Link copied!
Sign in / Sign up
2
Shares

அழகு குறிப்புகள்: கர்ப்பமாக இருக்கும் போது இயற்கை முறையில் உடலை பாதுகாப்பது எப்படி?

கர்ப்பமாக இருக்கும் போது ஒரு பெண் தன் உடலை அழகாக வைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறாள். அதற்கு முக்கிய காரணம், அவள் தன் கருவிலிருக்கும் குழந்தையின் மீது கொண்ட அக்கறையே. குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமென சொல்வதில் தொடங்கி, குழந்தை புஷ்டியாக வளர பாதாம் என எண்ணற்ற இயற்கை வழிமுறைகள் இருந்தாலும், மருத்துவர்கள் இன்று பரிந்துரைப்பது என்னவோ பலவித மருந்துகளையும், மாத்திரையையும் தான். எப்போதும் என்னால் முடியாது எனும் மனம் வரும்போதே மருந்தும், மாத்திரையும் ஒருவருக்கு தேவை என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். ஏனெனில், இயற்கை அளித்த எண்ணற்ற வரப்பிரசாதங்கள் நம் நாட்டில் குவிந்து கிடக்கிறது. அவற்றை எல்லாம் இன்று வெளி உலகத்துக்கு விற்றுவிட்டு பாக்கெட்டில் அதையே வாங்கி மீண்டும் உண்கிறோம். எந்த ஒரு பொருளும் நம் அருகாமையில் இருக்கும் வரை அதன் அருமை என்பதை யாரும் உணர்வதில்லை. இனிமேலாவது உணர இப்பதிவும் நம் அனைவருக்கும் உதவட்டும்.

மேலும் படிக்க: ஆரோக்கியமும் அழகும் தரும் குங்குமப்பூ

பொருளடக்கம் 

கர்ப்பமாக இருக்கும்போது பேசியல் செய்யலாமா?
கர்ப்பிணி பெண்கள் பேசியல் செய்வதால் என்ன பிரச்சனை ஏற்படும்?
இயற்கை முறையில் அழகை பாதுகாப்பது எப்படி?
கர்ப்பிணி பெண்கள் இயற்கையாக முகத்தை அழகுப்படுத்துவது எப்படி?
தினசரி முகத்தை அழகுப்படுத்த
மிருதுவான சருமத்தை நீங்கள் பெற
சருமத்திலிருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பை போக்க...
ஆயில் மசாஜ் செய்வது எப்படி?
இரவில் என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பமாக இருக்கும்போது பேசியல் செய்யலாமா?

கர்ப்பமாக இருக்கும்போது பேசியல் செய்வது தவறல்ல. ஆனால், பேசியல் கிரீம்களில் எண்ணற்ற கெமிக்கல் கலக்கப்படுகிறது. இந்த கெமிக்கல்கள் எல்லோருக்கும் ஏற்றதாக ஒருபோதும் அமைவதில்லை. மாறாக ஒரு சிலருக்கு ஒரு சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிடுகிறது என்பதே உண்மை. வெள்ளரிக்காயை இயற்கையாக எடுத்துக்கொள்ளும்போது அதில் எந்த வித தீங்கும் ஏற்படுவதில்லை. அதுவே அதே வெள்ளரிக்காயை கிரீமாக தரும்போது அதில் ஒருசில காரணங்களுக்காக கெமிக்கல் கலக்கப்படுகிறது. அலோவேரா ஜெல் என்பது வெறும் கற்றாழையை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படுவதல்ல. எனவே, எந்த ஒரு கிரீமை உங்கள் சருமத்தில் தேய்க்கும் முன்னரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அவற்றுள் ஒன்று தான் சரும பரிசோதனையும் கூட...

கர்ப்பிணி பெண்கள் பேசியல் செய்வதால் என்ன பிரச்சனை ஏற்படும்?

1. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

2.சளிப்பிடிக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.

3. மார்பகம் இறுகி காணப்படக்கூடும்.

4. சருமத்தில் தடிப்பு ஏற்படலாம்.

5. கண் பார்வையில் குறைபாடு காணக்கூடும்.

6. குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனைகள் காணப்படலாம்.

என்ன செய்ய வேண்டும்?

1. பேசியல் என்பது கெமிக்கல் சார்ந்தது. கர்ப்பிணி பெண்கள் இரண்டாவது 2 மாதத்தில் இதை பயன்படுத்தும் முன்பு  மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம்.

2. சருமத்தில் காணப்படும் திறந்த துளைகளை மூட, குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவலாம். இதனால் பேசியல் கிரீம்களில் இருக்கும் கெமிக்கல் உங்கள் சருமத்தின் உள்ளே நுழையாமல் பாதுகாக்க முடியும்.

3. அதேபோல் பேசியல் ப்ளீச் எடுத்துக்கொள்ளும்போது ஒரு வல்லுனரின் உதவியை நீங்கள் தேடுவது நல்லது.

4. குறைந்த விலைக்கு பேசியல் க்ரீம் வாங்கி உபயோகிப்பதை தவிர்த்து பிராண்ட் கிரீம்கள் வாங்கி பயன்படுத்தலாம்.

5. உங்கள் முகத்தில் பேசியல் க்ரீமை தடவினால் காற்றோட்டமான இடத்தில் அமர வேண்டியது மிகவும் அவசியம்.

6. சருமத்தின் சிறிய பகுதியில் முதலில் தடவி சருமம் ஏற்றுக்கொள்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

7. ஒருவேளை சருமத்தில் தடிப்பு ஏற்பட்டால், க்ரீமை மேலும் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

8. க்ரீமை வெகுநேரத்துக்கு முகத்தில் வைத்திருக்கக்கூடாது.

இயற்கை முறையில் அழகை பாதுகாப்பது எப்படி?

1. தண்ணீர் அதிகம் குடித்தல்:

கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில், உடலில் இருக்கும் நச்சுக்கள் நீங்க தண்ணீர் என்பது உங்களுக்கு தேவைப்படுகிறது. மேலும், கருவிலிருக்கும் குழந்தையை சுற்றி பனிக்குட நீர் என்பது குறையாமல் குழந்தை பாதுகாப்பாக இருக்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது.

மேலும் படிக்க நட்சத்திர அன்னைகள் வெளியிடும் 7 அழகு குறிப்புகள்..!

2.சரியான உணவு:

அழகை பாதுகாக்க இயற்கை நமக்கு அளித்த வரங்களுள் ஒன்று உணவு. அதாவது கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் என்பது மிகவும் அவசியமாக, அத்துடன் அழகு என்பது வெளிப்புற தோற்றத்தை மட்டுமே சார்ந்தது அல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். காரணம், கர்ப்பமாக இருக்கும் போது ஒரு பெண்ணின் மனம் கவலையில் சூழ, இதனாலும் அவள் புற அழகு பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மையே.

3.ஆரோக்கியமான வாழ்வு:

கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய யோகாக்களும், உடற்பயிற்சிகளும் பல இருக்க, இவை ஒரு பெண்ணின் பிரசவத்தை எளிதாக்கவும் உதவுகிறது. இந்த பயிற்சிகள் யாவும் உங்கள் வாழ்க்கை முறையை இயல்பு நிலையுடன் வைத்துக்கொள்ள தேவையற்ற மனக்குழப்பங்களை தவிர்க்கவும் உதவி செய்கிறது. அத்துடன் உங்களுக்கு போதுமான ஓய்வும், தூக்கமும் உடல் எடையை சரி சமநிலையில் வைத்துக்கொள்ள உதவ, ஹார்மோன் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் பழக்க செய்கிறது.

4.உடல் உடை மேம்பாடு:

கர்ப்பிணி பெண்கள் உடல் என்பது மாறுப்பட்ட வளைவு சுளிவுகளுடன் காணப்படும். எனவே, நீங்கள் வழக்கமாக அணியும் ஆடைகளை அணிந்து கொள்வதில் சிரமம் காணலாம். எனவே, உங்கள் உடலுக்கு ஏற்ற ஆடையை நீங்கள் உடுத்திக்கொள்வதன் மூலமாக உடல் மற்றும் மன இறுக்கத்தை உங்கள் வாழ்வில் தவிர்த்திட முடியும்.

மேலும் படிக்க: பெண்கள் அழகு தரும் ஆடைகளை தேர்ந்தெடுக்க

5. உடல் எடையில் கவனம்:

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது கண்டிப்பாக அவள் உடல் எடையில் மாற்றத்தை காண செய்கிறாள். ஆனால், இந்த மாற்றம் என்பது வயிற்றில் வளரும் குழந்தையை பொறுத்தே ஒருபோதும் அமைவதல்ல. அதையும் தாண்டிய காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் உணவு தான். எனவே ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு தேவையற்ற உணவை தவிர்ப்பது நல்லது. இல்லையேல் இதனால் கூட நீங்கள் இயல்பான அழகற்று காணக்கூடும்.

6. வீட்டு வழிமுறைகள்:

கர்ப்பிணி பெண்கள் போதுமான அளவுக்கு இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவது ஆக சிறந்தது. உங்கள் உடலின் பளபளப்புக்கு அலோவேரா பயன்படுத்துவது முதல் கணவரை உங்கள் தலையை தடவிக்கொடுக்க சொல்வது வரை என முடிந்தளவுக்கு செயற்கை செயல்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.

மேலும் படிக்க: ஒரு முறையேனும் பெண்கள் செய்து பார்க்க வேண்டிய விசித்திரமான அழகு குறிப்புகள்!

கர்ப்பிணி பெண்கள் இயற்கையாக முகத்தை அழகுப்படுத்துவது எப்படி?

தினசரி முகத்தை அழகுப்படுத்த:

இந்த தினசரி ,முகத்தை அழகுப்படுத்தும் முறை என்பது கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.

இந்த வழிமுறைகளை குளிப்பதற்கு முன்னரோ அல்லது எரிச்சலை ஏற்படுத்தும்போதோ நீங்கள் செய்யலாம்.

1. ஓட்ஸ் மற்றும் தயிர்:

- ஒரு டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்துக்கொள்ளுங்கள்.

- அத்துடன் ஒரு டீஸ்பூன் ஓட்மீலை சேர்த்து கொள்ளுங்கள்.

- தேவைப்பட்டால் மூன்று சொட்டு தேன் எடுத்து கொள்ளலாம்.

- அதை நன்றாக கலந்துக்கொண்டு முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

- அதன்பின்னர் மிதமான சுடு நீரில் முகத்தை கழுவுங்கள்.

மேலும் படிக்க: பெண்கள் அழகு தரும் ஆடைகளை தேர்ந்தெடுக்க

2. அலோவேரா, ரோஸ் வாட்டர் மற்றும் லெமன் ஜூஸ்:

இந்த மூன்றும் சேர்ந்த கலவையானது கருத்த சருமத்தை பளபளக்க உதவுவதோடு ஈரப்பதம் மற்றும் குளுமை நிறைந்த நிலையில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

- ஒரு டேபிள் ஸ்பூன் அலோவேரா எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- பின்னர் லெமன் ஜூஸ் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள்.
- அவற்றை நன்றாக கலந்து முகம், கழுத்து மற்றும் கைகளில் பிரஷ்ஷின் உதவியுடன் தேய்த்திடுங்கள்.
- அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து வெற்று நீரில் கழுவ வேண்டும்.

3. பாதாம் எண்ணெய் மற்றும் வாழைப்பழம்:

- தோலுரித்த வாழைப்பழத்தை மசித்து கொள்ளுங்கள்.

- அத்துடன் ஐந்து சொட்டு பாதாம் எண்ணெய்யை சேர்த்து கொள்ளுங்கள்.

- அதனை நன்கு கலந்துக்கொண்டு சுத்தமாக முகத்தை துடைத்துக்கொண்டு தடவுங்கள்.

- அதன்பிறகு 15 நிமிடங்களுக்கு வைத்திருக்க சுத்தமான தண்ணீரிலும் கழுவ வேண்டும்.

மேலும் படிக்க: கர்ப்பகாலத்தில் பாதாம் உண்பதால் ஏற்படும் 10 நன்மைகள்..!!

மிருதுவான சருமத்தை நீங்கள் பெற...

- தேன் மற்றும் எலுமிச்சையை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொண்டு சருமத்தில் தடவலாம்.

- மஞ்சள் ஒரு சிட்டிகை, எலுமிச்சை ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து சருமத்தில் தடவலாம்.

- அரிசி மாவை உருளைக்கிழங்கு ஜூஸுடன் கலந்து சருமத்தில் தடவலாம்.

- கேரட் ஜூஸ் மற்றும் தேனை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து சருமத்தில் தடவலாம்.

சருமத்திலிருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பை போக்க...

வாழைப்பழ மாஸ்க்:

- லெமன் ஜூஸை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

- அத்துடன் தேனை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள்.

- மேலும் உரித்த வாழைப்பழம் (மசித்து)ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள்.

- இப்போது அந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தேய்த்து சிறிது நேரம் வைத்திருங்கள்.

- பின்னர் மிதமான சுடு நீரில் சருமத்தை கழுவி துடைத்திடுங்கள்.

உருளை மற்றும் லெமன்:

- லெமன் ஜூஸ் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

- அத்துடன் உருளைக்கிழங்கு ஜூஸ் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள்.

- அந்த கலவையை சுத்தமான முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்களுக்கு வைத்திருங்கள்.

- பின்னர் சுத்தமான நீரில் முகத்தை கழுவுங்கள்.

தயிர் மற்றும் எலுமிச்சை:

- ஒரு டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்துக்கொள்ளுங்கள்.

- அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை மற்றும் பருப்பை எடுத்துக்கொள்ளுங்கள்.

- அந்த மூன்றையும் கலந்து முகத்தில் தடவுங்கள்.

- நன்றாக காய்ந்த பிறகு முகத்தை கழுவுங்கள்.

குளியல் பேசியல்:

கர்ப்பிணி பெண்கள் குளிக்கும்போது பயன்படுத்தும் பொருள்களில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். நீங்கள் கூடுமானவரை செயற்கை சோப் மற்றும் ஷாம்புக்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இதனால் உங்களுக்கும், உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

என்ன செய்ய வேண்டும்?

பச்சை கிராம் மாவு - 6 கப்

பருப்பு அல்லது பச்சை பயிறு மாவு - 3 கப்

அரிசி மாவு - 1 கப்

மஞ்சள் - 1 டீஸ்பூன்

இவற்றை நன்றாக கலந்துக்கொண்டு ஒரு குவளையில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த கலவையை கொண்டு தினமும் சருமத்தை கழுவிவர சருமம் பளபளப்புடன் மிருதுவாக இருக்கும்.

மேலும் படிக்க: முகத்தை பளபளப்பாக்க பழங்களை கொண்டு செய்யும் பேசியல்

ஆயில் மசாஜ் செய்வது எப்படி?

உங்களுடைய கை, கால், மற்றும் முகத்தை இரவில் எள் எண்ணெய்/ ஆலிவ் ஏதேனும் ஒன்றை கொண்டு மசாஜ் செய்யலாம். இந்த எண்ணெய்யை உங்கள் உடலில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும். இதனால் சருமமானது இரவு முழுக்க சரியான செயல்பாட்டுடன் காணப்பட, பளபளப்பையும் தருகிறது.

இரவில் என்ன செய்ய வேண்டும்?

வைட்டமின் - E அடங்கிய எண்ணெய் அல்லது மாத்திரைகள் கொலெஜன் உற்பத்திக்கு உதவ, சருமத்தையும் இளமையாக வைத்துக்கொள்கிறது. உங்கள் வீட்டில் வைட்டமின் - E மாத்திரை இல்லை என்றால், ஐந்து சொட்டு பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

- ஒரு டேபிள் ஸ்பூன் அலோவேரா எடுத்துக்கொள்ளுங்கள்.
- அத்துடன் வைட்டமின் - E மாத்திரை அல்லது ஐந்து சொட்டு பாதாம் எண்ணெய்யை எடுத்துக்கொள்ளுங்கள்.


இந்த கலவையை சிறு குவளையில் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். இரவில் தூங்க செல்லும்முன் இதனை முகம், கழுத்து, கை மற்றும் காலில் தடவிக்கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையில் நாம் பார்த்தால், முகம் பளபளப்புடன் காணக்கூடும். உங்கள் முகத்தை தண்ணீர் கொண்டு கழுவி துடைத்திடுங்கள்.

கர்ப்பமாக இருக்கும் போது இப்படி எல்லாவற்றையும் இயற்கை முறையில் பயன்படுத்த எந்த கவலையும் ஒருபோதும் ஏற்படுவதில்லை. ஆனால், நீங்கள் எந்த ஒரு முயற்சியை எடுக்க முயன்றாலும் கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரை பெறுவது மிகவும் நல்லது. உங்கள் குழந்தைக்கு இயற்கை என்னவென்று கருவிலிருக்கும் போதே காட்டுவதன் மூலம் நாளை அவர்களும் சத்துள்ள உணவை உண்டு ஆரோக்கியமாக வளர்வார்கள். நீங்கள் எடுத்துக்கொள்ளும் நொறுக்குத்தீனிகள் மணமானது கருவிலிருக்கும் குழந்தையின் உணர்வை தொடுமெனில் அதை மட்டுமே பிறந்த பிறகும் அவர்கள் உண்ண விரும்புவர். எனவே சத்துள்ள உணவை சாப்பிட்டு, சளைத்தவன் அல்ல என் குழந்தை என்பதை நீங்களும் நிரூபிக்கலாமே...

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon