Link copied!
Sign in / Sign up
11
Shares

இஞ்சி பிரண்டை துவையல் செய்வது எப்படி?

பிரண்டை கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமான தாவரம். இது ஆற்றங்கரையில் படர்ந்து கிடக்க, முட்கள் அதிகம் கொண்டது போல் பார்ப்பதற்கு இதன் தண்டுகள் தெரியும். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டுமென்பது பழமொழி. ஆற்றின் அருகாமையில் வீசப்பட்ட இந்த செடிகள் பலவித நன்மையை நமக்கு தருகிறது என்பதை நீங்கள் அறிவீரா! அட ஆமாங்க, இந்த பிரண்டை இலையை துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் விரட்டப்படுகிறது. ஒரு சில பிள்ளைகள் எவ்வளவு சாப்பிட்டாலும் என்னை போல் உடல் ஏறாமல் இருக்க செய்வர். அவர்களுக்கு இந்த பிரண்டை இலையில் துவையல் அரைத்து கொடுத்தால் நல்லது. இந்த துவையலை இஞ்சுடன் சேர்த்து எப்படி செய்வது என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். 

தேவையான பொருட்கள்:

இளம் தளிரான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு 

இஞ்சி - ஒரு சிறிய துண்டு 

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு 

உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 2 

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு 

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு.

 செய்முறை நேரம் - 20 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 4

செய்முறை:

1. பிரண்டையின் நாரை எடுத்து, பொடியாக நறுக்கி, கடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு நன்றாக வதக்கவும்.

2. பின் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுக்கவும்.

3. வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும்.

4. அனைத்தும் அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து அரைத்து எடுக்கவும்.

5. அவ்வளவு தான் சத்தான இஞ்சி பிரண்டை துவையல் இதோ ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon