என்ன தான் கறி - மீன் என நாம் சாப்பிட்டாலும் காய்கறியில் இருப்பது போல் நல்ல சத்துக்கள் எதிலும் இல்லை என்பதே உண்மை. அதனால் தான் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய நார்ச்சத்துக்கு அளவே இல்லை. ஆனால்,கறி இறைச்சியை நம்மால் தேவைக்கு மீறி எடுத்துக்கொள்ள இயலாது. எல்லா சத்துக்களும் காய்கறியிலிருக்க ஒருசிலர் வெறும் வாயில் கேரட், முட்டைக்கோஸ் போன்றவற்றை தின்பதும் உண்டு. அதுவே காய்கறியில் நாம் ஒரு வடை செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
உளுத்தம்பருப்பு - 3 சிறிய கப்
கடலைப்பருப்பு - 1 சிறிய கப்
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு
பச்சைமிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
மெல்லியதாக நறுக்கிய பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் - அனைத்தும் கலந்து 1 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை நேரம் - 20 நிமிடங்கள்.
எத்தனை பேர் உண்ணலாம் - 4
செய்முறை:
1. கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
2. அதன்பின்னர் பருப்புகளை 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
3. பாத்திரத்தில் அரைத்த மாவு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, காய்கறிகள் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
4. பிறகு சிறு உருண்டை அளவு மாவு எடுத்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
5. அவ்வளவு தான் சூடான சுவையான காய்கறி வடை ரெடி.
