Link copied!
Sign in / Sign up
38
Shares

குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் பாதுகாப்பானதா?

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது என்பது மிக முக்கியமான விஷயம்; ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான தடுப்பூசியை அளித்திருக்க வேண்டும். ஏனெனில் இது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எதிர்கால வாழ்வு சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். ஆகையால், குழந்தை முதல் சிறுவர்-சிறுமி பருவம் வரை அத்தியாவசியமாக, அவசியமாக போட வேண்டிய தடுப்பூசிகள் என்னென்ன, ஏன் அவற்றை போட வேண்டும்? என அனைத்தையும் குறித்து இந்த பதிப்பில் படித்தறியுங்கள்..! 

தடுப்பூசிகள் பாதுகாப்பானதா? (Are Vaccines Safe?)

தடுப்பூசிகள் பாதுகாப்பானது தானா என்ற குழப்பம் உங்களுக்குள் இருந்தால், அதை முதலில் மனதில் இருந்து தூர தூக்கி எறியுங்கள்; ஏனெனில் நோய்களை உண்டாகாமல் தடுக்க போடப்படும் தடுப்பூசிகள் என்றும் நோயை ஏற்படுத்துபவையாக இருக்க முடியாது.

ஆனால், தடுப்பூசி போட்டுவிட்டால் போதும் என் குழந்தை 100 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்துவிடும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால், அது தவறு. குழந்தையை நீங்கள் பத்திரமாக பாதுகாத்து, பராமரித்து, பாசம் காட்டி வளர்க்க வேண்டும். தடுப்பூசிகள் குழந்தைகளின் வாழ்வின் முதல் கட்டத்தை நோய் நொடியற்றதாக, ஆரோக்கியமானதாக மாற்றவே உதவும்.

மேலும் ஒருமுறை பயன்படுத்திய தடுப்பூசியை மீண்டும் பயன்படுத்துவது அல்லது நோய்கிருமிகள் தாக்கிய தடுப்பூசியை பயன்படுத்துவது போன்றவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி புதிது தானா என்பதை பெற்றோரானா நீங்கள் சோதித்த பிறகே, குழந்தைக்கு போட அனுமதிக்க வேண்டும்.

குழந்தைக்கு எப்பொழுது தடுப்பூசி போட வேண்டும்? (When Should Your Kid Be Vaccinated?)

குழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எட்டும் வரை, ஒரு குறிப்பிட்ட வயதை, சரியான பருவத்தை அடையும் வரை அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் எப்பொழுது, எந்த வயதில், என்ன தடுப்பூசியை போடா வேண்டும், அவற்றின் விலை நிலவரம் என்னவாக இருக்கும் என்பது குறித்து சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

தடுப்பூசி அட்டவணை மற்றும் அவற்றின் விலை நிலவரம் ( Vaccination chart for babies and kids with Dose/ Price details)

இந்த அட்டவணையில், எந்த தடுப்பூசி எந்த வயதில் குழந்தைக்கு போடப்பட வேண்டும் மற்றும் எந்த அளவில் அளிக்கப்பட வேண்டும், அவற்றின் விலை நிலவரம் என்ன என்பது குறித்து தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போடப்படும் தடுப்பூசி எந்தெந்த நோய்களை வராமல் தடுக்கும் என்ற அத்துணை தகவல்களும் அளிக்கப்பட்டுள்ளன. படித்து பயனடையவும். இந்த அட்டவணையை தேவையென்றால், பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon