Link copied!
Sign in / Sign up
1
Shares

ஐ.பி.எல் பைனல் - கோப்பை வாங்கிய தோனி என்ன செய்தார் தெரியுமா!

நேற்று பரப்பரப்பாக நடந்த இறுதி போட்டியில் வாட்சனின் அபார ஆட்டத்தால் சென்னை அணி மூன்றாவது முறையாக தோனி தலைமையில் கோப்பையை வென்றது. கேப்டன் கூல் என அழைக்கப்படும் தல தோனி வாழ்க்கையிலும் பலருக்கு ரோல் மாடலாக விளங்குபவர் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எப்படித்தான் இவர் எப்போதும் கூலாக இருக்கிறார். அவரை சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா! 

தல தோனி எப்போதும் விளையாட்டையும், வாழ்க்கையையும் ஒரே மாதிரி பார்ப்பவர் அல்ல. அட ஆமாங்க, அவருடைய விளையாட்டில் வெற்றியோ - தோல்வியோ., ஸ்டேடியத்துடன் அது சென்றுவிடும். வீடு என வந்துவிட்டால் மனைவி - குழந்தை என அவர் முற்றிலும் வேறு மன நிலையுடன் இருந்திடுவாராம்.

அவருடைய இன்ஸ்ட்டாகிராமில் வலம் வரும் புகைப்படங்கள் யாவும் தோனியின் வெகுளித்தனத்தையும், ஒரு அப்பாவாக மகளிடம் காட்டும் அக்கறையையும் அவ்வளவு அழகாக காட்டுகிறது. அந்த வரிசையில் தோனியின் ஐ.பி.எல் வெற்றிக்கு இன்னொரு முக்கியமான காரணம் அது அவருடைய மகள் ஷிவா தான்.

கேப்டன் கூல் என தோனி அழைக்கப்பட முக்கியமான காரணம், அவர் வெற்றி - தோல்வியை சாதாரணமாக எடுத்துக்கொள்வதால் மட்டுமல்ல. தன் அணியின் சக வீரர்களுக்கு தேவையான சுதந்திரம் தந்து அவர்கள் போக்கில் தானும் செல்வது தான். இன்றுவரை வெளி நாட்டு வீரர்களுக்கு கூட ஒரு கனவாக இருப்பது தோனி தலைமையில் விளையாட வேண்டும் என்னும் எண்ணம் தான்.

எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன்கள் கொண்ட டீமும் தோனி டாஸ் ஜெயித்து பவுலிங் தேர்ந்தெடுக்க ஒரு நிமிடம் பின்வாங்கும். அது தான் அவருடைய பலம். எந்த விளையாட்டு வீரரை எப்படி அவுட் ஆக்க வேண்டும் என்ற வித்தையை நன்கு கற்றவர் தான் நம்ம தல தோனி. அந்த வரிசையில் நேற்று சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்டை கையாண்ட விதமும் மிக அற்புதம். 

இன்றைய நாளில் பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தோனி இருப்பது தான் மிகப்பெரிய பக்க பலம் என அவர்கள் வாயினால் கூறுவதை எத்தனையோ முறை நாம் கேட்டதுமுண்டு. அதேபோல் வெற்றி என வந்தால் ஆடாதவர். தோல்வி என வந்தால் வாடாதவர். கோப்பை வென்றால் அவரை நீங்கள் போட்டோவின் ஒரு ஓரத்தில் பார்க்கலாம். ஆம், தனக்கும் அந்த கோப்பைக்கும் எதுவும் சம்பந்தமில்லாதது போல் அவர் நிற்பார். அதுவே தோல்வி என வரும்போது தன் மீது தவறு இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்.

நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கோப்பையை வெல்ல வழக்கம் போல் எல்லா பிளேயர்களும் உற்சாகத்தின் எல்லையில் இருந்து வந்தனர். ஆனால், தல தோனியோ ஒரு ஓரமாக தன் மகளுடன் வெற்றியை கொண்டாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அத்துடன் இதுவரை இல்லாத அளவுக்கு கோலாகலம் நிரம்ப ஐ.பி.எல் முடிவு பெற, அதை அழகாக்கியது நம் சென்னை பிளேயர்களின் குழந்தைகளால் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

சி.எஸ்.கே அணி ஜெயித்தவுடன் எங்கும் வண்ணமயமாக காட்சியளிக்க அதை ரசித்த தோனி மகள் ஷிவா, உற்சாகம் பொங்க விளையாட, தோனியும் மற்ற வீரர்களுடன் கொண்டாடுவதை மறந்து குழந்தைக்காகவே குதூகலத்தில் இறங்கினார்.அதேபோல் ஷிவாவின் சேட்டைகள் சி.எஸ்.கே அணியில் உள்ள அனைவருக்கும் பிடித்து போக, இந்த ஐ.பி.எல் சீசனில் அவர்களும் தோனி மகளுடன் விளையாடி நம்ம தல தோனி போல் கூலாக இருந்தனர்.

சி.எஸ்.கே வெற்றிக்கு இது எல்லாமே காரணம் என கூறலாம். குழந்தைகள் இல்லா வீடு அழகாக இருக்காது. அதேபோல், இந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி கோப்பையை வெல்ல மற்றுமோர் முக்கியமான காரணம்., எப்போதும் கூலாக இருக்கும் நம்ம கேப்டன் தோனி இந்த முறை ஓவர் கூலாக இருந்ததாலே. 

எல்லாம் ஷிவா மயம்...

வாழ்த்துக்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon