Link copied!
Sign in / Sign up
16
Shares

கருக்கலைப்பு-அபார்ஷனுக்கு பின் மீண்டும் கருத்தரிப்பது எப்படி?

திருமணமான பெண்களின் வாழ்க்கையை சந்தோஷமாக்குவது குழந்தை தான்; அப்படி சந்தோஷத்தை அள்ளிக்கொடுக்கும் செல்வமான குழந்தை உண்டாகி, பின் அது இல்லாமல் போய்விட்டால், அதாவது அபார்ஷன் - கருவானது கலந்துவிட்டால், அந்த கர்ப்பிணி பெண்ணும் கலங்கிவிடுவாள்; கண்ணீரில் கரைந்துவிடுவாள். அவ்வாறு கருக்கலைப்பிற்கு பின், மீண்டும் எப்பொழுது கருத்தரிப்போம் என்று காத்திருப்பாள், கர்ப்பிணி; ஆகையால், கருக்கலைப்பு நிகழ்ந்த பின் மீண்டும் கருத்தரிக்க சிறந்த நேரம் எது? என்னென்ன செய்ய வேண்டும் என்பன பற்றி இந்த பதிப்பில் படித்தறிவோம்.!    

மறை கருச்சிதைவு

குழாயில் கருமுட்டைகளை கருத்தரிக்க வைத்து, பின் கருப்பைக்குள் செலுத்தும் போது, இந்த மறை கருச்சிதைவு ஏற்படும்; இதற்கு கரு முட்டையின் வளர்ச்சி தவறுதல், கருப்பை காலியாக இருப்பது, கருமுட்டை வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் திடீரென்று பாதிக்கப்படுதல் போன்றவை காரணமாகலாம். இது அமைதியான கருச்சிதைவு என்றும் அழைக்கப்படுகிறது; இது அல்ட்ரா சவுண்ட் சிகிச்சையின் மூலம் கண்டறிய உதவும்.

அறிகுறிகள்

பொதுவாக கருச்சிதைவின் போது, கடுமையான வலி, உதிரப்போக்கு, கருப்பை திசு வெளியேற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

கருச்சிதைவு ஏற்பட்டவுடன் செய்ய வேண்டியவை!

கருச்சிதைவால் கருப்பையில் தங்கிய கழிவுகளைப் போக்க, அதாவது கருத்திசுக்கள் கருப்பையிலிருந்து முற்றிலும் வெளியேற்றப்பட வேண்டும்; இவை வெளியேற்றப்படவில்லை எனில், இதனால், நோய்த்தொற்று மற்றும் அதிகமான உதிரப்போக்கு ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகிறது. 

மீண்டும் கருத்தரிப்பது எப்படி?

மறை கருச்சிதைவிற்கு மரபணு அசாதாரணம் தான் காரணம்; இது கருவால் ஏற்படுவது மட்டும் தான்; இதற்கு தாய் அல்லது தந்தை ஆகிய இருவரும் காரணமானவர்கள் இல்லை.

மறை கருச்சிதைவிற்கு பின் பெண்ணால், இயல்பான மற்ற பெண்களைப் போல் பிரசவ காலத்தை அனுபவிக்க இயலும்.  மருத்துவரின் அறிவுரைப்படி நீங்கள் நடந்து கொள்வதால், நிச்சயமாக கருச்சிதைவிற்கு பிறகு கர்ப்பம் உண்டாகும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon