Link copied!
Sign in / Sign up
5
Shares

ஆண்களை விட பெண்களுக்கு பைக் ஓட்ட பிடிக்கும்! ஏன் தெரியுமா?

பெண்களுக்கு பைக் ஓட்டும் ஆண்களை பிடிக்கும் என பலரும் சொல்லிக்கொள்வதுண்டு. ஆனால், பெண்களை தவிர... ஆம், பெண்களுக்கு எப்போதும் பைக் ஓட்டும் ஆண்களை பிடிப்பதை விட, பைக்கை மிகவும் பிடிக்கும் என்பதே உண்மை. அதனால் தான் ஓருமுறையாவது பைக் ஓட்டி பார்த்துவிட வேண்டுமென நினைக்கும் பெண்கள் நம் நாட்டில் எத்தனையோ பேர். இன்று கூட ஒரு பெண் புல்லட் பைக் ஓட்டி வந்தால் வாயை பிளந்து பார்க்கும் ஆண்கள் உண்டு. காரணம், அது ஆண்கள் மட்டுமே ஓட்டப்படும் பைக் என அடையாளப்படுத்தப்பட்டதனாலே. ஆனால், ஆண்களை விட பெண்களுக்கு மன தைரியம் ரொம்பவே அதிகம் என்பதற்கு ஒரு சில சான்றை நாம் இங்கே இப்போது பார்க்கலாம் வாருங்கள்.   

காட்சி #1:

ஒரு பெண் பைக் ஓட்ட ஆசை என சொன்னதும் அவளுடைய நண்பர்கள் ஏளனமாய் சிரித்தனர். அவமானம் என்பது அடையாளமாக மாற்றப்படும் சமயத்தில் எல்லாமே வானம் வசப்படும் என பெரியவர்கள் சொல்வதுண்டு. அவள் கொஞ்சம் துவண்டு போனாலும் தனிமையில் பைக் ஓட்டி பழக தொடங்கினாள். சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கிறது என்பது போல் கீழே பல முறை விழுந்தபோதிலும் மனதில் வைராக்கியமாக இருந்தாள். அது என்னவென்றால், 'இங்கே நான் எத்தனை முறை விழுந்தாலும்., தன்னை கேலி செய்த நண்பர்கள் முன்னால் தலை நிமிர்ந்து செல்ல வேண்டும்' என்ற உறுதியுடன் அவள் தொடர்ந்து பயிற்சி செய்ய, ஒரு நாள் அவள் ஆசை நிறைவேறியது. 

காட்சி #2:

ஒரு பெண் பைக் ஓட்ட மிகவும் ஆர்வமாக இருந்தபோதும் அவளுடைய தந்தை வாங்கி தர மறுத்தார். அவள் மனதில் ஒரு கேள்வி பிறந்தது. ஏன்? ஆண்கள் மட்டும் தான் கன ரக பைக்கில் செல்ல வேண்டுமா? எனும் கேள்வி உதிக்க, பைக்கை பற்றிய தகவல்களை தன் நண்பர்கள், இணையத்தளம் உதவியுடன் நன்றாக தெரிந்துக்கொண்டாள். அவள் தெரிந்துக்கொண்ட பலவும் மனதில் ஆர்வத்தை விதைக்க, ஒரு நாள் தன் தந்தையின் முன்பே கன ரக வாகனத்தை இயக்கி அசத்தினாள். அவளிடம் கேட்டால், எந்த பைக் எவ்வளவு எடை இருக்கும்? எவ்வளவு வேகத்தில் செல்லும் என பைக் பற்றிய அனைத்தையும் இன்று சொல்லும் அளவுக்கு அவள் கற்று தேர்ந்துவிட்டதாக கூறுகிறாள். இப்படி ஒரு பெண்ணை கற்பனை செய்து தான் பார்க்க முடிகிறதா நம்மால்...

காட்சி #3:

ஒரு சில ஆண்கள் கம்பீரமாக புல்லட்டில் போகும்போது எனக்கு ஆசையாக இருக்கும். அப்போது முடிவு செய்தேன். நானும் ஒரு நாள் இப்படி செல்ல வேண்டுமென. அதேபோல் நானும் புல்லட் ஓட்ட கற்றுக்கொண்டேன். முதலில் சாலையில் சென்றபோது என்னை கேலியாக பார்த்து எத்தனையோ பேர் சிரித்தனர். இன்றும் அதே சாலையில் தான் நான் செல்கிறேன். ஆனால், என்னை ஒருவித ஆச்சரியத்துடன் பலரும் பார்க்க தொடங்கிவிட்டனர். நான் என்னுடைய சுய வெளிப்பாடிலிருந்து சற்றும் தளரவில்லை இன்றுவரை என்கிறார்.

காட்சி #4:

பெண்களுக்கு இருக்கும் ஒரு நல்ல பழக்கம் என்னவென்றால், தற்காப்பு திறனை கொள்வதாகும். ஆம், ஒரு பெண் பைக் ஓட்ட கற்றுக்கொண்டு சாலையில் சென்றிருக்கிறாள். ஆனால், தலைக்கவசம் அணிய அவளுக்கு பயமாம். அதனால் ஹெல்மெட் போட மறுத்து சாலையில் செல்ல பெரிய விபத்தை சந்தித்திருக்கிறாள். அப்போது அவளுடைய பெற்றோர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் தொடர்ந்து பைக் ஓட்ட செய்திருக்கிறாள். ஆனால், ஒரு சிறிய மாற்றம். அது என்னவென்றால், தலைக்கவசம் அணிந்து எப்படி சாலையில் செல்வது எனும் பயிற்சி தான். 'பைக் ஓட்ட கற்றுக்கொண்ட நம்மால், ஹெல்மெட் போட்டு ஓட்ட முடியாதா?' எனும் எண்ணம் தோன்ற, அவளுடைய தன்னம்பிக்கை இன்றுவரை பாதுகாப்பான சாலைப்பயணத்தை அவளுக்கு தருகிறதாம்.

பெண்களே! மற்றவருக்காக உங்களுடைய ஆசையை இழக்காதீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் இந்த உலகம் அதை குற்றமாய் காணும். அப்படி இருக்கும்போது பிடித்தவற்றை செய்து குற்றவாளியாக வாழலாமே. பிறருக்கு தீங்கு விளைவிக்காத எந்த ஒரு சுயநலமும் சுயநலமே அல்ல. எனவே பிடித்த வாழ்க்கையை மற்றவர்களுக்கு தொந்தரவு அற்று வாழ்வதே சிறந்தது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon