Link copied!
Sign in / Sign up
5
Shares

கர்ப்ப காலத்தின் மூன்றாவது மாதத்தில் காணப்படும் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

கர்ப்ப காலத்தின் பத்து மாதங்கள் மூன்று நிலையாக பிரிக்கப்பட, அவற்றுள் 9 முதல் 12 வாரத்தில் என்ன அறிகுறிகள் காணப்படும் என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். இந்த கர்ப்ப காலத்தின் மூன்றாவது மாதத்தில் மருத்துவ பரிசோதனை என்பது தவிர்க்காமல் செல்ல வேண்டியதாக உங்களுக்கு அமைகிறது.

மூன்றாவது மாதத்தின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
1. காலை சுகவீனம்:

கர்ப்ப காலத்தின் மூன்றாவது மாதத்தில் குமட்டல் மற்றும் வாந்தி எடுத்தல் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். ஒரு சில பெண்களுக்கு இந்த குமட்டல் பிரச்சனை என்பது முதல் 3 மாதத்தின் இறுதியில் குறைந்தும் காணப்படுகிறது.

2. களைப்பு:

கர்ப்ப காலத்தில் ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களால் களைப்பு மற்றும் தூக்க பிரச்சனை பெண்களுக்கு காணப்படுகிறது. அத்துடன் உங்களுடைய உடலுக்கு அதிகளவில் இரத்தம் தேவைப்பட, கருவிலிருக்கும் குழந்தைக்கும் ஊட்டச்சத்தை சேர்த்து தருகிறது. இதன் குறைப்பாட்டால் இரத்த அழுத்த அளவில் மாற்றம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு மாற்றத்துடனும் நீங்கள் காணப்படக்கூடும்.

3. சிறுநீர் கழித்தல்:

கர்ப்ப கால HCG ஹார்மோன் சுரப்பினால் அடிக்கடி சிறுநீர் கழிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. இரத்த பருமன் அளவு அதிகரிக்க, இதனால் சிறுநீரக அழுத்தமும் காணப்படுகிறது. அத்துடன் கருப்பை வளர்ச்சியின் காரணமாக சிறுநீர் குழாயிலும் அழுத்தம் நிரம்ப காணப்படக்கூடும். இதனால் சிறுநீர் கழிக்க வேண்டுமென்னும் எண்ணம் உங்கள் மனதில் தோன்றுகிறது.

4. மலச்சிக்கல்:

பிரோகிராஸ்ட்ரோன் ஹார்மோன் அதிகரிப்பின் காரணமாக செரிமான பிரச்சனை ஏற்படக்கூடும். ஒழுங்கற்ற உணவு முறையும் உங்கள் கர்ப்ப கால மலச்சிக்கலுக்கு காரணமாக அமைகிறது.

5. பிறப்புறுப்பில் கசிவு:

எஸ்ட்ரோஜன் அதிகளவில் சுரக்க இதனால் பிறப்புறுப்பிலிருந்து சளி மாதிரியான திரவம் வெளியாகிறது. இந்த கசிவை நீங்கள் அகற்ற நினைத்து ஏதேனும் செய்யும்போது முறையற்ற காரணத்தால் தொற்றுகள் ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது.

6. முதுகு வலி மற்றும் அடிவயிற்றில் வலி:

ஹார்மோனில் ஏற்படும் மாற்றத்தால் முதுகில் வலியும் கர்ப்பிணி பெண்களுக்கு காணப்படுகிறது. அத்துடன் கருப்பை வளர்ச்சியினால் காணப்படும் நசை நார்களினாலும் அடிவயிற்றில் வலி என்பது ஏற்படுகிறது. அதனால் கர்ப்ப காலத்தில் குறைவாக வலி தரக்கூடிய தகுந்த உடற்பயிற்சியின் மூலம் நீங்கள் இந்த முதுகு வலியை தவிர்க்கலாம்.

7. கால் தசைப்பிடிப்பு:

கர்ப்ப காலத்தின் மூன்று மாதத்தில் கால் தசைப்பிடிப்பு என்பது காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக அமைவது பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகள் தான். கால் மற்றும் கணுக்கால் தொடர்பான உடற்பயிற்சிகள் உங்களுக்கு இந்த பிரச்சனையிலிருந்து விடுபட மிகவும் உதவுகிறது.

8. மனநிலை மாற்றம்:

மூன்றாவது 3 மாதத்தில் உங்களுடைய உடல் ஹார்மோன்களில் பலவித மாற்றம் நிரம்ப காணப்பட, இதனால் மனநிலை மாற்றங்களும் காணப்படுகிறது. எனவே உங்களுக்கு எவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் முறையான ஆலோசனை மட்டுமே பெற வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon