Link copied!
Sign in / Sign up
1
Shares

உடல் எடையை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்!

நம்மில் பலருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்; ஆனால், சிலருக்கோ எடையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எடையை குறைக்க முற்படுபவர் உணவைக் குறைத்து, விரும்பியதை உண்ண இயலாமல், உடற்பயிற்சி செய்து எப்படியாவது எடையை குறைத்துவிட வேண்டும் என்று இருப்பர்; எடையை அதிகரிக்க ஆசை கொண்ட அதிர்ஷ்டசாலிகளோ எதை வேண்டுமானாலும் உண்ணலாம்; எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலிகள் உண்ண வேண்டிய சில உணவுகள் குறித்து இந்த பதிப்பில் படித்தறிவோம்!

பாலாடைக்கட்டி 

நுரைமிக்க பாலில் உண்டாக்கப்பட்ட பாலாடைக்கட்டிகளில், கரைகின்ற புரதச்சத்தானது அதிகம் உள்ளது. புரதம் அதிகமுள்ளதால், உடம்பிற்கு தேவையான கலோரிகளை அளித்து, வேகமாக உடல் எடையை அதிகரிக்க உதவும்.

கைக்குத்தல் அரிசி

இதில் அதிகளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இதனை சீரான முறையில் உண்டு வந்தால், வேகமாக உடல் எடையை அதிகரித்து விடலாம்.

கோதுமை சப்பாத்தி

ஒரு துண்டு கோதுமை சப்பாத்தியில் 13 கலோரிகள் உள்ளது; இந்த சப்பாத்தியில், ஜாம், வெண்ணெய் அல்லது மயோனைஸ் தடவி, காலை உணவாக உண்டு வந்தால், வயிறு வேகமாக நிறையும். மேலும் இது உடலால் மெதுவாக உட்கிரகிக்கப்படுவதால், சுலபமாக உடல் எடை அதிகரிக்கும்.

பீன்ஸ் 

மாமிசத்திலுள்ள புரதச்சத்துக்கு நிகராக உள்ளது, பீன்ஸ். பீன்ஸை சாஸ் உடன் சேர்த்து சமைத்தால், 300 கலோரிகள் கிடைக்கும்; இது உடல் எடையை அதிகரிக்கவும் உதவும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில், அதிகளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி உள்ளதால், இது சத்தான கொழுப்பாக உடலில் படிந்து, உடல் எடையை அதிகரிக்க உதவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon