Link copied!
Sign in / Sign up
9
Shares

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எது?

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது பலவித கேள்விகளை மனதில் முன் வைக்கிறாள். அவற்றுள் ஒன்று தான் என்ன சாப்பிட வேண்டும் என்பதாகும். ஒரு சில உணவுகளையும், பழங்களையும் சாப்பிட சொல்லி மருத்துவர் பரிந்துரை செய்ய, அதில் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது என நாம் தெரிந்துகொள்வதோடு சரி. அப்படி என்ன தான் அந்த உணவில் இருக்கிறது என யாருமே ஒருபோதும் ஆராய்வதில்லை. என்ன சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொண்டீர்கள். ஆனால் எவ்வளவு சாப்பிட வேண்டுமென்பதை எப்போது தெரியுமா நீங்கள் அறிவீர்கள்! அது அந்த உணவில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது.

ஓர் உதாரணத்திற்கு, பப்பாளி பழம் சாப்பிட்டால் கரு கலையும் என்பார்கள். ஆனால், அதில் என்ன இருப்பதனால் கரு கலையுமென்பதை எவரும் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. அப்படி தெரிந்தால் பப்பாளி பழத்தில் இருக்கும் ஒரு சில நன்மைகளும் நமக்கு தெரியவரும். இப்படி இயற்கை பொருட்களில் என்ன இருக்கிறது என தெரியாமல் தவிக்கும் நாம் தான், இன்று பதப்படுத்தப்பட்ட உணவையும், பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட குளிர்பானத்தையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறோம். இனிமேலாவது என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடாமல் தவிர்ப்பதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தைக்கு அது பெரிதும் உதவுவதோடு மூளை வளர்ச்சிக்கும் உதவ முன்வருகிறது.

பொருளடக்கம்

1. கர்ப்பமாக இருக்கும் போது ஏன் ஒரு சில உணவை தவிர்க்க வேண்டும்?
2. கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் எது?
3. சுத்தம் செய்யப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகள்
4. அலெர்ஜி தரும் உணவுகள்
5. எந்த மாதிரி உணவை தவிர்க்க வேண்டும்?

 

கர்ப்ப காலத்தில் ஏன் ஒரு சில உணவை தவிர்க்க வேண்டும்?

கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது அவர்கள் சந்திக்கும் சூழ்நிலையும், உண்ணும் உணவுகளும் தான். ஆம், கர்ப்ப காலத்தில் ஒரு சில உணவுகளின் மனம் கர்ப்பிணி பெண்ணுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினாலே ஆகும். அதுவும் முக்கியமாக எஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் கர்ப்பத்தின் முதல் நிலையில் சுரக்க, இதனால் கர்ப்பிணிகளுக்கு குமட்டல் என்பது காணப்படுகிறது. எனவே கர்ப்பிணிகள் ஒரு சில ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு தவிர்ப்பது மிகவும் நல்லது.

மேலும் படிக்க: கர்ப்பகாலத்தில் குறிப்பிட்ட உணவின் மணம் பிடிக்காமல் போவதற்கான காரணம்!

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் எது?

1. மீன்:

கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடலாமென கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், ஒரு சில மீனை கர்ப்ப காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆம், சுறா, வாள் மீன் (sword fish), ராஜா கானாங்கெளுத்தி மீன் (king mackerel), ஓடு மீன் (Tile Fish) ஆகியவற்றை நீங்கள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இந்த மீன்களில் அதிகளவில் மெர்குரி என்பது காணப்படுகிறது.

மீனில் என்ன இருக்கிறது?

இந்த மீன்கள் கடல், ஓடை, ஏரி ஆகியவற்றில் வாழ., இந்த மீனை சாப்பிடும் கர்ப்பிணி பெண்களின் உடலில் மெத்தில் மெர்குரியாக (Methylmercury) இது மாறி வினை புரிகிறது. இதை நரம்பியல் நச்சு என அழைக்க, இது மூளையுடன் இணைந்து குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். 

எந்த மீனை சாப்பிடலாம்?

சால்மன் மீன், கெளுத்தி மீன், காட் மீன் மற்றும் பதப்படுத்தப்பட்ட சூரை மீன் ஆகியவற்றை கர்ப்பிணி பெண்கள் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில், இதில் குறைவான அளவே மெர்குரி என்பது காணப்படுகிறது. US FDA கருத்துப்படி கர்ப்பிணி பெண்கள் ஒரு வாரத்திற்கு 8 முதல் 12 அவுன்ஸ் வரை மீன் சாப்பிட, இதனை 3 வேளையாகவும் பிரித்துக்கொள்வது நல்லதாம். 

2. பச்சை முட்டை:

கர்ப்பிணி பெண்கள் அரைநிலையில் வேக வைக்கப்பட்ட அல்லது பச்சை முட்டையை சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் வயிற்று போக்கு, வாந்தி பிரச்சனை, தலைவலி, அடிவயிற்றில் வலி ஏற்படுதல், வெப்ப நிலை உயர்தல் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படக்கூடும். இந்த பிரச்சனைகள் எல்லாம் உங்கள் கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்காமல் சென்றாலும், உங்களுடைய எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடியது என்பதை புரிந்து செயல்படுங்கள்.

என்ன இருக்கிறது?

கர்ப்பிணிகளுக்கு முட்டை ஏற்படுத்தும் பிரச்சனைக்கு முக்கிய காரணம், தீங்குவிளைவிக்கக்கூடிய சல்மோனெல்லா பாக்டீரியா உருவாவதால் தான். நீங்கள் அரை நிலையில் முட்டையை வேகவைத்து உண்ணும்போது இந்த பாக்டீரியாக்கள் உடலில் சென்று உணவு ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்த பாக்டீரியாக்கள் உங்கள் உடலை மிகவும் சோர்வுடன் வைக்கவும் செய்கிறது.

முட்டையை எப்படி சாப்பிடலாம்?

நீங்கள் முட்டையை நன்றாக வேகவைத்து வெள்ளை மற்றும் மஞ்சள் கருவின் நிலையை தெரிந்துக்கொண்டு உண்ணுவது நல்லது. ஒரு சிலருக்கு முட்டையை வேகவைத்து தின்பது பிடிக்காது. அப்படி என்றால் ஆம்லெட் போட்டு சாப்பிடலாம். ஆனால், ஆம்லெட் நன்றாக வெந்து இருக்க வேண்டியது அவசியமாகிறது. முட்டையை நன்கு வேகவைத்து சாலட் போன்றவற்றை செய்தும் நாம் சாப்பிடலாம்.

3. இறைச்சி:

இறைச்சி வகைகளை என்றுமே அரை நிலையில் சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கும். எப்போதும் செரிமானம் ஆகக்கூடிய இறைச்சி வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் காணப்படும் வயிறு கோளாறு பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமெனில் முறையான வகையில் வேகவைக்கப்பட்ட நல்ல இறைச்சியையே நீங்கள் உண்ண வேண்டும். 

என்ன இருக்கிறது?

இரத்தம் சொட்ட காணப்படும் பச்சை இறைச்சியில் டாக்சோ பிளாஸ்மா எனும் ஒட்டுண்ணி காணப்பட, இதனால் டாக்சோபிளாஸ்மாசிஸ் எனும் நோயும் பரவக்கூடும். இதன் காரணமாக குழந்தையின் வளர்ச்சியை தடுத்து கருச்சிதைவு ஏற்படுத்தவும் செய்கிறது. அத்துடன் அரை நிலையில் வேகவைக்கப்பட்ட இறைச்சியில் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய சல்மோனெல்லா இருக்கிறது. இதனால் கர்ப்பிணிகள் இந்த மாதிரியான இறைச்சிகளை உண்பதால் உணவு விஷமாகவும் மாறக்கூடும்.

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் எப்போதும் நன்கு வேகவைத்த உணவையே சாப்பிட வேண்டும். அத்துடன் வெளியில் சமைத்த இறைச்சிகளை உண்ண ஒருபோதும் முயலாதீர்கள். ஏனெனில், இறைச்சிகளின் ருசிக்கு ஏற்ப வெப்ப நிலையையும் மாறக்கூடும். எனவே வீட்டிலேயே நீங்கள் சமைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்த யோசனையாகும். மேலும் தரை இறைச்சியை வேகவைக்க 160 டிகிரி பேரன்ஹீட்டும், முழு இறைச்சியை வேகவைக்க 145 டிகிரி பேரன்ஹீட்டும், சிக்கன் மார்பை வேகவைக்க 165 டிகிரி பேரன்ஹீட் என்ற நிலையிலும் வைத்திடலாம்.

மேலும் படிக்க: கர்ப்பிணிகள் காரம் சாப்பிடுவதால் கருவிலிருக்கும் குழந்தை என்ன செய்யும்?

4. பச்சை பால்:

பச்சை பாலை கர்ப்பிணிகள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இந்த பாலில் இருந்து வெளியாகும் பச்சை வாடையின் மணம் தேவையற்ற குமட்டலை உங்கள் உடம்பில் உண்டாக்குகிறது. இந்த கொதிக்கவைக்கப்படாத பாலை நீங்கள் குடிக்கும்போது அது உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். 

பச்சை பாலில் என்ன ஆபத்து இருக்கிறது?

இந்த பச்சை பாலில் மிகவும் தீங்குவிளைவிக்கக்கூடிய மூன்று வகையான பாக்டீரியாக்கள் இருக்கிறது. அவை சால்மோனெல்லா, லிஸ்டேரியா. இ-கோலி, மற்றும் கிரிப்டோஸ்போரிடியம் ஆகும்.

என்ன செய்யலாம்?

கொதிக்க வைக்கப்பட்ட பாலை உபயோகிக்கலாம். இதனால் கொதிக்க வைக்கும் வெப்பநிலையின் காரணமாக பாலில் காணப்படும் பாக்டீரியாக்கள் அழிந்துபோகும். அத்துடன் பால் அற்ற சோயா பால், பாதாம் பால், ஓட்ஸ் பால் போன்றவற்றையும் நீங்கள் பருகுவதன் மூலமாக பாலில் இருக்கும் எல்லா ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் பெற முடிகிறது.

5. சுத்தம் செய்யப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகள்:

எப்போதுமே காய்கறி மற்றும் பழங்களை வாங்கும்போது மிகவும் கவனத்துடன் பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில், காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் சுத்தமாக இருக்கும்போது அதில் ரசாயனம் மேலே பூசப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இன்று சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இயற்கை முறையில் 100 சதவிகிதம் உற்பத்தி செய்யப்படுவது அல்ல. நாம் இன்று வெறும் சக்கையை மட்டுமே ருசித்து கொண்டிருக்கிறோம். 

காய்கறி மற்றும் பழத்தில் காணப்படும் இரசாயனம் எது?

நாம் சாப்பிடும் நெல்லிக்காயில் ஆப்பிள் பழத்தில் காணப்படும் சத்துக்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. ஆனால், இன்று இந்த இரண்டு பழத்திலுமே இத்தகைய சத்துக்கள் முழுமையாக இருக்கிறதா? என்பது யாரும் அறியாத இரகசியம். இன்று நாம் பிரெஷ்ஷாக வாங்கி உண்ணும் ஒவ்வொரு பழத்திலும், காய்கறியிலும் பலவித நச்சுக்கள் அடங்கி இருக்கிறது. இந்த காய்கறி மற்றும் பழங்களில் கால்சியம் கார்பைடு, எத்தோபான், ஆக்சிடோசின் போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்தது. கர்ப்பிணிகள் வாங்கி சாப்பிடும் காய்கறிகள் மற்றும் பழங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

எதற்காக இந்த இரசாயனங்கள் கலக்கப்படுகிறது?

காய்கறி மற்றும் பழங்களில் கெமிக்கலை அடிக்கும்போது அது கெட்டுப்போகாமல் அதிக நாட்கள் வரையில் இருக்கக்கூடும். இதனால் கடைகளில் காணப்படும் காய்கறிகள் எப்போது விளைந்தது? எப்போது மார்க்கெட்டுக்கு வந்தது? போன்ற எந்த விஷயங்களையும் நம்மால் அவ்வளவு எளிதில் தெரிந்துக்கொள்ள முடியாது. அத்துடன் இந்த இரசாயன கலப்பால் இயற்கையாக விளையும் ஒரு காய்கறி மற்றும் பழத்தின் தன்மை என்பது முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. ஓர் உதாரணத்திற்கு அந்த பழத்தின் சுவை குறைந்து போவதை சொல்லலாம்.

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் வாங்கும் காய்கறி மற்றும் பழங்களை கழுவாமல் பயன்படுத்துவதன் மூலம் டாக்சோ பிளாஸ்மா எனும் ஒட்டுண்ணி வளர, ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு தேவையற்ற பிரச்சனையையும் இதனால் தருகிறது. எப்போதும் காய்கறி மற்றும் பழங்களை நன்றாக கழுவி அதன்பிறகு உபயோகப்படுத்த வேண்டும். குறிப்பாக இலை வகை காய்கறிகளை நன்றாக கழுவிவிட்டு அதன்பின்னர் சமைப்பது நல்லது. ஏனெனில், இலை வகை காய்கறியில் தான் ஒட்டுண்ணிகள் அதிகம் ஒளிந்துக்கொண்டு இருக்கும்.

மேலும் படிக்க: கோடைகாலத்தில் குளிர்சாதனப்பெட்டியின்றி, காய்கறிகளை புதிதாக வைப்பது எப்படி?

6. காஃபின்:

பொதுவாக காஃபின் எடுத்துக்கொள்வது ஆற்றலை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இந்த காஃபின் என்பது ஒருவரை புதிய உலகத்தில் பிரயாணிக்க வைக்கக்கூடிய உணர்வை மனதளவில் தருகிறது. அதனால் அளவுக்கதிகமாக காஃபின் எடுத்துக்கொள்ளும்போது அதுவே பலவித பக்க விளைவுகளை கர்ப்பிணிகளுக்கு தந்து விடுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிகம் காஃபின் எடுத்துக்கொள்ளும்போது கருச்சிதைவுக்கு பெரிதும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர். எனவே நீங்கள் காஃபின் சாப்பிடுவதில் மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும்.

எதில் காஃபின் இருக்கிறது?

நீங்கள் தினசரி குடிக்கும் தேநீர், சாக்லேட் மற்றும் பிற ஆற்றல் பானங்களிலும் காஃபின் காணப்படுகிறது. ஒரு சில ஆய்வின் முடிவுப்படி காஃபின் அதிகம் உட்கொள்ளும் கர்ப்பிணி பெண்ணுக்கு பிறக்க போகும் குழந்தைகள் உடல் எடை, வளர்ச்சி குறைபாடு போன்றவையுடன் பிறக்கக்கூடும் எனவும் சொல்கிறது. 

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். காஃபின் நீக்கப்பட்ட பானத்தை மட்டுமே அருந்துவது மிகவும் நல்லது. இதை முதல் 3 மாதத்திலிருந்தே நீங்கள் பழக்கிக்கொள்ள இதனால் ஏற்படவிருக்கும் கருச்சிதைவை தவிர்க்கவும் முடியும்.

7. மூலிகை தேநீர்:

இந்த உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது இயற்கை தான். அந்த இயற்கை தந்த வரங்கள் எப்பேற்பட்ட நோய்க்கும் தீர்வை தர வல்லது. ஆனால், அளவுக்கு மிஞ்சி அந்த இயற்கையை இன்று நாம் தவறாக பருகுவதால் தான் எல்லா பிரச்சனையும் ஏற்படுகிறது. அதிலும் முக்கியமானது கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரை இன்றி எந்த மூலிகை மருந்தையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படி இருக்க, அதில் மூலிகை தேநீர் மட்டும் எப்படி அடங்காமல் போகும்.

கருச்சிதைவை ஏற்படுத்தும் மூலிகைகள் எவை?

கம்ப்ரெ (Comfrey), கருப்பு வாதுமை கொட்டை (black walnut), கஸ்காரா சிராடா, வெந்தயம், எச்சினாசியா (echinacea), கோல்டன் சீல், அதிமதுரம் வேர், சென்னா இலைகள், வார்ம்வுட் (கசப்பு மனமுடைய செடி) போன்ற இன்னும் பல மூலிகைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எது நல்லது?

மூலிகை தேநீர் எடுத்துக்கொள்வதற்கு பதிலாக தேநீர் மட்டுமே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் மூலிகை தேநீர் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கு ஆரோக்கியம் என நினைத்தாலும், மருத்துவரின் பரிந்துரை மிக மிக அவசியம். நீங்களாக எந்த மூலிகையையும் எடுத்துக்கொள்ள முயலாதீர்கள்.

8. பதப்படுத்தப்பட்ட உணவு:

கர்ப்பிணிகள் எப்போதும் இயற்கையான உணவை உட்கொள்வதே நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெமிக்கல் சேர்க்கப்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது. எனவே, இதனால் பல வித பிரச்சனையை கர்ப்பிணிகளுக்கு தரவும் கூடும். 

என்ன இருக்கிறது?

இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பிஸ் பீனால் ஏ Bisphenol A (BPA) என்பது காணப்படுகிறது. இது நச்சுத்தன்மை அடங்கிய ஒரு கெமிக்கலாகும். இதனால் கருவிலிருக்கும் குழந்தையின் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு முடங்கி போக, கருத்தரித்த பெண் பிரசவிப்பதற்குள் பல வித பிரச்சனையை சந்திக்கிறாள். குறிப்பாக புற்றுநோய், கல்லீரல் பிரச்சனை, இதய பிரச்சனைகள் கூட ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடும். இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பாக்டீரியாக்கள் தங்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது. 

எதை எல்லாம் தவிர்க்க வேண்டும்?

பதப்படுத்தப்பட்ட பாஸ்தா, சூப், குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவில் BPA அடங்கியிருக்கிறது. பதப்படுத்தப்பட்ட டூனா மற்றும் டூனா சாலட் போன்றவற்றையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் காணப்படும் அதிக மெர்குரி உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

என்ன செய்ய வேண்டும்?

BPA அற்ற ப்ரெஷ்ஷான காய்கறிகள், பழங்கள், மீன்கள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். பதப்படுத்தப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடும் முன் நன்றாக சுத்தம் செய்து அதன்பின்னர் பயன்படுத்தலாம்.

9. மிருதுவான பாலாடைக்கட்டி:

பாலாடைக்கட்டி மிகவும் நல்லது என எல்லோரும் கூறுவார்கள். ஆனால், கர்ப்பிணி பெண்கள் ஒரு சில காரணத்துக்காக மிருதுவான பாலாடைக்கட்டிகளை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். இல்லையேல் கர்ப்ப காலத்தில் தேவையற்ற பிரச்சனையை இதனால் உங்களுக்கு தரக்கூடும்.

என்ன இருக்கிறது?

மிருதுவான பாலாடைக்கட்டியில் லிஸ்டேரியா எனப்படும் கிருமி காணப்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் பாலாடைக்கட்டியில் இருக்க, கர்ப்பிணி பெண் உணவோடு எடுத்துக்கொள்வதன் மூலமாக அவள் உடலுக்குள் ஊடுருவுகிறது. அதன்பின்னர் அவள் உண்ணும் ஊட்டச்சத்தை தனக்கு அது உணவாக்கிக்கொள்ள, தேவையற்ற கிருமிகளையும் உடலில் பரப்பி ஒரு கர்ப்பிணி பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கி குழந்தையின் வளர்ச்சியையும் தடுக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

பாலாடைக்கட்டி சாப்பிட நீங்கள் நினைத்தால் கடினமான கட்டியை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். அதேபோல் நீர் தன்மையுடன் இருத்தல் கூடாது. இதனால் பாக்டீரியாக்கள் என்பது பாலாடைக்கட்டியில் குறைவாக காணப்பட, உடலுக்கும் எந்த தீங்கையும் விளைவிப்பதில்லை.

10. அலெர்ஜி தரும் உணவுகள்:

கர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு, அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது நல்லது. ஆம், ஒரு சில உணவை நாம் வழக்கமான நாளில் எடுத்துக்கொண்டாலும், கர்ப்ப காலத்தில் தேவையற்ற ஒவ்வாமை பிரச்சனையை அது ஏற்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது.

எந்த மாதிரி உணவை தவிர்க்க வேண்டும்?

சோயா, கோதுமை, பசு பால், முட்டை, வேர்க்கடலை, பாதாம், அக்ரூட் பருப்புகள், மீன் போன்றவை ஒருமுறை அலெர்ஜி ஏற்படுத்தும்போது மீண்டும் உண்ண முயலாதீர்கள். ஆனால் ஒரு சில ஆய்வின் முடிவுப்படி தெரியவருவது என்னவென்றால், அலெர்ஜி அற்ற உணவை நீங்கள் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.

மேலும் படிக்க: பிறக்கப்போகும் குழந்தையை கொழுகொழுவென ஆக்கும் 5 உணவுகள்..!

கர்ப்ப காலத்தில் நீங்கள் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் மிகவும் கவனம் செலுத்துங்கள். அந்த உணவில் என்னவெல்லாம் இருக்கிறது. எந்த சத்து என்ன பலனை தருகிறது? நச்சுக்கள் அடங்கிய உணவுகள் எவை? அவற்றை நாம் எவ்வளவு சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கும், உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது போன்ற பல விஷயங்களை பற்றி படித்தறியுங்கள். இறைவன் தந்த இயற்கையை சரியான முறையில் ஆராய்ந்து அதை சரியாக மட்டுமே நமக்கு தேவையான அளவு பயன்படுத்தி கொள்ள வேண்டும். இயற்கையை பாட்டிலிலும், பிளாஸ்டிக் கவரிலும் அடைத்து வைத்து பதப்படுத்தப்பட்ட உணவை உண்ணுவதில் எந்த வித பயனுமில்லை. கர்ப்பிணி பெண்கள் முடிந்தளவுக்கு இயற்கையை தேடி விரும்பி ஏற்றுக்கொள்வது எதிர்க்காலத்தை ஆளப்பிறந்த உங்கள் குழந்தைக்கும் தேவையான சக்தியை முற்றிலும் தருகிறது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon