Link copied!
Sign in / Sign up
52
Shares

இப்படிக்கூட இட்லி சாம்பார் வைக்கலாமா?

எல்லோருடைய வீட்டிலும் வாரத்தில் ஒரு நாள் இட்லி சாம்பார் இருக்கிறதோ இல்லையோ. கண்டிப்பாக, கல்யாணக்கார வீட்டுக்கு சென்று விருந்து உபசரிப்பில் கலந்துக்கொள்ள இலையில் இவனை நம்மால் காணாமல் இருக்க முடியாது. இட்லி சாம்பார் எல்லோரும் ஒரே விதமாக ஒருபோதும் வைப்பதில்லை. ஒரு சிலர் கத்தரிக்காய் போட்டு வைப்பர். இன்னும் ஒரு சிலர் வெங்காயம் மட்டுமே போட்டு ருசியாக வைப்பர். இங்கே எம்முறையை பின்பற்றி இட்லி - சாம்பார் வைக்கப்பட்டிருக்கிறது என இப்போது நாம் பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 25 கிராம் 

பாசிப்பருப்பு - 25 கிராம் 

கடலைப்பருப்பு - 25 கிராம் 

தக்காளி, பச்சை மிளகாய் - 1 

சின்ன வெங்காயம் - 4 

சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 

கொத்தமல்லி - சிறிது 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 

கடுகு - 1/2 தேக்கரண்டி 

உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 

சின்ன வெங்காயம் - 4 

கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை நேரம் - 25 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 5

செய்முறை:

1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு வறுத்து ஆறவிட்டு, பொடி செய்து கொள்ளவும்; தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

2. தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

3. கடாயில், 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்; தக்காளி வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும். பின் உப்பு, தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.

5. அதில் அரைத்து வைத்த பருப்பு பொடியை சேர்த்து கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.

6. மற்றொரு கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி இறக்கவும். 

7. அவ்வளவு தான் சூடான இட்லி சாம்பார் இதோ ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon