Link copied!
Sign in / Sign up
8
Shares

அகரம் பவுண்டேஷன் - அறிந்த நபரும்! அறியாத நெகிழ வைக்கும் உண்மைகளும்!

நடிகர் சூர்யா செப்டம்பர் மாதம் 2006-ம் வருடத்தில் அகரம் பவுண்டேஷனை தொடங்கினார். இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கான முக்கிய காரணம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி பயில தேவையான பண உதவி செய்வதற்காக தான்.

அகரம் பவுண்டேஷன் தனது நோக்கத்தை படிப்பின் மீது மட்டும் செலுத்தாமல் மாணவர்களுக்கு நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் சமூக நலனை கற்றுக் கொடுக்கிறது. இதன் மூலமாக ஒவ்வொரு குழந்தையும் சிறப்பான எதிர்காலத்தை அனுபவிக்கலாம். அகரம் பவுண்டேஷனின் முக்கியமான குறிக்கோளில் ஒன்று திறமையான மற்றும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி வழங்குவது ஆகும். இந்த மாணவர்கள், சமூகத்தின் அடித்தட்டு நிலையில் இருந்தாலும் அவர்களால் சாதிக்க முடியும் என்பதை அகரம் கண்டறிந்தால் அவர்களுக்குத் தேவையான நிதியுதவியை தந்து அவர்களின் மேற்படிப்பை முடிக்க உதவி செய்கிறது.

எனது தந்தை 35 ஆண்டுகளாக மேற்கொண்ட இந்த பணியை நான் விரிவு படுத்தினேன் தவிர நானாக எதுவும் பெரிதாக செய்யவில்லை என்றும் கூறினார்.

நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் பற்றி கூறுகையில் இந்த சமூகத்தில் உள்ள தீய சக்திகளை அப்புறப்படுத்தி அனைவரையும் முன்னேற செய்வது கல்வியால் மட்டுமே முடியும் என்பதை நான் மிகவும் ஆணித்தரமாக நம்புகிறேன். எனவே அகரம் பவுண்டேஷன் மூலம் நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி கொடுப்பதால் அவர்கள் தங்களின் கல்வியை முடிப்பது மட்டுமல்லாமல் ஆற்றல் வாய்ந்த சமூக அக்கறை உள்ள குடிமகனாக உருமாறுகிறார். கல்வியானது ஒரு மனிதனை நாகரிக படுத்துவது மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் வரும் இன்னல்களை சந்திக்கும் சக்தியையும் அவனுக்கு தருகிறது.

கல்வி ஒன்றுதான் சமூக ஏழ்மை நிலை, சாதி மற்றும் மதம் போன்ற பல்வேறு பிரிவினைகளை உடைத்தெறிந்து சமூகத்தை மேம்படுத்தும் சக்தியினை உடையது. எனவே அகரம் பவுண்டேஷன் மூலம் நாங்கள் இன்று கற்பிக்கும் மாணவர்கள் இந்த மாற்றத்தை உருவாக்குவார்கள் என்பதை நான் நம்புகிறேன்.

ஜூன் மாதம் 2007 முதல் முறையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியை தத்தெடுத்து அந்தப் பள்ளியின் நிலைமையை சீர் செய்தனர். மேலும் அந்த பள்ளியில் ஒரு நூலகத்தையும் நிறுவினர். இவ்வாறு சிறிய தொண்டுகளை இந்த நிறுவனம் செய்து வந்தது.

கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சூர்யா “ஹீரோவா ஜீரோவா” என்ற குறும்படத்தை தயாரித்து மே மாதம் 2008 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

அகரம் பவுண்டேஷனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஜூன் மாதம் 2008 ஆம் ஆண்டில் “அகரம் கற்றல் மையம்” என்ற ஒரு இடத்தை தொடங்கி கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை பயிற்சியாக கொடுத்தனர். இந்த பயிற்சியின் மூலமாக பல்வேறு மாணவர்களுக்கு சிறப்பு திறன்களை புகட்டினர். இந்த சேவையை செய்து வருகிறோம் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு நவம்பர் 2008 ஆம் ஆண்டில் அகரம் நிறுவனத்தின் இணையதளம் தொடங்கப்பட்டது.

இதன் பின்னர் ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டில் “வழிகாட்டிகள்” என்ற திட்டத்தை தொடங்கி தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு ஒதுக்குப்புறமான இடங்களில் இருக்கும் மாணவர்களை ஒன்று திரட்டி அவர்களை மேம்படுத்துவதற்காக மிகவும் கடுமையாக உழைத்து செயல்பட்டனர். இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்று மிகப்பெரிய உயரத்தை எட்டினர்.

2010 ஆம் வருடத்தில் விதை என்ற மற்றொரு திட்டத்தை தொடங்கி அகரம் நிறுவனத்தின் முயற்சிகளையும் நோக்கத்தையும் அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கு பல்வேறு பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. திறமையுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் மேற்படிப்பிற்கு அனுப்பும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதே இந்த விதை திட்டம் ஆகும்.

இதன் முதற்கட்டமாக ஜூன் 2010 ஆம் ஆண்டில் 160 மாணவர்களை தமிழ்நாட்டில் உள்ள 35 மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுத்து மேற்படிப்பிற்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு வருடா வருடம் இந்த எண்ணிக்கையானது ஏறிக்கொண்டே போனது. இவ்வாறு பார்த்தோமேயானால் அடுத்த வருடம் அதாவது 2011 ஆம் ஆண்டில் 217 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்லூரி படிப்பை மேற்கொள்வதற்கு உதவிகரமாக இந்த விதை திட்டம் அமைந்தது. 2012ஆம் வருடம் 128 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் கல்வி படிப்பிற்கான உதவித்தொகையை விதை திட்டத்தின் கீழ் வழங்கியது அகரம் பவுண்டேஷன்.

2013ஆம் வருடம் 196 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்லூரி படிப்பிற்கு உதவித்தொகை வழங்கியது. அதுமட்டுமின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் 10 பேர் அவர்களின் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றனர்.

2014ம் வருடம் 225 மாணவர்கள் “விதை” திட்டத்தின் மூலமாக அவர்களின் கல்லூரிப் படிப்பை முடித்து வெற்றிகரமாக பட்டத்தையும் பெற்று உள்ளனர். இவ்வாறு பல 100 மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கிய பெருமை அகரம் பவுண்டேஷனுக்கு உண்டு.

இந்த அகரம் பவுண்டேஷனின் விதை திட்டத்திற்கு பல்வேறு கல்வி நிறுவனங்கள் உதவி புரிந்துள்ளன. சென்னையில் ஆறுபடை வீடு தொழில்நுட்ப நிறுவனம், அப்பல்லோ கல்வி நிறுவனம், அப்பல்லோ மருத்துவமனை & செவிலியர் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், இராஜலக்ஷமி கல்வி நிறுவனங்கள், சாய்ராம் கல்வி குழுமம், சத்யபாமா பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனை ஆகிய நிறுவனங்கள் விதை திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி திருச்சி திண்டுக்கல் கோயம்புத்தூர் மற்றும் வேலூரில் உள்ள சில கல்லூரிகளும் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றனர்.

இந்த விதை திட்டத்தின் முக்கியமான குறிக்கோளில் ஒன்று தமிழகத்தின் மூலை முடுக்கில் உள்ள கிராமங்கள் அனைத்திலிருந்தும் மாணவர்கள் வெளியே வந்து படிக்க வேண்டும் என்பதாகும். அவர்களின் பொருளாதார சூழல் அவர்களின் படிப்பை என்றும் தடுத்து நிறுத்தி விடக் கூடாது என்பதே அகரம் பவுண்டேஷனின் முக்கியமான நோக்கம் ஆகும்.

சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ஹன்சிகா மோத்வானி சூர்யாவின் இந்த முயற்சியை பாராட்டி அவரும் பல்வேறு உதவிகளை செய்தார். அதுமட்டுமின்றி அகரம் பவுண்டேஷனின் இந்த நற்பணியை அவர் மும்பைக்கு கொண்டு செல்வேன் என சூர்யாவிடம் உறுதியளித்தார்.

இந்த அகரம் பவுண்டேஷனின் நற்பணியை தளபதி விஜய்யும் பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், "பள்ளியில் கற்றுக் கொண்டதை மறந்து விட்டாலும் கடைசிவரை கல்வி ஒன்றுதான் நிலைத்திருக்கும்." என அவர் கூறியுள்ளார்.

இவர்கள் மட்டுமின்றி ஜோதிகா கார்த்தி மற்றும் மாதவன் ஆகியோரும் இந்த அகரம் ஃபவுண்டேஷனின் நற்பணியை அனைவரிடமும் தெரியப்படுத்துவோம் என்று கூறியுள்ளனர்.

இவ்வாறு வெறும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி வழங்குவது மட்டுமில்லாமல் சமூகத்தின் கீழ் நிலைகளில் உள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியை “தாய்” திட்டத்தின் மூலம் அகரம் பவுண்டேஷன் வழங்கி வருகிறது. 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது வரை 40 இளைஞர்களை வெற்றிகரமாக தொழிற்சாலைகளுக்கு ஏற்றார் போல் உருவாக்கி உள்ளது. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon