Link copied!
Sign in / Sign up
15
Shares

கர்ப்பத்திற்கு பிறகு உடல் எடை குறைய வேண்டுமா?

பொதுவாக மனிதன் உடலில் காணப்படும் அசாதாரண மாற்றங்களுள் ஒன்று உடல் எடை ஆகும். ஆம், அதுவும் கர்ப்ப காலத்தில் உங்கள் எடை கூடவோ குறையவோ செய்ய, எப்போது மீண்டும் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்புவீர்கள் எனும் ஏக்கமும் இருக்கக்கூடும். ஆனால், கர்ப்பத்திற்கு பிறகு பல மடங்கு உடல் எடை கூட, அதிர்ச்சியின் எல்லையில் பயணிக்கும் நீங்கள் இந்த உடல் எடையை நாம் எப்படி தான் குறைக்க போகிறோம் என நினைப்பீர்கள். ஆனால், என்ன காரணத்தினால் உடை எடை அதிகரித்தது? எப்போது இந்த உடல் எடை அதிகரிப்பு மாற்றங்கள் உங்கள் உடலில் தொடங்கியது போன்றவற்றை யாருமே ஆராய்வதில்லை. அப்படி ஆராய்ந்தால் தெரியும் பல உண்மைகள் உங்களை திடுக்கிட வைக்கும். வாருங்கள் என்னுடன் சேர்ந்து நீங்களும் தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

ஏன் உடல் எடை கூடுகிறது?
எப்போது உடல் எடை கூடும்?
உடல் எடை அதிகரிப்பால் என்ன பிரச்சனை உண்டாகும்?
உடல் எடையை குறைக்க பொதுவான வழிகள் என்ன?
உடல் எடை குறைய உதவும் உணவுகள் எவை?
உடல் எடை குறைய தவிர்க்க வேண்டிய உணவுகள் எது?
உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்
உடல் எடை குறைய செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்

ஏன் உடல் எடை கூடுகிறது?

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது HCG எனப்படும் ஹார்மோன் உங்கள் உடலில் சுரக்கிறது. அதாவது கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் நஞ்சுக்கொடி மூலமாக HCG எனப்படும் இந்த ஹார்மோன் சுரக்க, உங்கள் உடலின் இரத்த ஓட்டத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது. இதனால் வளர்சிதை மாற்றம், செரிமான கோளாறு, ஆற்றல், ஊட்டச்சத்து பரிமாற்றங்கள் முதலியவை உங்கள் உடலில் உண்டாகிறது. இதனால் ஒரு பெண்ணின் உடல் எடை என்பது அதிகரித்த வண்ணம் பிரசவத்திற்கு பிறகும் இருக்கிறது.

மேலும் படிக்க: உடல் எடையை நினைத்து ஏன் கவலையடைகிறீர்கள்?

எப்போது உடல் எடை கூடும்?

மன அழுத்தம்:

புதிதாய் பிறக்க போகும் குழந்தையை எப்படி பராமரிக்க போகிறோம் எனும் மன குழப்பம் உடலில் வேதி வினையை புரிய செய்ய, கார்டிசோல் எனப்படும் ஹார்மோன் வெளியாகிறது. ஒரு பெண்ணுக்கு பசியின்மை ஏற்பட, இதனால் கொழுப்பும் உங்கள் உடலில் சேர, உடல் எடை கூடவும் செய்கிறது.

தைராய்டு:

கர்ப்பத்திற்கு பிறகு 5 முதல் 7 சதவிகித பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று தைராய்டு பிரச்சனை தான். இந்த காரணத்தால் ஹார்மோன் உற்பத்தி என்பது உங்கள் உடலில் காணப்பட, இதனால் உடல் எடை அதிகரிக்கவும் செய்கிறது.

உடல் எடை அதிகரிப்பால் என்ன பிரச்சனை உண்டாகும்?

அம்மாக்களுக்கு கர்ப்பகால நீரிழிவு பிரச்சனை இருக்குமெனில் பிறக்க போகும் குழந்தை உடல் எடை அதிகம் கொண்டு பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு மூச்சு தொந்தரவும் உண்டாகக்கூடும். 

மேலும் படிக்க: தவிர்க்க வேண்டிய 9 உடல் எடை குறைப்பு வழிமுறைகள்

உடல் எடையை குறைக்க பொதுவான வழிகள் என்ன?

1. போதிய தூக்கம்:

உங்களுக்கு சரியான தூக்கம் கிடைத்திட இதனால் கலோரிகள் எரிய உதவி செய்கிறது. ஒரு ஆய்வின்படி தெரியவருவது என்னவென்றால் உங்கள் உடல் அசைவற்று அமைதியாக இருக்கும்போது கலோரிகள் 5 மடங்கு அதிகம் எரிவதாக சொல்கிறது. அத்துடன் ஒருவருடைய தூக்கத்தை பொறுத்து உண்ணும் உணவின் உடல் எடை கொழுப்பு குறைவதும், கூடுவதும் அமைவதாக ஒரு ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. இதற்காக இரண்டு பேரை வைத்து சோதனை நடத்த, ஒருவர் இரவில் 8 மணி நேரம் 30 நிமிடங்களும், மற்றும் ஒருவர் இரவில் 5 மணி நேரம் 30 நிமிடங்களும் தூங்கி இருக்கிறார். அவர்கள் இருவருமே ஒரே அளவில் கலோரிகளை (1450 கலோரி/ நாளுக்கு) எடுத்துக்கொள்ள, இருவருடைய உடல் எடையிலும் மாற்றங்களும் காணப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க: இரவில் இவற்றை சாப்பிட்டால் உடல் எடை குறையும்..!

2. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டு:

அதாவது நாம் உண்ணும் உணவினால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தால் உடல் எடை அதிகரிக்க செய்கிறது. அதிலும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்வதால் தேவையற்ற உடல் எடை ஏற்றத்துக்கு வழிவகுக்கிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ஊட்டச்சத்து குறைபாட்டை தருவதோடு மட்டுமல்லாமல் தீவிர வளர்சிதை மாற்ற பிரச்சனைகளான நீரிழிவு நோய் மற்றும் இதய நோயையும் ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்துகிறது.

3. அதிக நார்ச்சத்து:

உங்கள் உடல் எடை குறைய நார்ச்சத்து அடங்கிய உணவு உதவுகிறது. அதாவது தேவையற்ற பாக்டீரியாக்கள் நம் உடலில் உருவாக, இதனால் உடல் எடை என்பது ஒரு பெண்ணுக்கு அதிகரிக்கிறது. ஆனால், நார்ச்சத்து அடங்கிய உணவை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது இதய நோய் முதலியவற்றை கர்ப்ப காலத்தில் தடுக்க முடிகிறது. அத்துடன் அதிகம் நார்ச்சத்தை நீங்கள் உங்களுடைய உணவோடு சேர்த்துக்கொள்வதன் மூலமாக உடலை பிட்டாக வைத்துக்கொள்ளவும் முடிகிறது.

4. யோகா பயிற்சி:

இந்த யோகா பயிற்சியின் முக்கிய நோக்கம் நாம் மன அமைதியை பெறுவது தான். ஆம், மன அமைதியை நாம் பெற்றாலே உடல் எடையை அதிகரிக்க செய்யும் ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்த முடியும். அடிப்படை மூச்சு பயிற்சியின் மூலமாக நம் உடல் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்ய முடிவதோடு அவற்றின் செயல்பாட்டையும் சிறந்த முறையில் இயக்க நம்மால் முடிகிறது. நம் உடலின் உள்ளே இருக்கும் அசுத்தங்கள் மூச்சு காற்று வழியாக வெளியாக, இதனால் உடல் எடையை குறைக்க முடிகிறது.

5. சர்க்கரை கட்டுப்பாடு:

ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் 16 கலோரிகள் இருக்கிறது. இதனால் சர்க்கரையை அதிகம் உட்கொள்ளும்போது தேவையற்ற உடல் எடை ஏற்றத்துக்கு இது வழிவகுக்கிறது. அத்துடன் சர்க்கரையை அதிகம் நீங்கள் சேர்த்துக்கொள்ளும்போது இதய நோய்க்கு கூட வாய்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.

6. ஜூஸுக்கு பதில் பழங்கள்:

உடல் எடை குறைய முக்கியமான காரணமாக இருப்பது நார்ச்சத்து உணவு தான். ஆனால், இந்த நார்ச்சத்தை சாறு பிழிந்து பருகும்போது நாம் இழந்துவிடுகிறோம். ஆம், பழத்தின் தோல் மற்றும் புற அமைப்புகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. நாம் பழத்தை சாறு பிழிந்து பருகும்போது இந்த நார்ச்சத்து தோலோடு சேர்ந்து சென்றுவிடக்கூடும். எனவே, பழத்தை ஜூஸ் போட்டு குடிப்பதற்கு பதில் கழுவிவிட்டு அப்படியே நறுக்கி தின்பது மிகவும் நல்லது. உடல் எடை குறையவும் உதவுகிறது.

மேலும் படிக்க: இந்த 10 பழங்களை சாப்பிட்டால் உடல் எடை குறையும்

7. மாதம் ஒரு முறை விரதம்:

விரதம் இருப்பதால் உடல் எடை குறைகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், விரதம் இருக்கும்போது உங்கள் உடலில் இருக்கும் கொழுப்புக்கள் ஆற்றலாக மாறுகிறது. அத்துடன் லிப்போ சிதைப்பு அதிகரிக்க, இன்சுலின் தன்மையும் உடலில் குறைகிறது. விரதம் இருப்பதால் கேட்டகாலமின் அதிகரிக்க, இது கொழுப்பை ஆற்றலாகவும் மாற்றுகிறது. ஆனால், விரதம் இருப்பவர்கள் ஆரோக்கியமான உணவை மட்டுமே உண்ண வேண்டும். அதுவும் கர்ப்பிணிகள் விரதம் இருப்பதில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

8. குளிர்பானங்கள்:

உடல் எடையை குறைக்க நீங்கள் ஆசைப்பட்டால் முதலில் திண்ம உணவை தவிர்த்து நீர்ம பானத்தை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், குளிர்பானங்களில் கொழுப்பு என்பது நீக்கப்பட, நீங்களும் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் எல்லா குளிர்பானங்களும் கொழுப்பு நீக்கப்பட்டதில்லை என்பதறிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கையான குளிர்பானத்தை மட்டும் பருகுங்கள். கடைகளில் விற்கும் செயற்கை பானங்களில் கொழுப்புடன் சேர்த்து பலவித கெமிக்கல்களும் இருக்கிறது.

9. புரதச்சத்து:

உடல் எடை குறைய பெரிதும் உதவக்கூடியது புரதச்சத்து அடங்கிய உணவுகள் தான். ஆம், நீங்கள் உணவில் புரதத்தை சேர்த்துக்கொள்ளும்போது இதனால் உங்களுடைய உடலின் தசைகள் தளர்வடைகிறது. அதிகம் புரதம் நிறைந்த உணவை நீங்கள் சேர்த்துக்கொள்வதன் மூலமாக உடல் எடையை குறைக்க முடியும். அத்துடன் புரதச்சத்தை நாம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் சேர்த்தே தருகிறது.

10. பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

எப்போதுமே இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் சுவையை தருவதோடு, மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ஒரு உணர்வை உண்ணுபவருக்கு சேர்த்து தரும். ஆனால், இதற்கு காரணமாக இருப்பது எல்லாமே செயற்கை முறையில் சேர்க்கப்படும் பொருள்கள் தான். எனவே, நீங்கள் திரும்ப உண்ணும்போது உங்கள் உடலில் கொழுப்பு சேர்கிறது. எனவே பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்தாலே உங்கள் உடல் எடையை மிக விரைவில் குறைக்க இயலும் என்கிறது பல ஆய்வு.

11. நடனம் ஆடுதல்:

இந்த நடனம் மூலமாக உடல் எடையை மிக அழகிய வழியில் உங்களால் குறைக்க முடிகிறது. ஆம், கலோரிகள் பெருமளவில் எரிய நடனம் மிகவும் உதவ, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பும் குறைந்து உடல் அழகிய தோற்றத்தை பெறுகிறது. 

12. விளையாட்டுத்தனம்:

உடல் எடையை குறைக்க உதவும் மற்றுமோர் வழி உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுத்தனமாக ஏதாவது செய்வது. ஸ்கிப்பிங் என்பது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவக்கூடிய ஒரு விளையாட்டாகும். ஆனால், தனியே நீங்கள் இந்த பயிற்சியில் ஈடுபடும்போது ஒரு சில நாட்களில் அலுத்து போகக்கூடும். எனவே, உங்கள் நண்பர்களுடன் போட்டி வைத்துக்கொண்டு யார் அதிகம் தாண்டுவது போன்ற சுவாரஸ்யமான விஷயத்தை செய்வதன் மூலமாக உங்கள் உடல் எடையை நீங்கள் குறைக்கலாம்.

13. நடைப்பயிற்சி:

உடல் எடை அதிகரிப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் சரியான இரத்த ஓட்டம் என்பது உங்கள் உடலில் இல்லாமல் இருப்பதே ஆகும். நீங்கள் நடக்கும்போது இந்த இரத்த அழுத்த கட்டுப்பாடு என்பது நீங்கி, சரியான அளவில் இரத்த ஓட்டம் என்பது காணப்படக்கூடும். உடல் எடையை குறைக்க காணப்படும் அருமையான வழிகளுள் ஒன்று நடைப்பயிற்சி செல்வதாகும். நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது தேவையற்ற உணவை உண்பதை தவிர்க்கவும் வேண்டும். ஆற்றல் நிறைந்த உணவை மட்டும் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

14. காஃபின் மற்றும் ஆல்கஹால்:

ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி அருந்துபவராக நீங்கள் இருந்தால் உடல் எடை குறையுமென்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம், அதிகம் காஃபின் மற்றும் ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும்போது உடல் பருமனாக பெரிதும் வழிவகுக்கிறது. காரணம், காஃபின் நீங்கள் சாப்பிடும்போது கார்டிசோல் ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. இந்த ஹார்மோன்கள் தான் ஒருவருடைய மன அழுத்தத்துக்கு முக்கிய காரணமும் கூட என்பதை நாம் முதலில் பார்த்தோம். எனவே உடல் எடையை குறைக்க விரும்பும் அம்மாக்கள் கண்டிப்பாக காஃபின் மற்றும் ஆல்கஹாலை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க: உடல் எடையை குறைக்க உதவும் தேநீர்

15. வெளியில் சாப்பிடுதல்:

இது கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாகும். ஆம், நாம் வீட்டில் சமைத்து உண்ணும்போது எவ்வளவு கொழுப்பு அந்த உணவில் இருக்கிறது போன்ற பொதுவான விஷயங்களை நாம் நன்கறிவோம். ஆனால், நீங்கள் வெளியில் உண்ணும் உணவில் கொழுப்பை அதிகம் சேர்ப்பார்கள். அதன்பிறகு அந்த கொழுப்பு வெளியில் தெரியாமலிருக்க இன்னொரு செயற்கை பொருளை சேர்த்து நமக்கு சுவையான உணவை மட்டுமே தருவார்கள். அது ஆரோக்கியமான உணவாக இருக்க வாய்ப்பு என்பது மிகமிகக்குறைவு. எனவே, வெளியில் நீங்கள் உண்பதை போதுமானவரை தவிர்ப்பது நல்லது.

16. குறைந்த கலோரி:

உங்கள் உடல் எடை குறைய காணப்படும் காரணங்களுள் ஒன்று குறைந்த கலோரி அடங்கிய உணவை நீங்கள் எடுத்துக்கொள்வதாலே ஆகும். நீங்கள் குறைந்த கலோரி கொண்ட உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் 3 முதல் 5 பவுண்ட் எடை வாரந்தோரும் குறைய அதிக வாய்ப்பிருக்கிறது. அதாவது 12 வாரங்களில் சராசரியாக 44 பவுண்ட் வரை உங்கள் எடையானது குறையக்கூடும். உடல் எடை அதிகம் இருக்கும்போது நீரிழிவு, உயர் இரத்த அழுத்த பிரச்சனை, அதிக கொலஸ்ட்ரால் என பல பிரச்சனையை தரக்கூடும்.

17. குழந்தைகளுக்கு தாய்ப்பால்:

உங்கள் உடல் எடை குறைய குழந்தைகளுக்கு தரப்படும் தாய்ப்பாலும் உதவுகிறது. ஆம், நீங்கள் தாய்ப்பால் தரும்போது கர்ப்ப காலத்தில் தேங்கிய கொழுப்பு செல்கள் யாவும் பெரிதும் உதவ, கொழுப்பு குறைந்து உடல் எடை குறையவும் உதவுகிறது. அதனால் தாய்ப்பால் தரும்போது கூடுதலாக 300 முதல் 500 கலோரி வரை ஒரு நாளைக்கு நீங்கள் எடுத்துக்கொள்ள ஆற்றல் மற்றும் பால் உற்பத்திக்கும் இது உதவுகிறது.

18. ஒழுக்கமாக இருத்தல்:

இந்த ஒழுக்கம் எனும் வார்த்தை ஒருவரின் நடத்தையை மட்டுமே குறிப்பதல்ல. அதையும் தாண்டிய பழக்கவழக்கத்தை முக்கியமாக குறிக்கிறது. ஆம், உடல் எடை அதிகரித்த பின்னர் உங்களுடைய தூக்கம், உணவு முறை, உடற்பயிற்சி என அனைத்திலும் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். அப்படி இருக்கும்போது உங்கள் உடல் எடை என்பது மிக விரைவில் குறைந்து அழகிய உடல் தோற்றத்தையும் நீங்கள் பெறக்கூடும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வதுகூட ஒழுக்கத்தை சேரும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

19. உண்ணும் உணவு:

கீரை போன்ற உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது உடல் எடை குறைய உதவுகிறது. இந்த உணவுகளில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட்டு குறைவாக இருக்க, நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. நம் உடலுக்கு நார்ச்சத்து என்பது அதிகம் தேவைப்பட, நீங்கள் எடுத்துக்கொள்ளும் அளவும் அதற்கு ஏற்ப இருத்தல் வேண்டும். கீரையை உங்கள் உணவோடு வாரந்தோரும் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் கூடிய எடை குறையவும் செய்கிறது.

20. உடற்பயிற்சி:

இது என்றுமே அழியாத ஒரு பழக்கவழக்கமாகும். நாம் காலையில் எழுந்து நடப்பது முதல் தாண்டும் ஸ்கிப்பிங் வரை என இந்த உடற்பயிற்சி குணம் என்பது ஒவ்வொரு மனிதன் உடலையும் தினசரி வாழ்க்கையில் வலுப்படுத்தி கொண்டே செல்கிறது. அப்படி இருக்க, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது கூட ஒரு வகை உடற்பயிற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே, பெண்கள் செய்யும் அன்றாட வேலை மற்றும் முறையான உடற்பயிற்சி மூலமாகவும் கூடிய உடல் எடையை குறைத்திடலாம்.

21. ஆரோக்கியமான உணவுகள்:

நீங்கள் உண்ணும் உணவில் எந்த அளவுக்கு சத்துக்கள் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு உண்பது மிகவும் நல்லது. காரணம், நாம் அன்றாட உண்ணும் உணவில் சுவை மட்டும் தான் இன்று இருக்கிறது. ஒரு பழமொழி ஒன்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் விரும்புகிறேன். எந்த ஒரு உணவில் சுவை அதிகமிருக்கிறதோ, அந்த உணவில் சத்துக்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். ஏனெனில், சத்துக்களில் முதன்மையானது நார்ச்சத்து. இந்த நார்ச்சத்து என்பது பழம் மட்டும் காய்களின் தோல்களில் அதிகம் காணப்படுகிறது. ஆனால், இந்த தோல்கள் சுவையாக ஒருபோதும் இருப்பதில்லை. இன்றைய நாளில் நாம் நன்றாக வேகவைத்து வெறும் சக்கையை மட்டும்தான் உண்கிறோம். இதற்கு காரணம், கலக்கப்படும் கெமிக்கலும் கூட...

உடல் எடை குறைய உதவும் உணவுகள் எவை?

1. முட்டை

2. கீரைகள்

3. சால்மன் மீன்

4. குறுக்கு வெட்டு தோற்ற காய்கறிகள்

5. மெல்லிய மாட்டிறைச்சி மற்றும் சிக்கன் மார்பகம்

6. வேகவைத்த உருளைக்கிழங்கு

7. சூரை மீன்

8. பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

9. சூப் வகைகள்

10. அவகடோ

11. ஆப்பிள் சிடர் வினிகர்

12. முழு தானியங்கள்

13. பழங்கள்

14. சியா விதைகள்

15. தேங்காய் எண்ணெய்

உடல் எடை குறைய தவிர்க்க வேண்டிய உணவுகள் எது?

1. சிப்ஸ் வகைகள்

2. இனிப்பு அதிகம் கொண்ட பானங்கள்

3. வெள்ளை ப்ரெட்

4. சாக்லேட்

5. அதிகம் பழச்சாறு பருகுதல்

6. கேக் வகைகள்

7. ஆல்கஹால் (குறிப்பாக பீர் குடிப்பதை தவிர்க்கவும்)

8. ஐஸ் க்ரீம்

9. பீட்சா

10. கலோரி அதிகம் அடங்கிய காபி குடிப்பது

உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்:

1. லங்கீஸ்

முதலில் உங்கள் இருகைகளால் இடுப்பை தாங்கிக்கொள்ளுங்கள்.

அதன்பின்னர் மெல்ல வலது காலை வளைத்து முன் நோக்கி கொண்டு வர வேண்டும்.

பின்னர், அந்த காலை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து இடது காலை இப்போது முன்னோக்கி வளைத்து கொண்டு வாருங்கள்.

உங்கள் கால்கள் வந்து செல்வது 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும். அதாவது நேராக இருக்க வேண்டும்.

அதேபோல் இருகால்களும் முன்னும் பின்னும் வரும் அளவும் சமநிலையில் இருக்க வேண்டும்.

2. ஸ்க்வாட்:

முதலில் இரு கால்களையும் இடைவெளியுடன் அகன்று விரித்து கொள்ளுங்கள்

நீங்கள் மெல்ல குந்தும்போது கைகள் இரண்டும் மார்பளவுக்கு நேராக இருத்தல் வேண்டும்.

மீண்டும் நிமிரும் போது கைகளை சாதாரணமாக கீழ் நோக்கி நேராக விட்டுவிடுங்கள்.

உடல் எடை குறைய செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்:

நீங்கள் உடல் எடை குறைய செய்யும் உடற்பயிற்சிகளை வல்லுனர்களின் உதவி மற்றும் ஆலோசனையுடன் செய்வது நல்லது. ஏனெனில், உடல் எடை குறைய நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகளை சரியாக செய்யாமல் தவறாக பின்பற்ற இதனாலே பலவித பக்கவிளைவுகளை ஒருவர் சந்திக்க நேரிடும். எனவே, நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது எந்த உடற்பயிற்சியினால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றத்தை பெற முடியும் போன்ற விஷயங்களை தெளிவாக முதலில் அறிய வேண்டும்.

மேலும் படிக்க: உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க!

உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்துவது உங்கள் உடல் எடை தான். ஆம், கொழுப்பு அதிகமாக உடலில் தங்கிவிட்டால் உங்கள் உடல் வழக்கத்தை விட குண்டாக இருக்கக்கூடும். அதுவும் கர்ப்பிணிகள் தங்களுடைய கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ளும் ஒரு சில உணவை அவர்கள் உடல் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி இருக்க, அதுவே கொழுப்பாக மாறி தேவையற்ற உடல் பருமனை ஒருவருக்கு தருகிறது. எனவே, சத்தான உணவுகளை மருத்துவரின் பரிந்துரையுடன் நீங்கள் எடுத்துக்கொள்வதன் மூலமாக இந்த தேவையற்ற உடல் எடையை தவிர்ப்பதோடு, பிள்ளை பேறுக்கு பின்னரும் ஆரோக்கியமாக வாழ்ந்திடலாமே...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon