கர்ப்ப காலத்தில் வயிற்றை கீழ் வைத்து தூங்குவதால் குழந்தை என்ன ஆகும்?
எவ்வளவு தான் கட்டுப்பாட்டுடன் நாம் இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு செல்வது தான் தூக்கம் என்பது. ஆம், நான் குறட்டை விடாமலே எப்போதும் தூங்கிவிடுவேன் என யாராலும் சொல்ல இயலாது. அதேபோல் எப்போதும் நான் சரியான நேரத்தில் எழுந்துவிடுவேன் எனவும் நம்மால் சொல்லிவிட முடியாது. அதற்கு கூட அலாரம் என்பது தேவைப்படுகிறது. அப்படி இருக்க, நாம் நேராக படுத்து உறங்குகிறோமா? அல்லது குப்புற படுத்து உறங்குகிறோமா? போன்ற எந்த கேள்விக்கும் சரியான பதிலை சொல்லிவிட முடியாது. இதனால் ஏதேனும் பிரச்சனையா என கேட்டால், ஒரு சாதாரண மனிதன் வாழ்வில் எவ்வித பிரச்சனையும் இருப்பதில்லை. ஆனால், கர்ப்பிணி பெண்கள் வாழ்வில் கண்டிப்பாக இதனால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அது என்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாமா!

வயிற்றை கீழ் வைத்து தூங்குவது சரியா?
இப்படி நீங்கள் வெகு நேரம் தூங்குவது இரத்த ஓட்டத்தை தடுத்து குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக கர்ப்ப காலத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது 3 மாதங்களில் நீங்கள் இவ்வாறு தூங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். ஏனெனில், கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் செயல்பட, முக்கிய நரம்பானது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை தருகிறது.
நீங்கள் ஒருவேளை வயிற்றை கீழ் வைத்துக்கொண்டு தூங்குவது போல் தெரிந்தால், கண்டிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது தேவை. இல்லையேல் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை தடுத்து குமட்டல் மற்றும் மயக்கம் ஏற்பட செய்யும்.

என்ன செய்ய வேண்டும்?
1. நீங்கள் தூங்கும்போது உடன் மெத்தை மற்றும் தலையணையை சவுகரியத்துக்கு பயன்படுத்தலாம்.
2. நீங்கள் தூங்க செல்லும் முன் கொஞ்சம் ஓய்வில் இருந்திடுங்கள். இதனால் உடலின் உறுப்புக்கள் ஓய்விலிருக்க தூக்கத்தின்போது அசைவுகளை தவிர்க்க உங்களால் முடிகிறது.
3. நீங்கள் தூங்க சிரமப்படும்போது மென்மையான இசையை கேட்டு கொஞ்சம் ஓய்விலிருந்திடலாம்.
4. நீங்கள் தூங்க செல்லும்முன் வெதுவெதுப்பான நீரில் குளித்திடலாம். இதனால் நல்ல தூக்கத்தை நீங்கள் பெறக்கூடும்.
5. உங்கள் துணையிடம் உடலை தடவிக்கொடுக்க சொல்லுங்கள். இதனால் நல்ல தூக்கத்தை நீங்கள் பெறக்கூடும். ஆனால், குறிப்பிட்ட இடத்தை மட்டுமே தடவிக்கொடுக்க வேண்டிய தேவை உங்களுக்கு ஏற்படுவதில்லை.
6. நீங்கள் தூங்கும் நேரத்தை தெளிவாய் முடிவு செய்து தினமும் அதே நேரத்தில் உறங்க பழகுங்கள். இதனால் நல்ல தூக்கத்தை பெற, சரியான விழிப்பையும் நீங்கள் பெறக்கூடும்.

கர்ப்பிணிகளே! உங்களுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியம். அதனால், மருத்துவரின் பரிந்துரையை சரியாக பெற்று அவற்றை ஆரம்பத்திலேயே நீங்கள் கடைப்பிடிக்க தொடங்குங்கள். கர்ப்ப காலத்தின் முதல் நிலையில் நீங்கள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவும் அந்த 10 மாதங்களுக்கு உங்களுக்கு உதவ, நாளை பிறக்குப்போகும் குழந்தையானது தெளிவான மனநிலையுடன் ஆரோக்கியமாகவும், அறிவாளியாகவும் பிறக்கவும் செய்கிறது.