Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்பகாலத்தில் மீன் உண்பதால் கருவிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் மீன் உண்ணலாம்; உண்ணக்கூடாது என்ற மாறுபட்ட கருத்துக்கள் மக்களிடையே நிலவி வருகின்றன; மேலும் கர்ப்பிணி மீன் உண்பதால், குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற பயமும் நம்மூர் பெண்களிடையே நிலவி வருகிறது. பெண்களின் இந்த பயத்தைப் போக்க, கர்ப்பகாலத்தில் மீன் உண்பதால் கருவிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு விடை அளிக்கவே இந்த பதிப்பை, தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்! படித்து பயனடைவீராக தோழியரே!!

நான் ஒரு கர்ப்பிணி, நான் மீன் உண்ணலாமா? [I Am Pregnant, Should I Eat Fish?]

இந்த மாதிரியான கேள்விகள் உங்கள் மனதில் எழுகின்றனவா, கர்ப்பிணிகளே! இந்த கேள்விக்கான சரியான விடை, நேரடியான விடை என்னவாக இருக்கும் என்றால், ஆம் நீங்கள் உண்ணலாம்; கட்டாயம் நீங்கள் உண்ண வேண்டும் என்பதே! ஆனால், நீங்கள் சரியான மீனை தேர்ந்தெடுத்து, உட்கொள்ளல் வேண்டும்; அதையும் அளவாக உட்கொள்ளல் வேண்டும். குழந்தை கருவறையில், ஆரோக்கியமாக வளர மீனில் உள்ள வைட்டமின் டி போன்ற விட்டமின்களும், புரதங்களும், ஊட்டச்சத்துக்களும் மிகவும் அவசியம்; மேலும் மீனில் உள்ள, வேறெந்த உணவிலும் எளிதில் கிடைக்காத, நிறைவூட்டப்பட்ட கொழுப்பு அமிலங்களான EPA மற்றும் DHA, கருவின் வளர்ச்சியில் மிக மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவர்களும் மீனில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் காரணமாக, கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களிலேயே மீனை உட்கொள்ள பரிந்துரை செய்கின்றனர்.

மீனிலுள்ள மெர்குரி [Mercury in Fish]

மெர்க்குரி என்பது தண்ணீரில், காற்றில் என எங்கும் கலந்திருக்கும் ஒரு வேதிப்பொருள்; இது நவீனமயமாக்கல், தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் புகைகள், ஆறு மற்றும் கடல்களில் கலக்கப்படும் தொழிற்சாலை கழிவுகள், வாகனக் கழிவுகள் மற்றும் புகைகள், அணுமின் ஆலைகள், வெப்ப ஆற்றல் நிலையங்கள், இதர நவீன தொழில்நுட்பங்கள் போன்றவற்றால், இந்த வேதிப்பொருள் காற்றில், நிலத்தில், நீரில் என கலக்கப்படுகிறது. நீர்வாழ் உயிரினங்கள், இந்த மெர்குரி கலந்த நீரை பருகி, இந்நீரில் சுவாசித்து வளர்ந்து வருகின்றன; இப்படிப்பட்ட உயிரினங்களான மீன்களே நமக்கு உணவாக விற்கப்படுகின்றன.

இவ்வாறு மெர்குரி கலந்த அல்லது மெர்குரியை கொண்ட மீன்களை சாதாரண மனிதர்கள், கர்ப்பிணிகள் என எவர் உண்டாலும் அது, அவர்தம் உயிருக்கு ஆபத்தே! மேலும் நாம், இன்றைய காலத்தில், கடலில் பிடித்து வந்த மீன்களை உடனே வாங்கி, சமைத்து உண்பதில்லை; மீன்களை பதப்படுத்தியே விற்கின்றனர். இவ்வாறு மீன்களை பதப்படுத்த சேர்க்கப்படும் வேதிப்பொருட்களும், அதில் இயற்கையாகவே கலந்திருக்கும் மெர்குரியும் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும் விஷம் போலாகி அழித்துவிடும் தன்மை கொண்டவை.

இந்த வேதிப்பொருட்கள் கொண்ட மீனை, உணவினை கர்ப்பிணிகள் உட்கொண்டால், இவை குழந்தைகளுக்கு நரம்பு மண்டல மற்றும் மூளை தொடர்பான பிரச்சனைகளை, பலவித உடல் ஆரோக்கிய அசௌகரியங்களை ஏற்படுத்தி, உங்கள் குழந்தையின் உயிருக்கே உலை வைக்கலாம்; எனவே, பிறக்கும் முன்னேரே, குழந்தையை அழிக்கும் இந்தக் காரியத்தை கர்ப்பிணிகள் செய்ய வேண்டாம். ஆனால், கர்ப்பிணிகள் மீன் உண்ண வேண்டியதும் மிகவும் அவசியம். ஆகையால், ஒரு குழந்தைக்கு தாயாகப் போகும் கர்ப்பிணிகள், குறைந்த அளவு மெர்குரி கொண்ட அல்லது மெர்குரியே இல்லாத மீனை உண்ணலாம்.

கர்ப்பகாலத்தில் எவ்வளவு மீன் உண்ணலாம்? [How Much Fish Should you Eat when pregnant?]

ஒவ்வொரு வாரமும், கர்ப்பிணி பெண்கள் 8 - 12 ounces அதாவது 226 - 340 கிராம்கள் அளவுள்ள, குறைந்த அளவு மெர்குரி கொண்ட மீன்களை உட்கொள்ளல் வேண்டும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பாலூட்டும் பெண்கள் கூட இந்த அளவு மெர்குரி குறைந்த அளவு கொண்ட மீன்களை உண்பது தாய்ப்பால் சுரப்புக்கு உதவும்.

அதிகளவு மெர்குரி கொண்ட மீன் உண்டால் என்ன ஆகும்? [Risks of Getting Too Much Mercury while Pregnant]

மீத்தைல்-மெர்குரி அதிகம் கொண்ட மீனை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொண்டால், அது பிறக்கப்போகும் கருவின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்; அதாவது குழந்தையின் பார்க்கும், கேட்கும், பேசும் திறன் மற்றும் தொடு உணர்வுகள் போன்றவை பாதிப்படையலாம். ஆகையால், கர்ப்பிணி பெண்கள் எவ்வளவு மீன் உண்கின்றனர் என்பது முக்கியம், கவனித்து உட்கொள்ளுங்கள்.

உங்களை அறியாமல், அதிகம் மெர்குரி கொண்ட மீன்களை உண்டுவிட்டால், மருத்துவர் மாத்திரைகள் மூலம் அதை சரிப்படுத்த முயல்வர்; ஆனாலும் முடிந்த அளவு நீங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது.

மீன் உண்பதால் ஏற்படும் நன்மைகள்! [Health Benefits of Eating Fish during Pregnancy]

கர்ப்பிணி பெண்கள் மீன் உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து படித்தறியுங்கள்;

1. கர்ப்பகாலத்தில் மீன் உண்பது கருவின் வளர்ச்சிக்கு, அதன் உடல் உறுப்புகள் மற்றும் தசைகள் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

2. சால்மன் மீன் போன்ற மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் DHA கருவின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

3. மீன் உண்பது, கர்ப்ப காலத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், இரத்த அழுத்தம், அதிக பதற்றம், மாரடைப்பு, இரத்தத்தின் கொழுப்பு மற்றும் உணர்ச்சி மாற்றங்களை கட்டுப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வைக்க உதவும்.

4. பிரசவத்தை எளிதானதாகவும், சுகமானதாகவும் மாற்ற மீனில் உள்ள சத்துக்கள் உதவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon