Link copied!
Sign in / Sign up
3
Shares

இரண்டாம் கருத்தரிப்புக்கு பின் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இரண்டாம் முறை கருத்தரித்த பின் பெண்களுக்கு பொறுப்புகள் பலமடங்காகி விடுகின்றன; வீட்டைக் கவனிப்பது, கணவரை கவனித்தல், முதல் குழந்தை என பல்வேறு பொறுப்புகள், பெண்ணை பந்தாடுகின்றன. ஆனால், இந்த பொறுப்புகளால், பெண் மனஅழுத்தத்திற்கு உள்ளானால், அந்த மன உளைச்சலை அவள் காட்டுவது தன் முதல் குழந்தையிடமே! இதனால், குழந்தையின் மனநிலை பாதிப்படைகிறது. எனவே, இரண்டாம் முறை கர்ப்பம் தரித்த தாய் தன் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இப்பதிப்பில் படித்தறிவோம்.!

அன்பு!

முதல் குழந்தையிடம் காட்டிய அன்பு எப்போதும் குறையவே கூடாது; உங்களுக்கு என்னதான் டென்ஷன் இருந்தாலும், அதை உங்கள் முதல் குழந்தையிடம் கொட்டித் தீர்க்கக் கூடாது. குழந்தைக்கு எதையும் அன்பாக சொல்லியே புரியவைக்க வேண்டும்.

வார்த்தைகள்!

நீங்கள் முதல் குழந்தையிடத்தில் பேசும் மற்றும் உபயோகிக்கும் வார்த்தைகளை பார்த்து பயன்படுத்த வேண்டும்; மேலும் உறவினர் மற்றும் நண்பர்கள் குழந்தையை வார்த்தையால் காயப்படுத்திவிடாதவாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

புரிய வைத்தல்!

முதல் குழந்தைக்கு உங்களின் சூழ்நிலை மற்றும் இந்த பூமிக்கு வரவிருப்பது உங்கள் குழந்தையின் உடன்பிறப்பு என்பதை நன்றாக புரிய வைக்க வேண்டும்; மேலும் பிறக்கவிருக்கும் உடன்பிறப்பிடம் குழந்தை அன்பு காட்ட வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்.

நேர்மறை எண்ணங்கள்!

அடுத்த குழந்தை பிறந்தால், தன்னை கவனிக்க மாட்டார்கள், தான் பெற்றோருக்கு முக்கியமில்லை போன்ற எண்ணங்கள் குழந்தையின் மனதில் தோன்றிடா வண்ணம் பெற்றோர் செயல்பட வேண்டும்.

நேரம்!

முதல் குழந்தையை எப்பொழுதும் தனித்து விடாமல், யார் வீட்டுக்கும் அனுப்பாமல் உங்களுடன், உங்கள் அருகில் வைத்து பாசம் காட்டி, அக்குழந்தைக்கும் பாசம் காட்டக் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும்.!
Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon