Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்பிணிகளே! இந்த 5 காரணத்தால் உங்கள் கர்ப்ப காலத்தில் சிக்கல் ஏற்படலாம்!

கர்ப்ப காலம் என்பது மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய ஒரு காலமாக அமைய, நீங்கள் உங்களுடைய நலனில் மட்டும் அக்கறை காட்டாமல் கருவிலிருக்கும் குழந்தையின் மீதும் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும். இல்லையேல் பிரசவத்தின் போது தேவையற்ற சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். என்ன மாதிரியான சிக்கல்கள்? வாங்க பார்க்கலாம்.

1. முன் ஏற்பட்ட பிரச்சனை:

ஒருவேளை இதற்கு முன்னால் பிறந்த குழந்தையானது குறைப்பிரசவத்தில் பிறந்திருக்குமெனில் இதனால் இந்த முறை தேவையற்ற சிக்கல்கள் உருவாகக்கூடும். கருச்சிதைவு, ப்ரீஎக்லிம்சியா, இரத்த கசிவு, ஆகிய பிரச்சனைகளாலும் உங்கள் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட பெரிதும் வாய்ப்பிருக்கிறது.

2. மருத்துவ சிக்கல்:

மருத்துவ வரலாறு என்பது கர்ப்பத்தின்போது பலவித சிக்கல்களுக்கு மூலக்காரணமாக அமைகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதயம் அல்லது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்கனவே இருக்குமெனில் இதனால் பிரசவத்தின்போது பெரிய சிக்கலை கர்ப்பிணி பெண்ணுக்கு தருகிறது. 

3. கருவுருதல் சிகிச்சை:

இந்த கருவுருதல் சிகிச்சை என்பது நல்லதொரு முடிவை பலருக்கு தருகிறது. இதனால் கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் பிரச்சனை இல்லையென்றாலும் அதன்பிறகு உடல் நல குறைவு என்பது உங்களுக்கு ஏற்பட பெரிதும் வாய்ப்பு உண்டாகிறது.

4. மரபு ரீதியான பிரச்சனை:

ஒருவேளை மரபு வழியாக இதய பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, ஆகியவை இருந்திருக்குமெனில் இதனால் பிரசவ சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

5. வாழ்க்கை சிக்கல்கள்:

நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்துதல் பழக்கம், போதை பழக்கம் ஆகியவற்றை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும். இல்லையேல், இதனால் உருவாகும் கருவை இவை பாதிக்க, உடல் மற்றும் மன சம்பந்தப்பட்ட பிரச்சனையை இதனால் தரவும்கூடும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon