Link copied!
Sign in / Sign up
14
Shares

இளநீர் பாயாசம்! நீங்கள் செய்து சுவைத்ததுண்டா?

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உன்னதமான குளிர்பானங்களுள் முதன்மையானது இளநீர். கிராமத்தில் இதன் அருமை தெரிந்தவர்கள் பலர் என சொல்வதில் நாம் பெருமை கொள்ளலாம். அதனால் சிறுநீர் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இளநீரில் ஒரு சிலர் வெந்தயம் சேர்த்து கொடுப்பர். இளநீர் மிகவும் குளிர்ச்சியானது. அதே இளநீரை இன்று நாம் நகர்ப்புறங்களில் முப்பது - நாற்பது ரூபாய்க்கு கொடுத்து வாங்கும்போது அம்மா நம்மிடம் இளநீரை நீட்டி அதை நாம் தவிர்த்த நாட்கள் நினைவில் வந்து செல்ல ஒருபோதும் தவறுவதில்லை. இளநீர் மிகவும் இனிப்பு சுவை கொண்டது. அந்த இனிப்போடு பாயாசம் எனும் இனிப்பை சேர்த்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். பார்க்கலாமா!  

தேவையான பொருட்கள்:

இளநீர் - 1 

தேங்காய்ப் பால் - 1 கப் 

சர்க்கரை - 1/2 கப் 

ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை 

பாதாம், முந்திரி - சிறிதளவு

செய்முறை நேரம் - 15 நிமிடங்கள்.

எத்தனை பேர் உண்ணலாம் - 3

செய்முறை:

1. இளந்தேங்காயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். 

2. பின்னர் சிறிது இளந்தேங்காயுடன் சர்க்கரையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

3. இளநீர், அரைத்தெடுத்த கலவை, தேங்காய்ப் பால், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். 

4. அதன்பிறகு பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரியை இதில் சேர்த்துப் பரிமாறுங்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon