Link copied!
Sign in / Sign up
2
Shares

ஆரோக்கியத்தை தரும் கேரட் அடை செய்வது எப்படி?

எவ்வளவு தான் பசியாக இருந்தாலும் வெறும் கேரட்டை மட்டுமே உண்டு உயிர்வாழும் முயல்களை கண்டு ஆனந்தம் நிரம்ப நிற்பதுண்டு. முயல்கள் மட்டுமா இப்படி! அப்பா கேரட் வாங்கி வந்தால் அதை சென்ற வேளையில் நாமும் தான் பச்சையாக உடைத்து தின்று நகர்வோம். உடனே நம் அம்மாவும், கேரட் கண்களுக்கு நல்லது என கூறி அப்பாவுக்கு அதிகம் வாங்கிவர கட்டளையிடுவார். அடுத்த நாள் பார்த்தால் காலையில் கேரட் ஜூஸ், மதியம் கேரட் பொரியல் என வீட்டு உணவில் கேரட் முக்கிய பங்கை வகிக்க, மாலை வேளையிலும் என்னை என் அம்மா விடுவதாக இல்லை. ஒரு தட்டில் ஏதோ சிவந்த நிறத்தில் அடையை வைத்து அவர் நகர, சிறிது யோசித்து அதை வாயில் லேசாக மென்று பார்த்தேன். அவ்வளவு தான், அன்று என் அம்மா செய்த கேரட் அடை அனைத்தையும் நானே சாப்பிட்டு முடிக்க அப்பா வந்தவர் வெறும் தட்டையே வெறிக்க வெறிக்க பார்த்து நின்றார். 

கேரட் அடை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:

தினை, வரகு, சாமை, இட்லி அரிசி– 1/4 கப் 

துவரம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி 

காய்ந்த மிளகாய் – தேவையான அளவு 

பெருங்காயம் –1/4 தேக்கரண்டி 

உப்பு – தேவையான அளவு 

துருவிய கேரட் – 1/2 கப் 

துருவிய பனீர் – 1/4 கப்

செய்முறை நேரம் - 20 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 3

செய்முறை:

 1. தினை, வரகு, சாமை, இட்லி அரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை 4 மணி நேரம் ஊறவையுங்கள்.

2. பின்பு காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்திடுங்கள்.

3. உப்பு, பெருங்காயத் தூள், துருவிய கேரட் சேர்த்துக் கலந்து அடைகளாகச் சுட்டெடுங்கள்.

4. அவ்வளவு தான்., துருவி வைத்துள்ள பனீரை கேரட் அடை மீது தூவிப் பரிமாறுங்கள்.

5. ஆரோக்கியத்தை தரும் கேரட் அடை எப்படி இருந்தது என எங்களிடமும் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon