Link copied!
Sign in / Sign up
3
Shares

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் பழ போண்டா செய்வது எப்படி?

அம்மாக்கள் பிள்ளைகளின் வாயில் பழத்தை வைத்து திணிப்பர். ஆனால், குழந்தைகள் அப்பழத்தை உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு சில பிள்ளைகளுக்கு எப்போதும் பழமென நீங்கள் கொடுக்க, வெறுப்பின் எல்லையில் பயணித்த அவர்கள் உண்ண முரண்டுப்பிடித்து சில சமயங்களில் அழவும் செய்வர். சத்தான உணவு என்பது ஏதோ ஒரு சுவையை கொண்டிருக்கும். அதுவும் உவர்ப்பு, கசப்பு போன்ற சுவையை கொண்ட நெல்லிக்காய் போன்ற கனியை குழந்தைகள் உண்ண தயங்குவர். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு பிடித்த முறையில் அந்த உணவை கொடுக்க நீங்கள் பழக்கப்படுத்த வேண்டும். அதற்கு இந்த பழ போண்டாவும் ஆக சிறந்த உதாரணம் என நாம் கூறலாம்.

தேவையான பொருட்கள்:

பேரிச்சம்பழம் - 10 

உலர் திராட்சை - 1 மேஜைக்கரண்டி 

முந்திரி, பாதாம் – 10 

வேர்க்கடலை (தோல் நீக்கியது) - 1 கைபிடி 

பிஸ்தா - 1 மேஜைக்கரண்டி 

செய்முறை நேரம் - 20

எத்தனை பேர் உண்ணலாம் -3

செய்முறை:

1. பேரிச்சம்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்குங்கள். 

2. பருப்பு வகைகளை ஒவ்வொன்றாகப் பொடித்துக்கொள்ளுங்கள்.

3. இவற்றுடன் உலர் திராட்சையைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். 

4. மைதா மாவில் சிறிதளவு நீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள்.

5. உலர் பழக் கலவையைச் சிறு உருண்டையாகப் பிடித்து அதை மைதா மாவு கரைசலில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

6. அவ்வளவு தான் சுவையான பழ போண்டா ரெடி.

7. கண்டிப்பாக உங்கள் குழந்தைகள் மீண்டும் வேண்டுமென இந்த இனிப்பு போண்டாவைக் கேட்டு வாங்கிச் சுவைப்பார்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon