Link copied!
Sign in / Sign up
2
Shares

கர்ப்பகாலத்தில் அந்தரங்க முடிகளை அகற்றலாமா?

கர்ப்பகாலத்தில் அந்தரங்க பகுதி முடிகளை அகற்றலாமா கூடாதா என்ற சந்தேகம் பல பெண்களின், கர்ப்பிணிகள் பலரின் மனதில் இருந்து வருகிறது. இந்த குழப்பமான கேள்வி பற்றிய உண்மை நிலையை இந்த பதிப்பில் அளித்துள்ளோம். இப்பதிப்பை படித்து, மற்ற கர்ப்பிணிகளுக்கும் உதவ, பதிப்பை பரப்புவீராக!

கர்ப்பகாலம்!

கர்ப்பகாலத்தின் எந்த நேரத்திலும் நீங்கள் உங்கள் அந்தரங்க முடியை அகற்றலாம்; ஆனால், மிகவும் சுகாதாரமான கருவிகளை பயன்படுத்தி, முடியை நீக்க வேண்டும். இது குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசித்து, தேவையான ஆயின்மெண்ட்களையும் கூட பெறலாம்.

பிரசவ நாள்!

பிரசவ நாளின் போது, குழந்தையை பிரசவிக்கும் தருணத்தின் முன் மருத்துவமனை செவிலியர் உங்கள் அந்தரங்க முடியை அகற்றுவர்; ஏனெனில் குழந்தை பிறக்கும் போதும், தையல் போடும் போதும் எந்தவித தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதற்காக!

--> காரணம் - 1:

குழந்தை பிறக்கையில் சுகாதாரமானதாக உங்கள் பிறப்புறுப்பு இருக்க வேண்டியது அவசியம்; முடிகள் இருந்தால் நுண்கிருமிகள் அங்கு இடம் பெறும். எனவே, முடியை அகற்றி, நுண்கிருமிகளை அழித்து, பிறப்புறுப்பை சுத்தம் செய்து, பின் பிரசவம் பார்க்கின்றனர் மருத்துவர்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு கூச்சமாக தான் இருக்கும்; இருந்தாலும் அதை பதட்டப்படாமல் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்.

--> காரணம் - 2:

பிரசவம் முடிந்து தையல் போடும் போது, முடிகள் இருந்தால் தொந்தரவாக இருக்கும்; எனவே, அவற்றை அப்புறப்படுத்திவிட்டு தையல் போடுவது மிகவும் நல்லது.

பிரசவத்தின் பின்!

பிரசவம் முடிந்த பிறகு குறைந்தது 1 மாதமாவது அந்தரங்க முடியை அகற்றாமல் அதாவது தையல் மற்றும் அறுவை சிகிச்சை புண்கள் ஆறும் வரை முடியை அகற்றாமல் இருப்பது நல்லது. தவறி புண் அல்லது தையல் பிரிந்துவிட்டால் சிக்கலாகி விடும். எனவே, இந்த சமயத்தில் முடியை சேவ் செய்யாமல், ட்ரிம் செய்வது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon