கர்ப்பகாலத்தில் பெண்கள் மீன் உண்ணலாம்; உண்ணக்கூடாது என்ற மாறுபட்ட கருத்துக்கள் மக்களிடையே நிலவி வருகின்றன; மேலும் கர்ப்பிணி மீன் உண்பதால், குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற பயமும் நம்மூர் பெண்களிடையே நிலவி வருகிறது. பெண்களின் இந்த பயத்தைப் போக்க, கர்ப்பகாலத்தில் மீன் உண்பதால் கருவிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு விடை அளிக்கவே இந்த பதிப்பை, தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்! படித்து பயனடைவீராக தோழியரே!!

எந்தந்த மீன்களை உண்ணலாம்? [Fish you can eat in pregnancy]
இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட சால்மன் [ஏனெனில் செயற்கை முறை சால்மன் வளர்ச்சியில் சேர்க்கப்படும் PCB எனும் வேதிப்பொருள் புற்றுநோயை வரவழைக்கும் சக்தி கொண்டது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டள்ளது], கேட்பிஷ் (catfish), நண்டு (crab), கோட் (cod), லோபஸ்ட்டர் (lobster), சிலமஸ் (clams) மற்றும் திரௌட் (trout) போன்ற மீன்களை 3-6 ounces அதாவது 85 - 170 கிராம்கள் என்ற அளவில் கர்ப்பிணிகள் உட்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய மீன்கள்! [Fish You Should Avoid when Pregnant]

shark-சார்க், கிங் மக்கெரேல்-king mackerel, ஸ்வோர்ட் பிஷ்-swordfish, ஹாலிபிட்- Halibut, கன்னெட் டூனா-Canned Tuna, சிரிம்ப்-shrimp, சனப்பேர்-snapper போன்ற மீன்கள் கர்ப்பிணிகளின் உடல் நலத்தை பாதிக்கும் தன்மை கொண்டவை, இதனால் கருவிற்கு பாதிப்பு உண்டாகலாம்; மேலும் சுசி-sushi, செவிச்சே-ceviche, சஷீமீ-sashim போன்ற மீன்கள் கர்ப்பிணி பெண்களுக்கு புட் பாய்சனை (food-poison) ஏற்படுத்த வல்லது. ஆகையால், இது போன்ற மீன்களை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது.
குளத்தில் பிடித்த மீன்களை உண்ணலாமா? [Should I Eat Fish Caught in Local Waters?]

குளத்தில் பிடித்த மீன்களை உண்பதும் சற்று உகந்தது அல்ல; ஏனெனில் அந்த மீன்களில் மெர்குரி அளவு அதிகம் இருக்கலாம்; மேலும் அவை பாதுகாப்பான சூழலில் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. எனவே கர்ப்பிணிகள் குளத்து மீன்களை தவிர்ப்பது நல்லது.
இது உங்களுக்கு தெரியுமா: கர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா?