Link copied!
Sign in / Sign up
0
Shares

அறிமுக படத்தில் பார்த்த ஓவியாவா இது! அசந்து போன தஞ்சாவூர் மக்கள்!

விமலுக்கு எவ்வளவு திரைப்படம் வந்தாலும் வெற்றியை தேடி தந்த ஒரு திரைப்படம் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த களவாணி தான். அதுவும் எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி வெளியான இத்திரைப்படம் வசூல் வேட்டையில் விமலுக்கு என தனி இடத்தை தமிழ் சினிமாவில் தேடி தர, மீண்டும் கைக்கோர்க்க முடிவு செய்த விமல் வாகை சூட வா எனும் திரைப்படம் மூலம் சற்குணத்தின் இயக்கத்தில் நடித்தார். ஆனால், களவாணி திரைப்படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பின் தாக்கம் மக்களை திரையரங்கு வாசலில் நிற்க வைத்தது.  

களவாணியில் முழுக்க முழுக்க கிராமத்து காமெடி வாடை வீச, வாகை சூட வா திரைப்படத்தில் கல்வியின் முக்கியத்துவ மனம் காண, விருதுகளை அள்ளி சென்றனர் விமலும், இயக்குனர் சற்குணமும். கல்வி என்றால் என்ன என தெரியாத செங்கல் சூளை வாழ்க்கையை செதுக்கி குழந்தையின் மனநிலையை அழகாக பதிவு செய்தார் இயக்குனர் சற்குணம்.

களவாணி திரைப்பட ஷூட்டிங்கின் போது ஓவியாவுக்கு என எந்த ஒரு அடையாளமும் பெரிதாக இருக்கவும் இல்லை. அதன்பிறகும், மதயானை கூட்டம், யாமிருக்க பயமேன் என பல படங்களில் நடித்த போதும் ஓவியாவின் மார்க்கெட் பெரிதாக ஒன்றும் ஏறவில்லை. அதேபோல் மக்கள் மனதிலும் தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடிக்கவில்லை.

ஆனால், கமல் தொகுத்து வழங்க பலவித விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார் ஓவியா. அவருடைய வெகுளி தனமான நடவடிக்கையும், வித்தியாசமான அணுகுமுறையும், அந்த வீட்டில் அவர் வாழ்ந்த 100 நாள் வாழ்க்கையும் ஓவியாவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்ட அவருடைய சிறுபிள்ளை தனத்தை அனைவரும் ரசித்தனர்.

அப்போதுதான் களவாணி திரைப்படத்தின் அறிமுக காட்சி குறும்பு தான் ஓவியாவின் உண்மை முகம் என்பது எல்லோருக்கும் தெரியவந்தது. பிக்பாஸ் வீட்டிலிருந்தபடியே தனக்கென தனி கூட்டத்தை ஓவியா சம்பாதிக்க., ஹீரோ இல்லாமல் ஓவியாவை வைத்தே கல்லாக்கட்டிவிடலாம் என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மனதில் எண்ணமும் எழுந்தது.

ஓவியாவுக்கு காக்கி சட்டை உடுத்தி அழகு பார்க்க, டிரெண்டிங்கில் டாப் இடத்தை பிடித்தார் பிக்பாஸ் ஓவியா. அவருக்கு என தனிப்பட்டாளமும் கிளம்ப, அதற்கு ஓவியா ஆர்மி எனவும் பெயர் வைத்து அழகு பார்த்தது. அவருடைய பெயரில் அன்னதானம் என அல்டிமேட் லெவலில் ரகளை செய்தனர் ஓவியா ரசிகர்கள்.

இந்த நிலையில் விமலுக்கோ திரைப்படங்கள் பெரிதாக ஒன்றும் அமையாததால் திட்டமிட்டபடி களவாணி இயக்குனருடன் மீண்டும் கை கோர்க்க, அதுவும் களவாணியின் இரண்டாம் பாகமாக அமைந்தது. எதிர்பார்ப்பின்றி எகிறி அடித்த களவாணி திரைப்படத்தின் முதல் பாக தொடர்ச்சி மீண்டும் தஞ்சாவூரிலே என்றதும் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதற்கு முக்கிய காரணம்., பிக்பாஸ் ஓவியா. போனமுறை அறிமுக நடிகையாக தஞ்சாவூரை வலம் வந்த ஓவியா, இந்த முறை ஷைனிங் ஸ்டாராக வலம் வர தொடங்கி இருக்கிறார். 

களவாணி - 2 திரைப்படத்தில் ஓவியாவுக்கு மிகவும் கச்சிதமான கனமான வேடம் என்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் பல மடங்கு பெருகி இருக்கிறது. மீண்டும் ஓவியா தஞ்சாவூரில் கால் தடம் பதிக்க, அவரை தேடி வந்து அவ்வூர் மக்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனராம். ஓவியாவும் எந்த வித கர்வமுமின்றி அவர்களுடன் நெகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக்கொண்டு நடிக்க தொடங்கி இருக்கிறாராம்.

உயரத்தை தொட்டாலும் ஓவியா! ஓவியா தான் என அவ்வூர் மக்கள் புகழாரம் பேச தொடங்கிவிட்டனர்.

பிக்பாஸ் சீசன் 2 வில் மீண்டும் ஓவியா பங்கேற்றாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon