Link copied!
Sign in / Sign up
28
Shares

குழந்தைகளின் காய்ச்சல் மற்றும் இருமல் சிகிச்சைக்கான சிறந்த 25 வீட்டு வைத்தியம்

காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் குழந்தைகளுக்கு ஏற்படுவது சகஜம்தான். பெரிய குழந்தைகளை போல நோயெதிர்ப்பு சக்திகள் இல்லாததால் அவர்கள் எளிதில் நோயில் விழ வாய்ப்புகள் அதிகம். எனினும், இவற்றை எளிதான வீட்டு மருந்துகளை வைத்து குணப்படுத்திவிடலாம். ஒருவேளை குணப்படுத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமானால் மருத்துவரையோ அல்லது குழந்தைகள் நல ஆலோசகரையோ அணுகுவது சிறந்தது.

இங்கே உங்கள் குழந்தைக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலை சமாளிக்க உதவும் 25 வீட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

1. தாய்ப்பால்

குழந்தைக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பிற்கும் தாய்ப்பால் ஒரு சிறந்த தீர்வாகும். குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளது. இது குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் குழந்தையின் உடலில் நீரின் அளவை சரியாக வைத்திருக்கிறது. 

2. உப்பு சொட்டுகள்

மூக்கடைப்பு ஏற்பட்டால் மூச்சுவிடுவது சிரமமாகும், குறிப்பாக குழந்தைகளுக்கு. நாசி சொட்டு மூக்கடைப்பை திறந்து மூச்சுவிடுவதை சீராக்குகிறது. ஒரு நாளைக்கு 2-3 முறை இதை செய்யலாம்.

3. பூண்டு மற்றும் கேரட் விதைகள்

சிறிதளவு பூண்டு மற்றும் கேரட் விதைகளை எடுத்துக்கொண்டு வறுத்து குழந்தைக்கு அருகில் வைக்கவும்( மிக அருகில் வேண்டாம்). இது பாக்டீரியாக்களை எதிர்ப்பதோடு மூக்கடைப்பை சரி செய்யவும் உதவும்.

4. இஞ்சி மற்றும் தேன்

இஞ்சி துருவலில் தேனை சேர்த்து குழந்தைக்கு சீரான இடைவெளியில் கொடுக்கவும். இது நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதோடு குழந்தைகளை இருமலில் இருந்து பாதுகாக்கும்.

5. தேன்

தேன் தொண்டை புண்ணை குணப்படுத்த உதவுகிறது. தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவது தொண்டை புண்ணிற்கு சிறந்த நிவாரணமாகும்.

6. குங்குமப்பூ

குங்குமப்பூ கலந்த பால் இருமல் மற்றும் காய்ச்சலை சரிசெய்ய உதவுகிறது. பால் மிதமான சூடாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனை உங்கள் குழந்தை தூங்குவதற்கு முன் கொடுப்பது சிறந்தது.

7. மஞ்சள் பால்

மஞ்சள் தூள் கலந்த பாலை காய்ச்சல் மற்றும் இருமலுக்கு குடிப்பது தொன்மையான பழக்கமாகும். இது நோய்களை சமாளிக்கவும் விரைவில் குணமடையவும் உதவும். பால் மிதமான சூட்டில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

8. கேரட் சாறு

கேரட் சாறு சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவுகிறது. நீர்த்த கேரட் சாரை 6 மாதத்திற்கு மேலுள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

9. சூப்

சூப்கள் உடலுக்கு சூடு மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இது உடலில் நீரேற்றத்தை அதிகரிப்பதோடு அதிகளவு ஆற்றலையும் தருகிறது. அது கோழி சூப் அல்லது காய்கறி சூப் எதுவாக இருந்தாலும், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

10. நிறைய நீர் உணவுகள் சேர்க்கவும்

அதிகளவு திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது உடலில் நீரின் அளவை அதிகரிப்பதோடு, இரத்ததையும் சுத்தப்படுத்தும், மேலும் கிருமிகளை வெளியேற்ற உதவுகிறது.

11. வெள்ளை வெங்காய சாறு

வெள்ளை வெங்காயம் அதன் மருத்துவ மதிப்புகளுக்கு புகழ்பெற்றது. ஒரு வெள்ளை வெங்காயத்தின் சாறை உறிஞ்சி, ஒரு டீஸ்பூன் உங்கள் பிள்ளைக்கு கொடுங்கள். இது இருமல் மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற உதவும்.

12. துளசி நீர்

கொதிக்கும் நீரில் சில துளசி இதழ்களை போட்டு குழந்தைக்கு கொடுக்கவும். இது நிவாரணம் பெற மட்டும் உதவாமல் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

13. முருங்கை இலைகளுடன் எண்ணெய்

இது பல இந்திய தாய்மார்கள் பயன்படுத்தும் பழைய பழக்கவழக்கமாகும். தேங்காய் எண்ணெயுடன் சில முருங்கை இலைகளை சேர்த்து சூடுபடுத்தவும். குழந்தைக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் இருக்கும்போது இந்த எண்ணையை பயன்படுத்தவும்.

14. எண்ணெய் மசாஜ்

எண்ணெய் மசாஜ் இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் பெற உதவும். பூண்டு, கிராம்புகளை நசுக்கி அவற்றை கடுகு எண்ணெயுடன் சேர்க்கவும். பூண்டு பழுப்பு நிறமாறும் வரை எண்ணெயை சூடாக்கவும். பின் பூண்டுகளை நீக்கிவிட்டு மசாஜிற்கு பயன்படுத்தவும். பாதத்திலும், மார்பிலும் மசாஜ் செய்யவும். கடுகு எண்ணெய் நெஞ்சடைப்பிலிருந்து நிவாரணம் பெற உதவும். மேலும் பூண்டில் பாக்டீரியா மட்டும் வைரஸை எதிர்க்கும் பண்புகள் உள்ளது.

15. மஞ்சள் மசாஜ்

மஞ்சள் தூளை தண்ணீருடன் சேர்த்து சிறிது நேரம் சூடுபடுத்தவும். சூடானவுடன் அதனை மார்பு, நெற்றி மற்றும் கால்களில் தேய்க்கவும். இது இருமலில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

16. கடுகு எண்ணெய் மசாஜ்

கடுகு எண்ணெய்யின் கடுமையான வாசனை மூக்கடைப்பு மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. கடுகு எண்ணெயை சூடாக்கி, அதை உங்கள் குழந்தையின் மார்பு, பாதம் மற்றும் நெற்றியில் தேய்த்துவிடுங்கள்.

17. கற்பூர எண்ணெய் மசாஜ்

கற்பூரம் மூக்கடைப்பு மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரம் ஒரு சிட்டிகை சேர்க்கவும். உங்கள் குழந்தைக்கு மசாஜ் செய்வதற்கு இந்த எண்ணெயை பயன்படுத்தவும்.

18. சரியான ஆடைகள்

உங்கள் குழந்தைகள் சரியான ஆடைகளை உடுத்துவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். குளிர்காலத்தில் குளிரை தாங்கும் உடைகளை அணியவேண்டும். கோடைகாலத்தில் அவர்களுக்கு வசதியான ஆடைகளை அணியவேண்டும். எனினும், அவர்களை அதிக சூடான உடைகளை அணிய செய்யுங்கள்.

19. முறையான சுத்திகரிப்பு

உங்கள் குழந்தைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருங்கள். தினமும் குளிக்க வைக்க இயலாவிட்டாலும், சுடுநீரால் துடைத்து விடுவதையும், தினமும் உடைமாற்றி விடுவதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

20. யூக்கலிப்டஸ் எண்ணெய்

யூக்கலிப்டஸ் எண்ணெய் அதன் மருத்துவ மதிப்புகளுக்கு புகழ்பெற்றது. இது அற்புதமான சிகிச்சை பண்புகளை கொண்டுள்ளது. இது சுவாச பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. ஒரு சிறிய துணியை எண்ணெயில் நனைத்து அறையின் மூலையில் வைக்கவும்.

21. நீராவி

நீராவி சுவாசத்தை சீராக்குகிறது. இது மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் வழங்கி சுவாச கோளாறுகளை சீராக்குகிறது.

22. வேப்ரப்

உங்கள் குழந்தை தூங்குவதற்கு முன் நெற்றி, மார்பு மற்றும் பாதத்தில் இதை தடவவும். தடவிய பிறகு அவர்களுக்கு சூடான துணியை போர்த்தி விடவும்.

23. சூடான நீரில் கொப்பளித்தல்

இது 1-2 வயது அதிகமான குழந்தைகளுக்கானதாகும். சூடான நீரில் சிறிது உப்பு சேர்த்து கொப்பளிப்பது உங்கள் தொண்டை பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதோடு சளியை வெளியேற்ற உதவும்.

24. தலையை உயர்த்துதல்

உங்கள் குழந்தையின் தலையை சிறிது நேரம் உயர்த்தி பிடியுங்கள். அது காற்று நுழைவதை எளிதாக்குவதால், குழந்தை நன்கு சுவாசிக்க உதவுகிறது.

25. வீட்டில் தயாரிக்கும் இருமல் மருந்து

வீட்டில் தயாரிக்கும் இருமல் மருந்து குழந்தைகளுக்கு சிறந்தது. இந்த மருந்தை செய்வது மிகவும் எளிதானது. இரண்டு ஸ்பூன் இஞ்சி சாறு, இரண்டு ஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் க்ளிசரினை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் கலந்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் கொடுக்கவும்.

மேலே சொன்ன அனைத்து வீட்டு மருத்துவ குறிப்புகளும் உங்கள் குழந்தையை சளி, காய்ச்சல் மற்றும் இருமலில் இருந்து பாதுகாக்கும். எனினும், ஒரு குழந்தை மருத்துவரை ஆலோசிப்பது எப்போதும் நல்லது. பிரச்சனை மிகவும் தீவிரமாக இல்லை என்றால், வீட்டு வைத்தியம் செய்யலாம். எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துள்ள உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon