Link copied!
Sign in / Sign up
19
Shares

கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டிய அற்புத பழம் - அத்திப்பழம்

கர்ப்ப காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவை உண்ண விரும்புவதே அனைவரது விருப்பமாக இருக்க, ஒரு சிலர் சாப்பிடும் உணவுகளால் என்ன ஆகுமோ என்னும் பயத்துடனும் இருப்பர். எப்போதும் கர்ப்ப காலத்தில் இயற்கை உணவுகளை தேடி உண்ணுவதே சிறந்தது என மருத்துவர் கூற, அவற்றுள் அத்திப்பழம் மட்டும் எப்படி இடம் பிடிக்காமல் போகும். ஆம், கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணி பெண்கள் அத்திப்பழம் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் இருக்க, அவை என்ன என்பதையும் தான் விரிவாக பார்ப்போமே! வாருங்கள் என்னுடன் சேர்ந்து அத்திப்பழம் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

அத்திப்பழம் எப்படி இருக்கும்?

இந்த அத்திப்பழம் மிகவும் சுவையானது. இந்த பழத்தில் ஆரோக்கியம் தரும் தாவர ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்சிடன்ட், மற்றும் வைட்டமின்களும் அதிகளவில் இருக்கிறது. இது பார்ப்பதற்கு பேரிக்காய் பழம் போன்று இருக்கும். இந்த பழத்தின் சதை தனித்துவமிக்க சுவையுடன் இருக்கிறது. அத்துடன் காய்ந்த அத்திப்பழத்தில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்திப்பழம் அறிவியல் பெயர்: பீக்கஸ் கரீகா

குடும்பம்: முல்பெரி இனத்தை சார்ந்தது.

எங்கே காணப்படுகிறது?

இந்த அத்திப்பழம் ஆசியா போன்ற மிதமான நிலப்பகுதியில் காணப்படுகிறது. இன்றைய நாளில் பல வீட்டில் வைத்து வளர்க்கும் ஒரு தாவரமாகவும் அத்திப்பழம் விளங்குகிறது. இந்த அத்திப்பழம் பலவித வகையையும், நிறத்தையும் கொண்டிருக்கிறது. 

அத்திப்பழத்தில் என்ன இருக்கிறது?

1. இந்த அத்திப்பழத்தில் குறைவான கலோரிகளே இருக்கிறது. அதாவது 100 கிராம் சுத்தமான அத்திப்பழம் 74 கலோரிகளையே கொண்டிருக்கிறது. அத்துடன் ஆரோக்கியத்தை தரும் கரையக்கூடிய நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், நிறமியை தரும் ஆன்டி-ஆக்சிடன்ட் ஆகியவையும் நமக்கு தேவையான ஊட்டச்சத்தை தருகிறது.

2. உலர்ந்த அத்திப்பழத்திலும் தாதுக்கள், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட் ஆகியவை இருக்க, நமக்கு தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்தை தருகிறது. 100 கிராம் உலர்ந்த அத்திப்பழத்தில் 249 கலோரிகள் இருக்கிறது.

3. ப்ரெஷ்ஷான கருப்பு நிற பழத்தில் பாலிபீனாலிக் ஃபிளாவொனாய்டு ஆன்டி-ஆக்சிடன்ட் என அழைக்கப்படும் கரோட்டின், லூட்டின், டேனின், க்ளோரோஜெனிக் அமிலம் ஆகியவை இருக்க, ஆப்பிளுடனும் இந்த தாதுக்கள் ஒப்பிடப்படுகிறது.

4. மேலும், அத்திப்பழம் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது. இதனால் புற்றுநோய், நீரிழிவு நோய், தொற்று நோய் முதலியவை நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்கிறது.

5. இந்த அத்திப்பழத்தில் காணப்படும் க்ளோரோஜெனிக் அமிலம், இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு, நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

6. ப்ரெஷ்ஷான மற்றும் உலர்ந்த அத்திப்பழத்தில் நியாசின், பிரிடாக்சின், போலேட், பந்தாதொனிக் அமிலம் ஆகியவை இருக்கிறது. இந்த வைட்டமின்கள் யாவும் கார்போஹைட்ரேட், புரத மற்றும் கொழுப்பின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.

7. உலர்ந்த அத்திப்பழத்தில் கால்சியம், காப்பர், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு சத்து, செலினியம், மற்றும் துத்தநாகம் இருக்கிறது. 100 கிராம் உலர்ந்த அத்தி பழத்தில் 680 மில்லிகிராம் பொட்டாசியமும், 162 மில்லிகிராம் கால்சியமும், 2.03 மில்லிகிராம் இரும்புச்சத்தும் இருக்கிறது. பொட்டாசியம், இதய துடிப்பை சீராக்க உதவ, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. காப்பர், சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.  

கர்ப்ப காலத்தில் அத்திப்பழம் எப்படி உதவுகிறது?
1. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:

கர்ப்பிணி பெண்கள் இதயத்துக்கு வலுசேர்க்கிறது இந்த அத்திப்பழம். ஏனெனில், இப்பழத்தில் அதிகளவில் பொட்டாசியம் இருக்க குறைவான சோடியமே காணப்படுகிறது. இதனால், உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க அத்திப்பழம் பெரிதும் உதவுகிறது. பொதுவாக, கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம் மிக்கவராக காணப்பட, இதனால் இரத்த அழுத்தம் சீரற்றும் இந்த 10 மாதங்கள் இருக்கக்கூடும். எனவே, உங்களுடைய இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள நீங்கள் அத்திப்பழத்தை உணவோடு சேர்த்து கொள்ளலாம்.

2. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும்:

அத்திப்பழம் அதிகளவில் ஒமேகா - 3, ஒமேகா - 6 கொழுப்பு அமிலத்தையும், பைட்டோஸ்டெராலையும் கொண்டிருக்கிறது. இந்த கலவையான தாதுக்கள் உங்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. அத்துடன் தமணிகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதோடு, இரத்த ஓட்டத்துக்கான தளர்வையும் தருகிறது. அத்திப்பழத்தில் பெருமளவில் நார்ச்சத்து என்பது இருக்கிறது. எனவே, உடலில் காணப்படும் தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க அத்திப்பழம் பெரிதும் உதவுகிறது.

3. கண் பார்வை குறைபாடு நீங்கும்:

பொதுவாக வயதான பெண்களுக்கு AMD எனப்படும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இந்த பிரச்சனையால் விழித்திரையின் நடுவில் காணப்படும் கரும்புள்ளியில் பிரச்சனைகள் உண்டாகிறது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இந்த பிரச்சனை வரக்கூடும். இந்த AMD என்பதால் கண் பார்வை முற்றிலும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், தினசரி வேலை செய்ய ஒருவித சிரமத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை உங்களை அண்டவிடாமல் தடுக்க அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon