Link copied!
Sign in / Sign up
9
Shares

ஆரோக்கியம் அளிக்கும் முளை கட்டிய நவதானிய சாலட்!

அன்னையர் தினமான இந்த நன்னாளில், ஆரோக்கியம் அளிக்கும் ஒரு உணவு குறித்து நாம் பார்க்கப்போகிறோம்! எப்படி அன்னையானவள், தன பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தை மட்டும் அள்ளி வழங்குகிறாளோ, அது போல், எங்கள் வாசகர்களான உங்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஒரு அற்புத உணவு குறித்தே நாம் இன்றைய பதிப்பில் காண போகிறோம்! அது என்னவென்று படித்து அறிவோம், வாருங்கள்!

தேவையானவை!

கொண்டை கடலை - 100 கிராம்

காராமணி - - 50 கிராம்

பச்சை பயறு - 100 கிராம்

கொள்ளு - 50 கிராம்

உப்பு - தேவைாயன அளவு

நறுக்கிய வெங்காயம் - 50 கராம்

நறுக்கிய தக்காளி - 1

எலுமிச்சை சாறு - 2 கரண்டி 

கொத்தமல்லி இலை - சிறிதளவு

மிளகுத்தூள் - சிறிது

 

செய்முறை!

பயறு வகைகளை நன்றாகக் கழுவி, ஒரு துணியில் கட்டி பன்னிரண்டு மணி நேரங்கள் கட்டி வைக்கவும். இவ்வாறு செய்வதால் பயறுகளில் முளை வர ஆரம்பித்து, முளைகட்டத் தொடங்கி விடும்.

பின் இந்த முளை கட்டிய பயறுகளை, ஒரு அகலமான பாத்திரத்தில் இட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சாறு, உப்பு, மல்லி இலை,மிளகுத்தூள் போன்ற அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி, கலக்கி பரிமாறவும். இதை விட சத்தான ஒரு உணவு, ஒரு சாலட் எங்கும் இல்லை.!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon