகளுக்கு விடை அளிக்க, உங்கள் குழந்தைகளுக்கு நலம் பயக்கவே, மிகச்சிறந்த முதல் 6 இணை உணவுகள் கொண்ட இந்த பதிப்பை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்! படித்து பயனடையவும்.

1. வாழைப்பழம்

குழந்தைக்கு இணை உணவுகள் கொடுக்கத் தொடங்கையில், அளிக்கப்பட வேண்டிய முக்கிய உணவு, வாழைப்பழமாகும்.இப்பழத்தை நன்கு மசித்து, பால் சேர்த்து குழந்தைக்கு அளித்து வந்தால், குழந்தைக்கு ஏற்படும் அணைத்து செரிமானப்பிரச்சனைகளும் நீங்கும் வாய்ப்புண்டு.

2. அவகடோ

வெண்ணைப்பழமான அவகடோ குழந்தைகளுக்கான மற்றோரு சிறந்த உணவு; இந்த அவகாடோவை வேகவைத்து, மசித்து, அதனுடன் பால் சேர்த்து குழந்தைக்கு அளித்து வருதல் மிகவும் நல்லது.

3. தானியங்கள்

புரதம் நிறைந்த, குழந்தைகளுக்கு அளிக்கக்கூடிய தானியங்களான அரிசி, கேழ்வரகு போன்றவற்றை நன்கு கூழாக்கி குழந்தைகளுக்கு இணை உணவாக அளித்து வருவது சிறந்தது.

4. இனிப்பு உருளை

இனிப்பு உருளை இனிப்பாகவும், அதிக கார்போஹைட்ரேட் கொண்டும் விளங்குகிற, ஒரு நல்ல உணவு. இதனை நன்றாக வேகவைத்து, மசித்து குழந்தைக்கு அளித்துவருவது சிறந்தது.

5. காய்கறிக்கூழ்

 

Carrots - கேரட், squash - ஸ்குவாஷ், ப்ரோக்கலி - broccoli, கீரைகள் - spinach, தக்காளி - tomato போன்றவற்றை வைத்து கூழ் தயாரித்து குழந்தைக்கு அளிக்கலாம். அதாவது கேரட் - பர்ஸனிப்(parsnip) அல்லது ப்ரோக்கலி - காலிப்ளவர் கூழ் அல்லது உருளை - கீரை கூழ் இது போன்ற 2 காய்களின் கலவையாக கூழ் செய்து அளிக்கலாம். காய்கறிக்கூழ் தயாரிக்கையில், இந்த காய்களை நன்கு வேகவைத்து, கையால் அல்லது கரண்டியால் நன்றாக மசித்து குழந்தைக்கு அளிக்கவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon