Link copied!
Sign in / Sign up
0
Shares

அனிருத் கல்யாண வயசு பாடல் அடித்த ஹிட்டில் அறியாத யோகி பாபு வாழ்க்கை வெளிவந்தது

தமிழ் சினிமாவில் காமெடி எனும் வார்த்தைக்கு முன்னுதாரணமாக விளங்கியவர்கள் தான் சுருளி ராஜன், வடிவேலு, நாகேஷ், விவேக், சந்தானம், பரோட்டா சூரி போன்றவர்கள். ஆனால் கடைசியாக வந்து சேர்ந்தவர் தான் நம்ம யோகி பாபு. ஆரம்பத்தில் பெரிய அளவில் இவர் நடித்த திரைப்படங்கள் பேசப்படவில்லை என்றாலும்., யாமிருக்க பயமேன் திரைப்படத்தின் 'பன்னி மூஞ்சி வாயன்' கேரக்டர் மூலம் பட்டையை கிளப்ப களம் இறங்கினார்.   

காமெடி என்றால் மற்றவர்கள் மனதை புண்படுத்தி சிரிப்பை வரவழைக்க செய்வது என்ற டிரெண்டை அன்று வடிவேல் மாற்றி அடி வாங்கினார். இன்றோ யோகிபாபு அதை சிரிப்பு கலந்து நமக்கு தந்து வருகிறார். ஒரு சிலர் அழகு தான் எல்லாவற்றிக்கும் மூலக்காரணம் என நினைக்கும் உலகில், இவர் தன் முகத்தோற்றத்தையே பிளஸ்ஸாக பார்த்ததே இவருடைய வெற்றிக்கு காரணமென நாம் கூறலாம். அந்த வகையில் யோகி பாபு, அழகு மட்டுமே முக்கியமல்ல என்பதற்கு ஆக சிறந்த உதாரணம் என கூறலாம்.

எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதை கூச்சம் சுபாவமின்றி நடித்து தருவதில் யோகிபாபுவை மிஞ்ச யாருமில்லை. அதற்கு சிறந்த உதாரணம், டிமான்டி காலனியில் அவர் ஒரு காட்சியே வந்தபோதும் வாங்கிய கைத்தட்டலை சொல்லலாம். அதன்பிறகு இவர் நடித்த காக்கா முட்டை திரைப்படத்தின், 'எனக்கே விபூதி அடிக்க பார்த்தியல்ல' என்ற வசனம் இன்றும் மீமாக வலம் வருவது என்னவோ உண்மை தான். இதெல்லாம் உங்களுக்கெல்லாம் தெரிந்தாலும், தெரியாத ஒரு விஷயத்த இப்போ நாம பார்ப்போமா!

யோகிபாபு பிறந்த ஊர் ஆரணி. இவர் சின்னத்திரையில் முதன்முதலில் காலடி பதித்தது ராம் பாலா இயக்கத்தில் தான். யார் இந்த ராம் பாலா? இவர் தான் லொல்லு சபா எனும் காமெடி பட்டாசு திரைத்துறையில் வெடிக்க காரணமானவர். அத்துடன் யோகி பாபு, அவருடைய சீரியலின் துணை இயக்குனராக பணியாற்றி இரண்டு வருடங்களாக எழுத்திலும் ஈடுபட்டார்.

அதன்பின்னர் யோகிபாபு முதல் முறையாக அமீரின் இயக்கத்தில் 2009இல் வெளிவந்த 'யோகி' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா! ஒரு காமெடியன் பெயரே எதார்த்தமாக திரைப்படத்துக்கு வைக்கப்பட்டிருக்கிறது. எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் சொல்லுங்கள். அதன்பின்னர் 2013 இல் வெளிவந்த பட்டத்து யானை திரைப்படத்தில் முழு நீள காமெடியனாக நடித்தார். யோகிபாபு தமிழில் மட்டும் பிரபலம் இல்லைங்க. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடிப்பில் வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன்பிறகு யாமிருக்க பயமேன் திரைப்படம் பெரும் ஹிட்டடிக்க அதற்கு காரணமாகவும் தனித்து பேசப்பட்டது பன்னி மூஞ்சி வாயன் கேரக்டர். அதன்பிறகு வில் - அம்பு, கட்டப்பாவ காணோம், வீர சிவாஜி, வேலாயுதம், அரண்மனை, ஜாக்சன் துரை, காக்கா முட்டை, என் ஆளோட செருப்பை காணோம், முத்தின கத்திரிக்கா, மெர்சல், காக்கி சட்டை, வேதாளம், எனக்கு இன்னொரு பேரு இருக்கு, இந்தியா - பாகிஸ்தான், ஆண்டவன் கட்டளை என குறைந்த காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை இன்று பிடித்துவிட்டார்.

இவற்றுள் இவர் நடிப்பில் வெளிவந்த கலகலப்பு - 2 பட்டையை கிளப்பியது. ஏற்கனவே பெண் புரோக்கராக கலகலப்பு - 1இல் நடித்து அனைவரையும் சிரிப்பால் ஈர்த்தவர் யோகி பாபு. 

சமீபத்தில் இவர் நயன்தாராவுக்கு ஜோடி சேர, திரை உலகமே வாயில் விரலை வைத்திருக்கிறது. ஆம், கோலமாவு கோகிலா திரைப்படத்தின் கல்யாண வயசு பாடல் ஏற்கனவே பல ரெக்கார்டை தொடர்ந்து படைத்துக்கொண்டிருக்க, அனிருத் இசை என்பதை காட்டிலும் யோகிபாபு நடிப்பு அனைவரையும் ஈர்த்திருப்பது ஒரு காரணமாக சொல்லலாம். 

சில நாட்களுக்கு முன்பு சின்ன கலைவாணன் விவேக் கூட ஒரு நிகழ்ச்சியில் யோகிபாபுவின் இந்த வளர்ச்சியை பற்றி அழகாக ஓரிரு வசனங்கள் பேசியிருந்தார். இதைப்பற்றி யோகி பாபுவிடம் கேட்டபோது அவர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லையாம். அதுவும் சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், தளபதி, தல கூட நடித்த ஒரு ஹீரோயின் கூட நான் டூயட் பாட போகிறேனா என சந்தோஷத்தில் என்ன செய்வதென அறியாது திகைத்துதான் போனாராம்.

மேலும் அவர் சொல்லும்போது தல - தளபதியுடன் முழு நீள திரைப்படத்தில் நடிக்க ஆசை தான். ஆனால் சிறிய ரோல் தான் கிடைத்தது. ஒரு சில திரைப்படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டும் போனது. இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ஏனென்றால், தளபதி 62 திரைப்படத்தில் அந்த குறை தீர்ந்திருக்கிறது. ஆம், தளபதியுடன் நான் திரைப்படம் முழுவதும் வலம் வரும் ஒரு கேரக்டர் என மிகவும் நெகிழ்ச்சியாக தன் சந்தோஷத்தை யோகி பாபு பதிவு செய்திருக்கிறார்... 

புகைப்பிடித்தல் - மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது

இதுபோல ஈடுபாடுடன் அவமானத்தை கூட வெற்றி படிக்கல்லாக மாற்றி நடிக்கும் வரை தனக்கென ஒரு தனி இடம் என்றுமே உங்களுக்கு உண்டு பன்னி மூஞ்சி வாயரே. உங்கள் உழைப்பு, சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு மாபெரும் எடுத்துக்காட்டு.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon