Link copied!
Sign in / Sign up
6
Shares

இந்த 10 நாடுகள் தான் குழந்தை வளர்ப்பிற்கு ஏற்ற நாடுகள் தெரியுமா?

அனைத்து பெற்றோர்களும் தங்களின் குழந்தை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென நினைப்பார்கள், மேலும் அவர்களை ஒரு நல்ல மனிதராக வளர தூண்டுவது அவர்கள் வளரும் சூழலாகும். வெளிநாட்டுக்கு செல்வது என்பது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சிறிது பயமாகவும் அதேசமயம் ஆர்வமாகவும் இருக்கும். ஆனால் செல்லும் இடத்தை பற்றி அனைத்து தகவல்களும் அறிந்திருக்கும் போது உங்களுக்கு அங்கே செல்வது எளிதானதாக இருக்கும்.

உங்கள் குழந்தையை நன்றாக வளர்க்க உலகின் சிறந்த 10 நாடுகளின் பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த இடங்களில் வாழ வேண்டாமென நீங்கள் தீர்மானித்திருந்தால், உங்கள் குழந்தையை விடுமுறைக்காவது இந்த இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். இது உங்கள் மதிப்பான நேரத்திற்கு ஏற்றதுதான்.! 

1. ஸ்பெயின்

பெற்றோராய் இருப்பது சிறிது கடினம்தான், எனவே அதை ஸ்பெயினில் எளிமையாக்கி கொள்ளுங்கள். ஸ்பானியர்கள் குழந்தைகளை நேசிக்கிறார்கள் மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் குழந்தைகள் சிறந்தவற்றை உணர வைக்க முயற்சி செய்கிறார்கள். ஸ்பெயின் வாசனை நிறைந்த மற்றும் அழகான இடமாகும். இதை ஒரு கனவுலகம் என்றுகூட சொல்லலாம். அங்கே குழந்தை மற்றும் பெற்றோருக்கு பல நன்மைகள் உள்ளன.

2. லக்ஸம்பர்க்

நீங்கள் லக்ஸம்பர்க்கில் உங்கள் அழகான குழந்தையை வளர்ப்பதற்கு உதவும் குழந்தை பராமரிப்பு வசதிகள் நிறைய உள்ளன. இங்கே குடும்பம் மற்றும் கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உண்மையில் ஆச்சரியமளிக்கும். அவர்கள் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள், எனவே உங்கள் குழந்தை அனைத்து நன்மைகளையும் பெற இயலும். உங்கள் குழந்தையை வளர்க்க வெளிநாடு செல்ல விரும்பினால் நிச்சயம் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

3. ஆஸ்திரேலியா

உங்கள் குழந்தை எந்த வானிலையிலும் வெளியே விளையாடுவதை நீங்கள் அனுமதிப்பீர்கள் எனில் அதுதான் அவர்களுக்கு சொர்க்கமாகும். ஆஸ்திரேலியாவில் இருக்கும் கடற்கரைகள் உலகிலேயே சிறந்தது. எனவே கற்பனை செய்து பாருங்கள் உங்கள் குழந்தைகள் எத்தனை மணல் கோட்டைகள் கட்டுவார்கள் என்று.ஆஸ்திரேலியாவின் அனைத்து திறந்த பகுதிகளிலும் உங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுகளை நீங்கள் கற்பிக்க முடியும். அனைவருக்கும் ஆஸ்திரேலியாவில் வளர இடம் உள்ளது மேலும் உங்கள் குழந்தைகளும் அதை விரும்புவார்கள்.

4. பிரான்ஸ்

பிரான்ஸில் குழந்தை வளர்ப்பின் நன்மைகள் அவர்களின் கல்வி ஆரம்பிக்கும் 3 வயதிலிருந்தே தொடங்குகிறது. இது உங்களுக்கு வினோதமாக தோன்றலாம், ஆனால் நீங்கள் இதன் மூலம் அதிக பணத்தை சேமிக்கலாம், மேலும் உங்கள் குழந்தை சமூகத்தில் எவ்வாறு வாழவேண்டுமென்ற விதிமுறைகளை சிறுவயதிலிருந்தே கற்றுக்கொள்வார்கள், அதுமட்டுமின்றி பணிவையும் கற்றுக்கொள்வார்கள். குழந்தை பராமரிப்பு பிரான்ஸில் மிகவும் மலிவானது. குழந்தைகளுக்கு பல வெளிப்புற செயல்பாடுகளும் உள்ளது, ஒருவேளை குழந்தைகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் கவலைவேண்டாம் இங்கு பலவித ஆரோக்கிய நடைமுறைகள் உள்ளது.

5. ஜெர்மனி

பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு ஜெர்மனி நிறைய குடும்ப நலன்களைக் கொண்டுள்ளது. ஜெர்மனியில் குழந்தைகளை வளர்ப்பதற்கு அரசாங்கம் ஊக்கத்தொகை கொடுக்கிறது, அதுமட்டுமின்றி இன்னும் பல பராமரிப்பு வசதிககளை பெற்றோருக்கு வழங்குகிறது. மேலும் உங்கள் குழந்தைகளின் கலை மற்றும் கலாச்சாரத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் பல செயல்பாடுகள் உள்ளது.

6. நியூசிலாந்து

இது மிகவும் நிலையான, பாதுகாப்பான மற்றும் அமைதியான இடமாகும். உண்மையில் இது உலகின் நான்காவது பாதுகாப்பான நாடாகும். அதன் சுகாதார வசதிகளுக்கு இது முதன்மையானது. உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க பல வாய்ப்புகள் இங்கு உள்ளது. உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழவும் மகிழ்ச்சியாக விளையாடவும் இங்கே பல இடங்களும் வசதிகளும் உள்ளது. இதன் சுத்தமான நீர்நிலைகள் நீந்துவதற்கும், வனப்பகுதிகள் மலையேற்றத்திற்கும் ஏற்றவை. அடிப்படையில், அது இயற்கையின் மடியில் வளர சரியான இடம்.

7. இஸ்ரேல்

எல்லோரும் இஸ்ரேலை பற்றி கூறும் பொதுவான விஷயம் யாதெனில் " எங்கள் குழந்தையை இஸ்ரேலில் வளர்ப்பது மிகவும் மகிழ்ச்சி". இஸ்ரேல் பெற்றோர்கள் குழந்தை பராமரிப்பு அமைப்பு, கல்வி முறை, பாதுகாப்பு மற்றும் இங்கே வழங்கப்படும் சுகாதார வசதிகள் பற்றி கவலைப்பட தேவையில்லை. பெற்றோர்கள் ஒரு இடத்தை பற்றி எதிர்மறையாக கூற எதுவுமில்லை என்றால், அந்த இடம் நல்ல இடம்தானே?

8. ஸ்வீடன்

ஸ்வீடனில் உங்கள் பிள்ளையை வளர்ப்பது ஏன் சிறந்தது என்பதை இங்கே கவனத்தில் கொள்ளுங்கள். முதலில், உங்கள் குழந்தைக்கு 8 வயதாகும் வரை நீங்கள் 75 சதவிகிதம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவீர்கள். எனவே, நீங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் இளவரசன் / இளவரசியுடன் நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதற்கு இது நேரத்தை கொடுக்கிறது. சமத்துவத்திற்கு ஸ்வீடனில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, எனவே பல மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொள்ள உங்கள் குழந்தை தயாராக இருக்க வேண்டும்.

9. பின்லாந்து

குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பதில் பின்லாந்து மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றுள்ளது. இங்கே ஒரு குழந்தை பிறக்கும் போது குழந்தை தயாரிப்புகள் நிறைந்த ஒரு சிறிய பெட்டியை நீங்கள் பெறுவீர்கள். மகப்பேறுக்கால ஊதியம் மற்றும் மகப்பேறுக்கால விடுமுறையும் கிடைக்கும் எனவே உங்கள் வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமமாக பராமரிக்க முடியும். மலிவான கட்டணத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்வதும் நல்ல பயனளிக்கும். பின்லாந்துக்கு செல்ல முக்கிய காரணம் அனைத்து மனிதர்களுக்கும் இடையே நிலவும் சமத்துவமாகும்.

10. ஆஸ்திரியா

ஆஸ்திரியாவில் குடும்ப வாழ்க்கை தரம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஆஸ்திரியர்கள் மிகவும் நட்பானவர்கள். இங்கே உங்கள் குழந்தையை வளர்க்க சிறந்த காரணங்களில் ஒன்று மிகக்குறைவான குற்ற விகிதம் இருப்பதாகும். குடும்பங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் ஆதரவு, இலவச குழந்தை பராமரிப்பு, மலிவு விலை சுகாதார வசதிகள் மற்றும் ஆஸ்திரியா கல்வி முறை உலகின் சிறந்த கல்வி முறைகளில் ஒன்றாகும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon