Link copied!
Sign in / Sign up
7
Shares

கர்ப்பிணி பெண்கள் மஞ்சள் பால் குடிப்பதால் கருவிற்கு ஆபத்தா?

மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியின் நாயகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! மஞ்சள் சேர்த்த பாலை காய்ச்சல், சளி ஏற்படும் போதெல்லாம் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம் என்று நாம் அறிவோம்! அதே மஞ்சள் கலந்த பாலை கர்ப்பிணி பெண்கள் குடிக்கலாமா கூடாதா என்ற கேள்வி பல கர்ப்பிணிகளின் மனதில் இருந்து வருகிறது. இந்த கேள்விக்கு சரியான விடை எது என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..!! 

கருவிற்கு ஆபத்தா?

கர்ப்பிணி பெண்கள் மஞ்சள் பால் அருந்துவதால், அவர்களுக்குள் வளரும் கருவிற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி அனைத்து பெண்களிடத்திலும் காணப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் அளவாக - சிறிதளவாக இந்த மஞ்சள் பாலை வந்தால், நல்லது. 

ஆனால் அளவுக்கு அதிகமாக அவர்கள் பருக நேர்ந்தால், கருவிற்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகையால், அளவாக மஞ்சள் சேர்த்து அளவான பாலைக் குடித்து வருதல் நல்லது.

எந்த மஞ்சள் நல்லது?

மஞ்சள் வாங்கும் போது, கெமிக்கல்கள் கலக்காத, இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்ட மஞ்சளை வாங்கி பயன்படுத்துங்கள்! மேலும் இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்ட மஞ்சள் கிழங்குகளை வாங்கி, அரைத்து போடி செய்து பயன்படுத்தவும்.

பயன்கள்!

மஞ்சள் பாலை அளவாக பருகுவதால், வாந்தி எடுப்பது குறையும்; மேலும் மலம் கழித்தல் சீராகும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இரத்த ஓட்டம் சீராகும். இந்த பாலை ஒரு நாள் அல்லது இரு நாள் விட்டு விட்டு குடித்து வருதல் போதுமானது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon