உலகில் படைக்கப்பட்ட கனி வகைகளில் ஆப்பிள் பழமானது தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து அதிக சத்துக்கள் நிறைந்த சுவையான கனியாக திகழ்கிறது. ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் பழம் உண்டால் நாம் மருத்துவரை தவிர்க்கலாம் என்பது உலகம் அறிந்த பழமொழி. ஆப்பிள் பழத்தில் உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களான உப்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து , உயிர்வெளியேற்ற எதிர்ப்பொருள், உயிர்ச்சத்துக்கள் என பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆப்பிள் பழம் தண்ணீர் அதிகம் நிறைந்த கனி என்பதால் உண்டதும் பசியை போக்கி வயிற்றை நிரப்பும் தன்மையுடையது.
ஆப்பிள் பழம் உண்பதன் மூலம் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கான ஆப்பிள் பழத்தின் பயன்கள்:
பொதுவாகவே பழங்கள் உட்கொள்வதில் ஆப்பிள் பழம் அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதிலும் கர்ப்பிணி பெண்கள் இதனை உட்கொள்வதன் மூலமாக பல நன்மைகள் அடைகின்றார்கள்.

உயிர்வெளியேற்ற எதிர்ப்பொருள் #1
ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துப்பொருள்களுள் மிகவும் முக்கிய ஒன்றாக கருதப்படுவது உயிர்வெளியேற்ற எதிர்ப்பொருளே ஆகும். கர்ப்பிணி பெண்கள் இதை உட்கொள்வதன் மூலம் உடம்பில் உள்ள நச்சுப்பொருள்கள் நீங்குகின்றன, குறிப்பாக பிளேவனாயிட் மற்றும் பாலிபினாலிக் உயிர்வெளியேற்ற எதிர்பொருள்கள் நம் உடலுக்கு நன்மை தரக்கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளது முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு.

புற்றுநோய் தடுப்பு #2
நிகழ்காலத்தில் உள்ள நோய்களில் மிகவும் கொடிய நோய் புற்றுநோயே. ஆப்பிள் பழம் உண்பதால் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து தாயை மட்டுமல்லாமல் தங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைகளையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்க்கு காரணமாக உள்ள முக்கிய மூல அணுக்களை அழிக்கும் வல்லமை ஆப்பிள் பழத்திற்கு உள்ளது.

ஆரோக்கியமான கரு வளர்ச்சி #3
ஆப்பிள் பழம் ஏனைய சத்துக்களை உடையது என்பதனால் வயிற்றின் கருவை ஆரோக்கியமான முறையில் வளர உதவும்.
குறைப்பிரசவ பாதுகாப்பு #4
ஆப்பிள் பழம் உண்பதன் மூலம் குறைமாத பிரசவத்தில் இருந்து கர்ப்பிணி பெண்களை நம்மால் பாதுகாக்க முடியும். ஏழு அல்லது எட்டு மாதத்திலேயே பிரசவம் ஆவதன் மூலம் அக்குழந்தைகள் இறக்கும் தருவாய்க்கு தள்ளப்படுகிறது.

மூச்சிரைச்சலை தடுக்கும் தன்மை #5
தாய் ஆப்பிள் பழம் உண்பதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் வரும் மூச்சிரைச்சல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். இதற்கு தகுந்த காரணங்கள் தெரியாத போதிலும் மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு ஆப்பிள் பழம் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.
செரிமானம் மேம்படும் # 6
மலச்சிக்கல் மனச்சிக்கலை உண்டாக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு இயல்பாகவே இப்பருவத்தில் செரிமான சிக்கல்கள் ஏற்படும், எனவே ஆப்பிள் பழம் செரிமானத்தை மேம்படுத்தும்.

ஆரோக்கியமான இருதயம் # 7
அதிகமான இரத்த அழுத்தத்தினாலும், அதிகம் அமிலம் சுரப்பதினாலும் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது, ஆப்பிள் பழம் சேர்த்துக்கொண்டால் இதய சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

இரத்தசோகையை குறைக்க உதவும் #8
கரு தரித்தப்பின் தாயிடம் இருந்து சத்துக்களையும் ,இரத்த அணுக்களையும் கொண்டு கரு வளர தொடங்கி விடும், இதன் காரணமாக கர்ப்பிணிகள் இரத்த சோகை அடையும் வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ஆப்பிள் பழத்திற்கு இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளதால் மிகவும் நன்மை தரக்கூடியதாக திகழும்.

ஆப்பிள் பழத்தின் பக்க விளைவுகள்:
எல்லா நேரங்களிலும் நாம் உண்பவை நமக்கு நன்மை மட்டுமே அளிக்கும் என நம்ப முடியாது .தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் அது நமக்கு ஆபத்தையும் விளைவிக்கும். ஏனைய சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் பழமானாலும் அதே நிலை தான்.
ஒவ்வாமை #1
ஒவ்வாமை ஒவ்வொரு மனிதர்களுக்கும் வேறுபடும் எனவே அது போல சிலருக்கு ஆப்பிள் பழம் ஏதிர்வினையாக அமையும் .ஒவ்வாமை நூற்றில் சிலருக்கு மட்டுமே ஏற்படும். அப்படி அறியாமல் உட்கொள்வதன் மூலம் வயிற்றுப்போக்கு , வாந்தி, வயிற்றுவலி வரும் வாய்ப்பு உள்ளது. இதனை மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து சரி செய்து கொள்ள வேண்டும். அப்படி ஒவ்வாமை இருப்பது தெரியும் பட்சத்தில் ஆப்பிள் பழத்தை தவிர்ப்பது நல்லது.

இரசாயன நச்சுக்கள் #2
இக்காலத்தில் விளைவிக்கப்படும் அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளால் குளிப்பாட்டப்படுகின்றன. இது நிச்சயமாக நம் உடலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கனிம முறையில் விளைவித்ததை உட்கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்படுகிறது.

வளர்சிதை மாற்ற செயல்முறை குறைவு #3
ஆப்பிள் பழம் அதிக மாவுச்சத்து நிரம்பிய கனியாகும் எனவே அதிகம் உட்கொள்வதன் மூலம் அதிக எடை போடும் நிலை உள்ளது. இச்செயல் வளர்சிதை மாற்ற செயல்முறை குறைவை ஏற்படுத்துகிறது.

உட்கொள்ள வேண்டிய அளவு:
"அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை மனதில் வைத்து நாம் செயல்பட வேண்டும். அதிகம் உட்கொள்வது நிச்சயம் ஆபத்து விளைவிக்கக் கூடும் . தினம் ஒரு ஆப்பிள் பழம் எடுத்துக்கொள்வதே நல்லது.
“ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் பழம் உண்பதன் மூலம் மருத்துவரை தவிர்க்கலாம்” என எண்ண வேண்டிய தருணம் இது .
தினம் ஒரு ஆப்பிள் பழம் உண்போம் உடல்நலம் காப்போம்.