Link copied!
Sign in / Sign up
4
Shares

அன்னையின் பாசத்தை உணர்த்தும் மிகச்சிறந்த 3 தமிழ் படங்கள்!

மகளிர் தினமான இந்நன்னாளில், அன்னையரின் பாசம் குறித்து நாம் எவ்வளவு தான் பேசினாலும், நம் அனைத்து உணர்வுகளையும், சில படங்கள் ஓரிரு மணி நேரத்திலேயே, சில பாடல்கள் ஓரிரு நிமிடங்களிலேயே வெளிப்படுத்தி விடுகின்றன. இந்த வகையில், அன்னையின் பாசத்தை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டும் சில அருமையான தமிழ் படங்கள் குறித்து இந்த பதிப்பில் படித்தறியலாம்.

1. M.குமரன்- சன் ஆப் மகாலக்ஷ்மி 

இந்த படத்தில் ஒரு தாய் தன்னந்தனியாய், ஒரு குழந்தையை வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்றும், அப்படி வளர்க்கும் குழந்தையை நல்ல ஒரு குழந்தையாக வளர்ப்பது எவ்வளவு முக்கியான விஷயம் என்றும் மிகத்தெளிவாக காட்டப்பட்டிருக்கும். மேலும் அன்னையின் வளர்ப்பில், வளர்ந்த ஒரு நல்ல குழந்தை வாழ்நாளில் எவ்வாறு சாதித்து, நல்ல பெயரை அடைந்து அன்னையை பெருமை படுத்துகிறது என்றும் மிக அழகாக காட்டியிருப்பர். 

2. ராம்!

இந்த படத்திலும், தாயின் அன்பால் வளர்க்கப்பட்ட பையன், அதுவும் மன வளர்ச்சி குன்றிய - அது மாதிரியாக நினைத்து சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு மகன் தன் அன்னையை கொன்றவனை கண்டுபிடித்து தண்டிக்க துடிக்கும், அன்பு கலந்த தவிப்பு நிறைந்த படம் இது.

3. பிச்சைக்காரன்..!

இந்த படத்தில் தன்னந்தனியாய் வளர்த்தெடுத்த அன்னையின் உடல் நலனை சரி செய்ய, அந்த தாயின் கோடீஸ்வர மகன் ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கையை வாழ்ந்து, வித்தியாசமான விரதம் இருந்து, தன் தாயின் உயிரைக் காப்பாற்ற முயன்று வாழ்வான்; அந்த மகனின் தாய்ப்பாசம் மிகவும் உருக்கமாக காட்டப்பட்டிருக்கும்.

இந்த 3 படங்களிலும் அன்னை மற்றும் குழந்தைக்கான பசப்பிணைப்பை மிகவும் அழகாக காட்டியிருப்பர். இந்த மாதிரியான பாசம் படத்தில் காட்டப்பட்டாலும், அதை நம் தினசரி வாழ்வில் கடைபிடித்து, நம்மை பெற்று இந்த உலகிற்கு கொண்டு வந்த அன்னையை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon