Link copied!
Sign in / Sign up
3
Shares

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தரும் கொய்யா இலை பஜ்ஜி!

கொய்யா பழம் சாப்பிட்டு இருப்பீர்கள். கொய்யா இலையை சாப்பிட்டதுண்டா. அட ஆமாங்க, குடித்துவிட்டு வரும் கணவன்மார்கள் கொய்யா இலையை மென்று துப்ப வேண்டுமென சொல்வார்கள். ஏன் தெரியுமா? வாய் துர்நாற்றத்தை விரட்டும் அற்புத சக்தி இந்த கொய்யா இலைக்கு அதிகமிருப்பதால் தான். குழந்தைகள் இரவில் தூங்க செல்லும்முன் கொய்யா இலை வெந்நீரில் வாய் கொப்பளித்து தூங்க செல்வது கிருமிகளை விரட்டி பற்களை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. ஆனால் கொய்யா இலையில் பஜ்ஜி செய்ய முடியும் என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா! 

தேவையான பொருட்கள்:

கடலை மாவு -1 கப் 

அரிசி மாவு - 2 தேக்கரண்டி  

துளிர் கொய்யா இலை - 15 

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி 

பெருங்காயம் - 1 சிட்டிகை 

மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை நேரம் - 15 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 3

செய்முறை:

1. கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயம், மஞ்சள் தூள், இவற்றுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளுங்கள். 

2. கொய்யா இலைகளை மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

3. அவ்வளவு தான்... சூடான சுவையான கொய்யா இலை பஜ்ஜி தயார்.

4. பஜ்ஜி மாவுடன் துருவிய பாதாம், முந்திரி, சிறிது பால் தூள் கலந்தும் பஜ்ஜி செய்யலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon