Link copied!
Sign in / Sign up
9
Shares

உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும் 5 உணவுகள்!

நம்மில் பலருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்; ஆனால், சிலருக்கோ எடையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எடையை குறைக்க முற்படுபவர் உணவைக் குறைத்து, விரும்பியதை உண்ண இயலாமல், உடற்பயிற்சி செய்து எப்படியாவது எடையை குறைத்துவிட வேண்டும் என்று இருப்பர்; எடையை அதிகரிக்க ஆசை கொண்ட அதிர்ஷ்டசாலிகளோ எதை வேண்டுமானாலும் உண்ணலாம்; எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலிகள் உண்ண வேண்டிய சில உணவுகள் குறித்து இந்த பதிப்பில் படித்தறிவோம்! 

அவகேடோ -வெண்ணைப் பழம்

இந்த பழத்தில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை சூப், சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இது உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, தேவையான கொழுப்பையும் சேர்க்கும்; இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.

வேர்க்கடலை வெண்ணெய் 

அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய், உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணை புரிந்து, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

பாதாம் வெண்ணெய் 

ஆரோக்கியமான புரதம் நிறைந்த நட்ஸ் வகையான பாதாம் சேர்த்து தயாரிக்கப்பட்ட வெண்ணெய்,  அதிமுக்கிய கொழுப்பமிலங்களை கொண்டுள்ளது. இதை சாலட், பிரட் மற்றும் ஐஸ்கிரீம்களுடன் சேர்த்து சாப்பிட்டால், சருமம் பளபளப்பாகும், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்; இவற்றோடு உடல் எடையும் அதிகரிக்கும்.

ஆலிவ் எண்ணெய்  

உணவில் ஆலிவ் எண்ணெயை சேர்த்துக் கொள்வது, உடல் அதிக அளவு கலோரிகள், லினோலெயிக் அமிலம் போன்றவற்றை பெற உதவும்; ஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு, இதய நோய்கள் வராமல் காக்கப்படும்.

பாதாம் பருப்புகள் 

பாதாம் நம் உடலின் நரம்பு வளர்ச்சிக்கும், உடல் எடை கூடுவதற்கும் மிகவும் உதவும். தினமும் ஒரு கை பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்பதால், உடலின் செயல்பாடு பாதுகாக்கப்பட்டு, நரம்பு திடமாக செயல்படும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon