Link copied!
Sign in / Sign up
22
Shares

அசோகா அல்வா: இதுவரை நீங்கள் சுவைத்திராத அல்வா!

நம்மில் பலபேர் அறியாத, நாம் சுவைக்க தவறிய ஒரு அல்வாவின் உண்மையை பற்றி நாம் இங்கு படித்தறியலாம். இது திருவையாறு ஸ்பெஷல் அல்வா ஆகும். இந்த அல்வா அசோகா அல்வா என்றறியப்படுகிறது; இந்த அல்வா ஒரு வித்தியாசமான சுவையைக் கொண்டது. இதை வீட்டிலேயே செய்வது எப்படி என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..! 

தேவையான பொருட்கள்!

பாசிப்பருப்பு-1 கப்/ சர்க்கரை – 1 1/4 கப்/ கோதுமை மாவு -2 மேஜைக்கரண்டி/ நெய்-3 மேஜைக்கரண்டி/ ஏலக்காய் பொடி -1/4 தேக்கரண்டி

செய்முறை!

பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, 1 கப் தண்ணீர் விட்டு, குழைய வேக வைத்துக் கொள்ளவும்; வேக வைத்த பாசிப்பருப்பை நன்றாக கடைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி நெய் விட்டு, முந்திரியை வறுத்துக் கொள்ளவும்; மிதமான தீயில் வைத்து, வாணலியில் கோதுமை மாவையும் சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.

பின்பு கடைந்து வைத்துள்ள பாசிப்பருப்பை வாணலியில் சேர்த்து, அத்துடன் நெய் மற்றும் சர்க்கரை போன்றவற்றை சேர்த்துக் கிளறவும்; இக்கலவை கெட்டியாக வரும் வரை நன்றாக கிளறவும், இடையே அவ்வப்போது சிறிது நெய் சேர்த்துக் கொண்டால், இது அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க உதவும்; அல்வா திரண்டு வரும் சமயத்தில் மீதமுள்ள வறுத்த முந்திரி, நெய், ஏலக்காய் பொடி இவற்றை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon